கல்யாணத்தில் கலாட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாணத்தில் கலாட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2011

கல்யாண வீட்டில் மாப்பிள்ளையே பெண்ணைக்....http://1.bp.blogspot.com/_YqS0kNGGefw/TIgR0G5a3tI/AAAAAAAAAQI/WfiQUZVkbdk/s320/images-002.jpg

வெத்திலை புடிக்கப் போனவங்க திரும்பி வந்து பொண்ணு ஊட்ல எல்லோரும் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், மாப்பிள்ளை ஊட்ல இருந்து பொண்ணூட்டுக்குப் போறதுக்கு எல்லாரும் ரெடியாவாங்க. பொண்ணூடு ஒரு ரெண்டு மூணு கல்லு தொலைவிலதான் இருக்குமுங்க. மாட்டு வண்டி, சைக்கிள், நடை இப்படி எதுனாச்சுலும் போய்ச்சேருவாங்க. அங்க மாப்பிள்ளை ஊட்டுக்காரங்க தங்கறதுக்குன்னு ஒரு ஊடு ஏற்பாடு பண்ணி வச்சுருப்பாங்க. அதுக்கு விடுதி ஊடுன்னு பேருங்க. அங்க போயி எல்லாரும் இருப்பாங்க. நேரம் இருக்கற வரைக்கும் தூங்குவாங்க.

முகூர்த்த நேரத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு மின்னாலயே எல்லாத்தையும் எழுப்பி உட்டுருவாங்க. பல் வெளக்கி, தண்ணி வாத்து ரெடியாகணுமில்லீங்களா? எல்லாரும் ரெடியாகரத்துக்குள்ள பொண்ணூட்டிலிருந்து ஆள் வந்துடும். மாப்பிள்ளைப் பையனை மாப்பிள்ளைக்கோலம் பண்ணோணும். பட்டு வேட்டி, பட்டு சட்டை, உருமாலை, பட்டு அங்கவஸ்திரம், ஒரு தங்கச்செயின், இது சட்டைக்கு வெளியில எடுப்பாத்தெரியற மாதிரி இருக்கோணும், ஒரு சாதா பூமாலை, இதுதாங்க மாப்பிள்ளைக்கோலம். பெரிய மாலை கல்யாணப்பந்தல்லதான் போடுவாங்க.இத வந்தர்ரம் அப்படீன்னு சொல்லி பொறப்படறதுக்குள்ள அந்த ஆள் பொண்ணூட்ல சொல்லி அங்கிருந்து பத்து இருவது பேரு எதிர்கொண்டு அழைக்கிறதுக்கு வந்து வழியில நிப்பாங்க. மாப்பிள்ள ஊட்டுக்காரங்க எல்லாரும் புறப்பட்டுப்போய் பொண்ணூட்டுக்காரங்க நிக்கறதுக்கு ஒரு 200 அடி முன்னால நிப்பாங்க. அப்பறம் பாத்துக்குங்க வார்த்தை விளையாட்டு. நீ மொதல்ல வா, இல்ல நீதான் மொதல்ல வரோணும்னுட்டு மாப்பிள்ளை ஊட்டுக்காரங்களும் பொண்ணூட்டுக்காரங்களும் பேசிப்பேசி ரெண்டு ரெண்டு அடியா எடுத்து வச்சு ஒரு அரை மணி நேரம் பண்ணிப்போடுவாங்க.

அப்பறம் மாப்பிள்ளையக் கூப்ப்டுட்டு பக்கத்துல இருக்கற கோயலுக்குப் போவாங்க. அதுக்குள்ள பொண்ணூட்ல, பொண்ணுக்கு பொண்ணெடுக்கிற சீரு செய்வாங்க அது எப்படீன்னு அடுத்த பதிவுல பாக்கலாங்களா?.