மனிதனின் இரண்டு
அம்சங்களாக உடலையும் ஆத்மாவையும் சொல்லுகிறோம். உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவில்லாதது.
இப்படித்தான் ஆன்மீக போதகர்கள் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
அணுவின் தன்மையைப்
பற்றிப் படித்தவர்களுக்கு அணுவின் உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தெரியும். கரு,
நியூட்ரான்ஸ், எலெக்ட்ரான்ஸ் ஆகியவை முக்கியமானவை. இதற்குள்ளும் பல நுண்-துகள்கள் இருக்கின்றன
என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுக்கு கடவுள் துகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டியது
என்னவென்றால், இந்த அணுவானது செயலற்றது பொல் தோன்றினாலும், அதற்குள் கண்ணுக்குப் புலனாகாத
செயல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எலெக்ட்ரான்கள் கருவை இடைவிடாது சுற்றிக்கொண்டே
இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்த இயற்கை ரகசியத்தைத்
தான் ஆத்மா என்கிறோம். உயிருள்ள ஜீவராசிகளானாலும், உயிரற்றவைகளானாலும், அவைகளில் ஆத்மா
இருக்குறது என்று நம்புகிறோம்.
ஆகவேதான் அணுக்களை
உயிருள்ளவை என்று நாம் கருதுகிறோம். மனிதன் அணுக்களால் ஆனவன். ஆகவே அவன் ஜீவித்திருந்தாலும்
சரி, இறந்தாலும் சரி, அவனுள் இருக்கும் இருந்த அணுக்கள் உயிருடன்தானே இருக்கும்? ஆகவேதான்
மனிதனின் உடல் அழிந்தாலும் அவனுடைய ஆத்மா அழிவதில்லை என்று சொல்கிறார்கள்.
இதுதான் மெய்ஞானம்.