கோடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 டிசம்பர், 2014

டாட்டா, பிர்லா மாதிரி பணக்காரராக ஆகவேண்டுமா?டாட்டா பிர்லா மாதிரி நீங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபராக ஆகவேண்டுமா? மேலே உள்ள மாதிரி பங்களாவில் வசிக்கவேண்டுமா? இதோ வெகு சுலபமான வழி.

ரிசர்வ் பேங்க் வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன செக்யூரிடி அம்சங்கள் இருக்கின்றன என்று அவர்க்ள வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் வந்த படங்களை ஒரு காணொளியாகக் கொடுத்துள்ளேன். இந்த செக்யூரிடி அம்சங்கள் இல்லாததால்தான் கள்ள நோட்டுகளை இனம் காண்கிறார்கள்.

அவைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Security Features of Bank Notes:


                     

நன்றாகப் பார்த்துக்கொண்டீர்களா? வழி காட்டி விட்டேன். இனி உங்கள் சமர்த்து.

களி சாப்பிடும்போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.