சின்ன வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்ன வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 டிசம்பர், 2014

ஒரு சின்ன சின்னவீட்டுப் பிரச்சினை

டிஸ்கி - இந்தப் பதிவை பெண்களும் 60 வயதுக்குக் குறைந்தவர்களும் படிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு என் மேல் வீண் பழி சுமத்தக்கூடாது.


தி.தமிழ் இளங்கோபுதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:45:00 முற்பகல் IST  அவர்கள் என் தளத்தில் இட்ட பின்னூட்டம்.

வலைப்பதிவில் தமிழ்மணத்தின் ஓட்டுப்பட்டை நிறுவுவது என்பது ஒரு பெரிய வித்தையாகத்தான் இருக்கிறது. இதற்காக நான் முதன் முதல் தொடங்கிய ஒரு வலைத்தளத்தையே பலி கொடுக்க வேண்டி இருந்தது. பேசாமல் அவர்கள் FACEBOOK இல் உள்ளது போல LIKE முறையைக் கொண்டு வரலாம். எல்லோரும் எளிமையாக ஓட்டளிப்பார்கள்.

என்னுடைய பதில்

எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான வழியை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இரண்டு மூன்று நாட்கள் பொறுக்கவும். அதற்குள் ஒரு சின்ன சின்ன வீட்டுப் பிரச்சினை. முடித்து விட்டு வருகிறேன்.

அந்தச் சின்ன சின்ன வீட்டுப் பிரச்சினை என்னவென்றால்:

தஞ்சாவூர்க்காரர்களுக்கு சின்ன வீடு என்றால் நன்றாகத் தெரியும். அந்த ஊரில் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது இருந்தால்தால் ஊருக்குள் அவருக்கு மரியாதை. அதற்கு மேல் இருந்தால் எண்ணிக்கைக்கு தக்க மாதிரி மதிப்பு கூடும். மற்ற ஊர்க்காரர்களுக்கு சின்ன வீடு என்றால் சிறியதாக ஒரு சொந்த வீடு என்றுதான் புரியும்.

நான் ஏற்கெனவே இரண்டு சின்ன வீடுகள் வைத்திருக்கிறேன். மூன்றாவது  மூன்று நாளைக்கு முன்பாகத் தான் அமைந்தது.

என்னுடைய கம்ப்யூட்டர் மானிட்டர் மண்டையைப் போட்ட விவரம் எல்லோருக்கும் தெரியும். புது மானிட்டர் வாங்கப் போனபோதுதான் இந்த மூன்றாவது சின்ன வீட்டை செட் செய்தேன். 

"கிண்டில் புக் ரீடர்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அமேசான்காரன் அடிக்கடி விளம்பரம் போடுகிறான். எனக்கு அதன் பேரில் ஒரு சபலம். அந்தக் கம்ப்யூட்டர் கடையில் "கிண்டில் ரீடர்" இருக்கான்னு சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்.

அவன் உடனே ஒரு பெட்டியைத் திறந்து இங்கே பாருங்கள், இது அமேசான்- காரன் டெமோவிற்காக அனுப்பியது. இதன் ஒரிஜினல் விலை 21000 ரூபாய். இதை நாங்கள் இப்போது 8999 ரூபாய்க்கு கொடுக்கிறோம். ஏறக்குறைய புதுசேதான் சார், என்று சொல்லி அதனுடைய வீரதீரப் பிரதாபங்களை- யெல்லாம் டெமோ பண்ணிக் காட்டினான்.

எனக்கு அதன் பேரில் "கண்டவுடன் காதல்" என்பார்களே அது போல் காதல் பிறந்து விட்டது. சரி பேஃக் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதை வாங்கி வந்தவுடன் மூன்று நாளாக அதனுடன் xxxxxx* நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் நான் மூன்றாவது சின்னவீடு செட்அப் பண்ணின கதை.

முதல் இரண்டு சின்ன வீடுகளும் என்னவென்று சொல்லாவிட்டால் கதை முற்றுப் பெறாதல்லவா. முதல் சின்ன வீடு - கம்ப்யூட்டர். இரண்டாவது சின்ன வீடு - ஸ்மார்ட் போன். 

ஆகவே புதுப்பெண்டாட்டி மோகம் குறைய இன்னும் இரண்டொரு நாள் ஆகும். அதற்கப்புறம் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையைப் பட்டை கிளப்புகிறேன்.

*  இங்கே உங்களுக்குப் பிடித்த வார்த்தையைப் போட்டுக் கொண்டு படியுங்கள்.