திருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 பிப்ரவரி, 2012

திருட்டு என்றால் என்ன?என்ன, சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் கேள்வியை முன் வைக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? தெரிந்தேதான் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

அடுத்தவர்களின் பொருள்களை அதன் சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வது திருட்டு என்பதை சிறு குழந்தையும் அறியும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் திருட்டுகள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவருடைய பதிவை எடுத்து தங்களுடைய தளத்தில் பிரசுரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது திருட்டா இல்லையா? பொருளைத் திருடினால்தான் திருட்டு, கருத்தை அல்லது எழுத்தை திருடினால் அது திருட்டல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அது பொருளாக இருந்தாலும், கருத்தாக இருந்தாலும், அவைகளினுடைய சொந்தக் காரர்களுடைய அனுமதி இல்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தான் என்பது என் கருத்து. அது என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டாலும் சரியே, அது திருட்டுதான். சொந்தக்காரர் யாரென்று தெரியாத நிலையிலும் ஒரு பொருளை நம்முடைய உபயோகத்துக்காக எடுத்துக் கொண்டால் அதுவும் திருட்டே.

சில நாட்களுக்கு முன் ஒரு துப்புரவுத் தொழிலாளி, ரயில் கம்பார்ட்மென்டில் தான் பார்த்த பணப்பையை அதிகாரிகளிடம் கொடுத்ததை செய்தித் தாள்களில் படித்தோம். அதை அவர் வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்கு சொந்தமில்லாதவற்றை நாம் வைத்துக்கொள்வது திருட்டு என்று அவர் நினைத்ததால்தான் அவர் அதை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதுதான் மனச்சாட்சி.

நான் தினமும் வாக்கிங்க் போகும்போது பலர் (அவர்களும் வாக்கிங்க் செல்பவர்கள்தான்) கையில் ஒரு பையும் கோலும் வைத்துக் கொண்டு மற்றவர்கள் வீடுகளிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பூச்செடிகளிலிருந்து குச்சியால் இழுத்து பூக்களைப் பறித்துச் செல்லுகிறார்கள். இது அவர்கள் வீட்டிலிருக்கும் சாமிக்குப் போடுவதற்காக இருக்கும்.

இதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் கேள்விகள் இரண்டு.
   
   1. இது திருட்டா, அல்லவா. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல் இந்த வேலை நடைபெறுகிறது. அப்போது இதை திருட்டு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

   2.     இந்த மாதிரி பறித்த பூக்களைக் கொண்டு செய்யப்படும் வழிபாட்டினால் கடவுளுக்கு என்ன ப்ரீதி ஏற்படும்?