சனி, 26 செப்டம்பர், 2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

                                   Image result for போஸ்

இந்தப் பெயர் இந்தியா சுதந்திரம் வாங்கிய காலத்தில் ஒவ்வொரு இந்தியனாலும் பெருமை பொங்கப் பேசப்பட்ட ஒரு பெயர். போஸ் இந்திய சுதந்திரத்தை வாங்க ஒரு போராட்ட முறையைக் கடைப்பிடித்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதும், பிரிட்டிஷ்காரர்கள் இந்தயாவிற்கு சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது இருந்த இந்தியத் தலைவர்களில் மூத்தவர்கள் காந்தியும் நேருவும் ஆவார்கள். ஆனால் இந்த இருவருக்கும் போஸ் ஒரு பெரும் தலைவராக இந்தியாவிற்குள் வருவதை விரும்பவில்லை. அப்படி வந்திருந்தால் நேருவிற்கும் போஸுக்கும் யார் பெரியவர் என்பதில் ஒரு சிக்கல் உருவாகியிருக்கும்.

போஸ் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் இவர்கள் இருவரும் பெருத்த ஆறுதல் அடைந்திருப்பார்கள். போஸ் இறக்கவில்லை என்று பாமர மக்கள், குறிப்பாக பெங்காளிகள் நம்பினார்கள். இது வழக்கமாக பெரும் தலைவர்கள் மறையும்போது ஏற்படும் உணர்வுதான்.

அவர் இறந்து ஏறக்குறைய 80 வருடங்கள் கழித்து இப்பொழுது எதற்கு இந்தப் பிரச்சினையை தூசி தட்டி உயிர் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. நேரு, காந்தி இவர்களையே நாம் மறந்து வெகு காலம் ஆகிறது. இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழுது யாருக்கோ ஆதாயமிருப்பதால் உயிர்ப்பித்திருக்கிறார்கள். 

10 கருத்துகள்:

  1. இதில் ஏதோ அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு இருக்கிறது ஐயா...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. //உயிர்ப்பித்திருக்கிறார்கள். //

    பிழைச்சிட்டாரா?
    அப்பாடா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க சோ ராமசாமி பிழைச்சிட்டார்.

      --
      Jayakumar

      நீக்கு
    2. அதுங்களா

      சுதந்திரம் வாங்கியதில் பா ஜா ப வின் பங்கு மிகக்குறைவு, ஒன்றும் இல்லை என்றும் சொல்லலாம். காங்கிரஸின் புகழ் முழுதும் அதைச் சார்ந்ததே. செத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸின் அந்த கொஞ்ச நஞ்ச வேரையும் வெட்டிவிட்டால் காங்கிரெஸ் சீக்கிரம் செத்து விடும். அந்த முயற்சியின் ஒன்றாகத்தான் தற்போது போஸ் பிரட்சினையை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

      ஜெயகுமார்

      நீக்கு

  3. //இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழுது யாருக்கோ ஆதாயமிருப்பதால் உயிர்ப்பித்திருக்கிறார்கள். //


    ஐயா! திரு சுபாஷ் சந்திர போஸ் இந்தியா அரசியலில் அறியப்படாதவர் அல்லர். அவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வேண்டப்படாதவர் ஆகிவிட்டார். அதுதான் உண்மை.

    எங்கள் ஊரில் அந்த காலத்தில் தெருக்கூத்தில்

    “காரில் சென்றார் என்றார் சிலபேர் கப்பலில் சென்றார் என்றார்,
    யாரும் அறியாமலேயே ஆகாய விமானத்திலே மறைந்தார்.”

    என்று திரு போஸ் அவர்களைப் பற்றி பாடிய பாடலை நான் ஆரம்பப்பள்ளி சிறுவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். தமிழ் நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பட்டி, தொட்டிகளிலெல்லாம் பிரபலமானவர் அவர்.

    பதிலளிநீக்கு
  4. தேவை இல்லாத செய்தி. இன்றைக்குச் செய்தித்தாளில் லால்பகதூர் சாஸ்திரி குடும்பத்தினரும் கேள்வி எழுப்புகிறார்கள் என்று படித்தேன்

    பதிலளிநீக்கு
  5. மரணத்தில் மர்மம் இருந்திருக்கிறது என்றால் தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமைதானே!

    பதிலளிநீக்கு
  6. லால்பகதூர் சாஸ்திரி மரண மர்மத்தையும் விடுவிக்கக் கோரி அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே நம்மூரிலஅரசியலாக்கப்படுகிறது...போஸ், லால்பகதூர் இருவரின் மரணங்களிலும் மர்மம் இருந்திருக்கிறது என்றால் நம் அரசு அன்றே இதைத் தெளிவு படுத்தியிருக்க வேண்டும்...ஆனால் இன்று இட் இஸ் டூ லேட்...

    பதிலளிநீக்கு