என் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 நவம்பர், 2016

போச்சு, போச்சு, எல்லாமே போச்சுஇப்படி மோடி என் தலைல கல்லைத் தூக்கிப் போடுவார்னு நான் நினைக்கவேயில்லை. என் சொத்தையெல்லாம் காசாக்கி ஆயிரம் ரூபாயாகவும் ஐந்நூறு ரூபாயாகவும் வைத்திருந்தேனே? அதெல்லாம் செல்லாதாமே? கடவுளே நான் இனி என்ன செய்வேன்?

மொத்தம் இருப்பதை எண்ணிப்  பார்த்தேன். ஆயிரம் ரூபாய் நோட்டு ஒண்ணும் ஐந்நாறு ரூபாய் நோட்டுகள் நான்கும் இருக்கின்றன. இவைகளை நான் என்ன செய்வேன்? ஐயோ, கடவுளே என்னை இப்படி சோதிக்கலாமா?