சமையல் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

அநியாயம், அக்கிரமம், இதைக்கேட்பாரில்லையா?

டிஸ்கி: இந்தப்பதிவு பெண்களுக்கு எதிராகப் போடப்பட்ட ஆணாதிக்கப்பதிவு இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.திரட்டிகளில் பதிவுகளை மேய்வது என்னுடைய ஒரு பொழுது போக்கு. கடந்த சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி? வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி? இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

ஆகவே பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்று அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள். இதில் ஆண்கள் சொல்வதற்கோ, செய்வதற்கோ என்ன இருக்கிறது. ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்.

அடுத்தது. ஏதோ பெண்களுக்கு மட்டும்தான் சமையற்கலையை ஒட்டுமொத்த குத்தகைக்கு விட்டமாதிரி தெரிகிறது. இது மிகவும் தவறான எண்ணம். ஆண்களுக்கும் சமைக்கத் (பெண்களைவிட நன்றாக) தெரியும். பதிவர் ஜெய்லானி போட்ட சமையல் குறிப்பை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன். (பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவு எடுக்கிறேன்).