காலம் ஒன்றுதான் நித்தியமானது. அது மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. யாருக்காகவும் அது நிற்பதில்லை. அது முடிவற்றது. மனித வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களும் காலத்தின் நியதியால்தான் நடக்கிறது. அவனுடைய முடிவும் காலத்தினாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலத்தை வென்றவர் ஒருவருமிலர். அந்தந்த காலங்கள் வரும்போது அந்தந்த விளைவுகளும் வந்து சேரும். இதை யாராலும் தடுக்க முடியாது.
புத்திசாலிக்கு கவலை இல்லை. அவன் துன்பத்தைக் கண்டு கவலைப்படமாட்டான். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்ததேயாகும். இன்பம் வரும்போது அதிக சந்தோஷமும் துன்பம் வரும்போது அதிக துக்கமும் அடைவது அறிவாளியின் குணம் அல்ல. அவன் இரண்டையும் சமமாகவே ஏற்றுக்கொள்வான்.