கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 மே, 2012

உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ.


என்னை மயக்கிய சிங்காரியே

உன்னைக் காணாவிடில் நான் சோர்கிறேன்

உன்னைக் கண்டாலோ உன்மத்தம் அடைகிறேன்

உன் வயது குறைந்தால் கள்வெறி கொள்கிறேன்

உன் வயது கூடினாலோ என் நெஞ்சம் கனக்கிறது

உன் நிறமோ என் குருதியின் நிறம்

காலைச் செவ்வானம் உன்னில் தெரிகிறது

உன்னைக் காணாவிடில் உறக்கம் போகிறது

நீயே எந்தன் உயிர்

நீயே எந்தன் மூச்சு

உன்னை எனக்களித்த

பின்னூட்டமிட்டோரும்

வருகை புரிந்தோரும்

ஓட்டுப் போட்டோரும்

வாழ்க, வாழ்க, வாழ்கவே


அவள் யார்?


இதோ:


அவள்தான் தமிழ்மணம்தர வரிசைப் பெண்

Tamil Blogs Traffic Ranking


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எப்போ வருவானோ எந்தன் கலி தீர...

இது ஒரு கவிதை ( அப்படீன்னு நெனச்சுத்தான் எழுதியிருக்கிறேன். எனக்கும் கவிதைக்கும் காத தூரம். இருந்தாலும் நேற்று குளிக்கும்போது இந்தக் கவிதை உதயமாயிற்று. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்கில் இதைப் பதிவிடுகிறேன்)


விநாடிகள் நிமிடங்களாக

நிமிடங்கள் மணிகளாக

மணிகள் நாட்களாக

நாட்கள் வாரங்களாக

வாரங்கள் மாதங்களாக

மாதங்கள் வருடங்களாக

வயதோ கூடிக்கோண்டிருக்கிறது

வாழ்வோ குறுகிக்கொண்டிருக்கிறது

ஆனால்

அவனைத்தான் காணோம்

எப்போ வருவானோ

எந்தன் கலி தீர...


வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இடைச்செருகல் - ரத்த பூமி


 ஒண்ணும் புரியல,
ஒரு நாளைக்கு ரத்தம் ஆறா ஓடுது,
அடுத்த நாள் பன்னீரும் ரோஜாவுமா மணக்குது.
நடுவில நம்ம மண்டெய நொழச்சா
காணாம போயிடும்போல இருக்குது.
இதுல எப்படி நானு நீஞ்சி
கரை சேரப்போறேன்னு தெரியல.
முருகனே நீதான் துணை.