வெட்டி வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெட்டி வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 டிசம்பர், 2012

500 வது பதிவு


இது என்னுடைய 500 வது பதிவு.

நான் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். நான்கு வருடத்தில் 500 பதிவுகள் போட்டிருக்கிறேன். இதை ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை. பொழுது போக்குவதற்கு வேறு நல்ல உருப்படியான வேலை ஒன்றும் கிடைக்காததினால்  இது நடந்துள்ளது. அவ்வளவுதான்.

ஆனால் சாதனை என்று சொல்லிக் கொள்ளும்படியான சில காரியங்கள் நடந்திருக்கின்றன. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அவை முற்றிலும் என் பதிவைப் படிக்கும் பார்வையாளர்கள் செய்த சாதனை. அதற்கு நான் எந்த விதத்திலும் என் வெற்றி அல்லது என் சாதனை என்று உரிமை கொண்டாட முடியாது.

உங்கள் சாதனைகள்.

பின் தொடர்பவர்கள்  -    459

மொத்தப் பின்னூட்டங்கள்  -         7618

திரட்டிகளின் தரவரிசைகள். (ஸ்கிரீன் ஷாட்)


இந்த தளத்தைப் படிக்கும், பின் தொடரும், பார்வையிடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.