360⁰ போட்டோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
360⁰ போட்டோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தமிழ் நாட்டுக் கோவில்கள்


22-10-12 தேதிய பின் குறிப்பு: எல்லோரும் அறிவதற்காக முன்குறிப்பாக போட்டுள்ளேன். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஒரு மிக நல்ல லிங்க் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளார். தினமலர் தொகுத்த தமிழ்நாட்டுக் கோவில்களின் 360 கோணப் படங்கள். அருமையான செய்தி. எல்லோரும் உபயோகித்து பயன் பெற வேண்டுகிறேன். நண்பர் தனபாலனுக்கு மிக்க நன்றி.பல நாட்களுக்கு முன் நண்பர் GMBalsubramanian அல்லது V.Gopalakrishnan அவர்கள் ஒரு இணையப் பக்கத்தின் லிங்க் அனுப்பியிருந்தார்கள். அந்த லிங்கில் போய்ப் பார்த்தால் மைசூர் மகாராஜா அரண்மனையின் முழு வியூவும் 360 டிகிரி கோணத்தில் தத்ரூபமாகப் பார்க்க முடிந்தது. என் கம்ப்யூட்டர் திருவிளையாடல்களில் அந்த லிங்கைத் தொலைத்து விட்டேன். யாருக்காவது அந்த லிங்க் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவர்களுக்கு நான் ஏழு தலைமுறைக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். (எட்டாவது தலைமுறையில் நன்றி தெரிவிக்க மாட்டேன். ஏனென்றால் அப்போது நான் என்னவாகப் பிறவியெடுப்பேன் என்று தெரியாது.)

இந்த லிங்கை கூகுளில் தேடிக்கொண்டிருந்தபோது இன்னொரு லிங்க் கிடைத்தது. தமிழ்நாட்டிலுள்ள அநேகக் கோவில்களின் 360 டிகிரி வியூ அந்த தளத்தில் இருக்கிறது. இதோ அந்த லிங்க்:

http://view360.in/gallery.html

இந்த 360 டிகிரி தொழில் நுட்பம் ஒரு அருமையான போட்டோகிராபி டெக்னிக். இதனுடைய நுணுக்கங்களை நமது தொழில் நுட்பப் பதிவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். இந்த தொழில் நுட்பத்தில் அநேக இடங்களைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

நமது தமிழ் நாட்டிலுள்ள கோவில்களுக்குப் போக முடியாதவர்கள் அல்லது ஏற்கனவே பார்த்தவர்களும் இந்தப் போட்டோக்களைப் பார்த்தால் பரவசமடைவர். மற்ற மாநிலக் கோவில்களின் லிங்க்கும் இந்த தளத்தில் இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் சென்று பார்த்து பயனடைய வேண்டிக்கொள்கிறேன்.