தமிழ்நாட்டு மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாட்டு மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

தமிழர்கள் காதில் நன்றாகப் பூச்சுற்றுகிறார்கள்.                               

இன்றைய பத்திரிகைச் செய்தி:

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் 66 தமிழக மீனவர்கள் விடுதலை.

இந்த மாதிரி செய்திகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதும் இங்குள்ள அரசியல்வாதிகள் அதைப்பற்றி அறிக்கைகள் விடுவதும் சில நாட்கள் கழித்து அவர்கள் விடுதலையாவதும்  தொடர் கதையாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து நடப்பதைப் பார்த்தால் இவை எதேச்சையாக நடந்தவை போல் தெரியவில்லை.

ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது. யார் இந்த நாடகத்திற்கு காட்சிகள் அமைத்து கதை வசனம் எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.