புதன், 4 ஜனவரி, 2017

ஜோசியம் - பாகம் 1

திரு வைகோ அவர்கள் இன்று ஒரு பதிவை என்னுடைய பார்வைக்கு கொண்டு வந்தார்கள்.

அதனுடைய சுட்டி இதோ: http://sivamgss.blogspot.in/2016/12/blog-post_24.html

அந்தப் பதிவு திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுடையது. அதில் திரு வைகோ அவர்கள் போட்டுள்ள பின்னூட்டங்களை அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்.

நான் இதுநாள் வரை எந்த ஜோசியரிடமும் போனது கிடையாது. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. இதற்குக் காரணம் என் சித்தப்பா ஒருவரே. அவர் ஜோசியம் பார்த்தே வாழ்க்கையைத் தொலைத்தவர். அவருடைய வாழ்க்கையைப் பார்த்துத்தான் இந்த ஜோசியத்தினால் பலன் ஒன்றும் இல்லை என்ற தெளிவு எனக்குள் ஏற்பட்டது.

ஜோசியம் பார்ப்பவர்களை நான் ஒன்றும் விமரிசிக்க மாட்டேன். அது அவர்கள் விருப்பம். அதனால் அவர்கள் பயனடைந்திருந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனாலும் எனக்கு ஜோசியம் தேவையில்லை என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். கற்றவர்களின் மனதை என்னால் மாற்ற முடியாது என்று நான் நன்கறிவேன். ஆனாலும் என் கருத்துகளை நான் இங்கே எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் பதிவு செய்கிறேன்.

இதற்குப்பின்னால் கொடுக்கப்பட்டவை ஒரு மீள் பதிவே.

http://swamysmusings.blogspot.com/2012/09/blog-post_7946.html

ஜோதிடம் வாழ்விற்கு அவசியமா?



கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்தவிஷயமோஅதே மாதிரி ஜோசியமும் ஒவ்வொருவருடையநம்பிக்கையைப் பொருத்த விஷயம்

ஜோசியம் உண்மையாபொய்யா என்பதைவிட ஜோசியம் மனிதவாழ்வில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறதுஏன் மக்களுக்கு ஜோசியம் அவசியப்படுகின்றது என்பதுதான் சிந்திக்கத் தகுந்த பொருள்.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் அனைத்தும் பலவிதமானகதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றனஇவை மனிதனை பல வகையில்பாதிக்கின்றனகண்ணுக்குத் தெரியும் பாதிப்புகள்கண்ணுக்குத் தெரியாதபாதிப்புகள் இரண்டும் இதனுள் அடக்கம்இந்த பாதிப்புகள்ஒவ்வொருவருக்கும்அவரவர்கள் ஜாதகப்பிரகாரம் வேறுபடுகின்றனஎன்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை சித்தாந்தம்.

இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்திவைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களைநம்ப வைத்திருக்கிறார்கள்இந்தக் கருத்தை தீவீரமாக ஆதரிக்கும்சாதாரண மக்கள் பலர் இருக்கிறார்கள்அவர்களிடம் போய்ஜோசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னால்சொன்னவர்களை அடிக்கவருவார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியேபுட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம்ஆனால்எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம்பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள்நம் வாழ்வில்நடந்தவைகள்தான் நமக்கே தெரியுமேஅதை அந்த ஜோசியன் வாயால்கேட்பதில் என்ன பயன்ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதுவும்நம்புவதும்என்னவென்றால் – நம் கடந்த காலத்தை இவ்வளவு துல்லியமாகசொல்பவன்எதிர்காலத்தைப் பற்றி சொல்வதில் பாதிக்குப் பாதியாவதுபலிக்காதா என்ற நம்பிக்கைதான்.

சரிஅவன் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்றேவைத்துக்கொள்வோம்அதனால் என்ன பயன் என்று யோசித்துப்பார்க்கவேண்டும்ஜோசியத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒருஉதாரணம்இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால்கொஞ்சம் வழி நன்றாகத் தெரியுமல்லவாவழியில் உள்ள குண்டுகுழிகளில் விழாமல் தப்பிக்கலாம் அல்லவாஅப்படி எல்லாத்தடங்கல்களையும் ஜோசியம் மூலம் தாண்டி விடலாம் என்று வைத்துக்கொண்டால் ஏன் ஜோசியத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது?

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் -  ஜோசியன் சொன்ன பரிகாரத்தைநான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும்ஜோசியம் பார்க்கும்எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிடமுடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமாதவிரஅனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?

இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான்இருக்கும்மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும்என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள்அவர்களுக்கு ஜோசியம்தேவையில்லைமன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவதுஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்

26 கருத்துகள்:

  1. //இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்//

    Some get old; some get matured; where do we stand? At times ignorance is a bliss.
    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். கடந்த காலத்தை சரியாகச் சொல்பவர்கள், நாடி ஜோசியம் உட்பட, எதிர்காலம் சொல்வதில் சரியாகச் சொல்ல முடியவில்லைதான்! ஜோசியத்தில் நமக்கு சிறப்பாகப் போட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அல்லது எந்த பலன் நன்றாக இருக்கிறதோ அதை நம்முடைய பலனாக நினைக்கலாம்.

    "வகுப்பறை" பக்கம் சென்றிருக்கிறீர்களோ? ஜோசியத்தில், ஜாதக பலன்களில் நிறைய வகுப்பெடுக்கிறார் அந்த வலைப்பூ ஆசிரியர். நீங்கள் இதுவரை அந்தப் பக்கம் சென்று பார்த்ததில்லை என்றால், அதன் சுட்டி கீழே!

    http://classroom2007.blogspot.in/
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்திருக்கிறேன். ஜோதிடத்தில் அபார ஞாபக சக்தியும் பேச்சுத்திறமையும் வேண்டும். எனக்கு இந்த இரண்டும் பூஜ்யம். தெரியாத ஒன்றில் தேவையில்லாமல் எதற்கு நேரத்தை செலவிடவேண்டும்? இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே.
      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.
      விளக்கம்: சிரங்கு பிடித்தவன் கையும் இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பது பழைய பழமொழி. அத்துடன் மௌஸ் பிடித்தவன் கையும் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும்.

      இரண்டு நாட்களுக்கு முன் சும்மா இருக்கமுடியாமல் டெம்ப்ளேட்டை நோண்டினேன். பிறகு பார்த்தால் எல்லா ஓட்டுப்பட்டைகளும் காணாமல் போய்விட்டன. எல்லாவற்றையும் ஒரு மாதிரி கண்டுபிடித்து தேத்தினேன். ஆனா இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் எனக்கு தண்ணி காட்டிக்கொண்டு இருக்கிறது.

      சப்மிட் பண்ணினால் ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பதிவு தமிழ்மணம் திரட்டியில் தெரிகிறது. ஆனால் ஓட்டுப்பட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சனியன் ஒழிகிறது என்று விட்டுவிட்டேன். முன்பொரு முறை இவ்வாறு நடந்து ஒரு பத்து நாள் கழித்து சரியாகியது. இப்ப என்ன பண்ணுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
      நீக்கு
  4. மனம் ஒன்றை நம்பினால் எல்லாமே சுபம் தான்... அதை நம்ப வைக்க பெரும்பாடுபட வேண்டும்... மனம் நம் வசமாகிவிட்டால் விதியை மதி நிச்சயம் வெல்லும்
    பதிலளிநீக்கு

  5. ஒவ்வொரு தலைப்பாகப் பிடித்து உங்கள் எண்ணக்களை பதிவு செய்கிறீர்கள். ரசிக்கிறேன்.
    பதிலளிநீக்கு
  6. Sir, 
    What you have written about astrology is correct. In the last para of your writings, you have mentioned that 'One who has mental determination' will not apt Astrology. Can you explain in detail or brief what type of mental determination, One should have? Do you think it is possible for a family man, who is having all sorts of desires over and above his capacities, to have such decisions. Mental determination is a state of mind of those who are very clear in what they are doing and they just restrict themselves to what's happening as you said. Such people are very few and it cannot be a general one. So, for a common man only Temples, Navagrahas, astrology, etc. are the only remedy. One can believe these things and cannot understand because they are occult faculties. At times the prayers via Astrology are answered. Truth is stranger than Fiction. It's all in the game.
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு, உங்கள் அனுபவத்தில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் கை பட்டால்தான் நோவு தீரும் என்ற நம்பிக்கையுடன் பலர் வந்திருப்பார்கள். உங்களுடைய சில ஆறுதல் வார்த்தைகள் அவர்களுக்கு நோயைத் தாங்கும் சக்தியை கொடுத்திருக்கும்.

      அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஊன்றுகோல் அவ்வப்போது தேவைப்படும். அது ஆண்டவனாக இருக்கலாம், மத குருவாக இருக்கலாம், குடும்ப வைத்தியராக இருக்கலாம், ஜோதிடராக இருக்கலாம், அல்லது வீட்டுப் பெரியவராக இருக்கலாம். இத்தகைய ஆறுதல் தேடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 

      எந்த ஊன்றுகோலும் தேவையில்லை என்று இருப்பவர்கள் அரிது. ஆனால் எதிலும் அளவோடு இருக்கவேண்டியது அவசியம். தமிழ் நாட்டில் பல திருமணங்கள் ஜோதிடர்களின் பலவித கணிப்புகளினால் தடைப்பட்டுக் கிடக்கின்றன. பல இளைஞர்கள் மத குருமார்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்களெல்லாம் விழிப்படைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, டாக்டர்.
      நீக்கு
  7. ''..மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள். அவர்களுக்கு ஜோசியம் தேவையில்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்...''
    என(ம)து நிலை இது தான். உண்மையும் கூட. பலர் விழிப்புணர்வு பெறட்டும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம். 
    பதிலளிநீக்கு
  8. \\கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயமோ\\ இங்கதான் கொஞ்சம் திருத்தம் தேவைப்படுது!! [வந்துட்டான்யா..........வந்துட்டான்............!! ]. உண்மைகளில் இரண்டு விதம் இருக்கு, 1.Relative truth [ஆளாளுக்கு மாறும்], 2. Absolute truth. [ஆளைப் பொறுத்து மாறாது]. உதாரணத்துக்கு, நமக்கு இட்லி, பொங்கல் பிடிக்கும், வட இந்தியர்களுக்கு சப்பாத்தி பிடிக்கும். சிறந்த உணவு எது? இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்ல முடியாது, இது சாப்பிடுகிறவர்களைப் பொறுத்து மாறும். அதே மாதிரி சிலருக்கு கமலஹாசனைப் பிடிக்கும், சிலருக்கு ரஜினியைப் பிடிக்கும். யார் படம் நல்ல படம்? அது பார்க்கிறவர்களைப் பொறுத்து மாறுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு ரஜினிப் படம்தான் நல்ல படம், அதே போல கமல் ரசிகர்களுக்கும் சொல்லலாம். இந்த மாதிரி ஆளாளுக்கு மாறும் விஷயங்களை Relative truth எனப்படும். ஆனால், சில உண்மைகள் ஆளைப் பொறுத்து மாறாது. இப்போ, நெருப்பு சுடும் என்பது, ஆளைப் பொறுத்து மாறாது. நான் நெருப்பு சுடாது என்று நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அதில் கையை வைத்தால் அது என்னைச் சுடும். சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது ஆளைப் பொறுத்து மாறுமா? குருடனாக இருந்தாலும், சூரியன் கிழக்கில் தான் உதிக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை வைத்து இது மாறப் போவதில்லை. இந்த மாதிரி உண்மைகள் Absolute Truth எனப்படும். அதே மாதிரி, ஒரு குழந்தை இருக்கிறது, அதன் தந்தை ஒருத்தர் இருப்பார். அது யார் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்து மாறுமா? ஒருத்தர் X-தான் அதன் தந்தை என்கிறார், இன்னொருத்தர் Y என நினைக்கிறார் என்றால், அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து தந்தை X ஆகவோ Y ஆகவோ இருக்க முடியுமா? முடியாது. அதை பார்ப்பவரின் நம்பிக்கை தீர்மானிக்காது, அதே மாதிரி, கடவுள் தத்துவம் என்பதும் Absolute truth தான் , அது ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயம் அல்ல அதை அவன் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தனித்து நிற்கும் Absolute truth ஆகும். அதாவது, உலகம் படைக்கப் பட்டதா இல்லையா, அதைப் படைத்த கடவுள் இருக்காரா இல்லையா, அப்படி இருந்தால் அவர் யார் என்பதெல்லாம் தனி மனிதனின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அல்ல, அதற்க்கு அப்பாற்பட்டு நிறுக்கும் Absolute truth.
    பதிலளிநீக்கு
  9. \\என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியே புட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம்.\\ அதைக் கூட சொல்வது எப்படி சாத்தியமாகிறது?

    \\ஆனால் எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள்.\\ எங்கள் பாட்டனார் காலத்திலிருந்து எண்கள் காலம் வரை பல கணிப்புகள் துல்லியமாகவே நடந்துவந்திருக்கின்றன. நான் 2 MB மட்டுமே உள்ள ஒரு சோதிட சாப்ட்வேரை நிறு பார்த்தேன், அப்படியே நடக்க ஆரம்பித்ததைப் பார்த்து பயந்து போய் பார்ப்பதை விட்டு விட்டேன். சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகம் என்பதால்!!
    பதிலளிநீக்கு
  10. \\இதற்கு அவர்கள் சொல்லும் பதில் - ஜோசியன் சொன்ன பரிகாரத்தை நான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும். ஜோசியம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிட முடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமா? தவிர அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?\\ ஜோசியன் நடக்கப் போவதைத்தான் சொல்லுவான், பரிகாரம் பண்ணிஎல்லாம் தீர்க்க முடியாது. ஜோதிடம் உண்மைதான், ஆனால் அதை நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது. கஷ்ட காலத்தில் ஏதாவது கோவிலுக்குப் போகச் சொல்லுவான், போய் வந்தால் கொஞ்சம் மன மாற்றமாக மாறுதலாக இருக்கும். மற்றபடி, வீடு கிரகப் பிரவேசம் போன்றவற்றிற்கும், திருமணம் போன்றவற்றிற்கும் நல்ல நேரம் பார்த்து செய்யலாம் தப்பில்லை.
    பதிலளிநீக்கு
  11. \\மனது உறுதியாக இருப்பவர்கள்........... மன உறுதி இல்லாதவர்கள்............\\ இதையே ஒருத்தர் ஜாதகம் தான் சார் தீர்மானிக்குது!!
    பதிலளிநீக்கு
  12. \\இரண்டு நாட்களுக்கு முன் சும்மா இருக்கமுடியாமல் டெம்ப்ளேட்டை நோண்டினேன். பிறகு பார்த்தால் எல்லா ஓட்டுப்பட்டைகளும் காணாமல் போய்விட்டன.\\ அதற்குத்தான் அதை நோண்டும் முன்னர் பேக் அப் எடுத்து வையுங்கள் அப்படின்னு எச்சரிக்கையே போடுறானே சார், எடுத்து வச்சிருந்தா இத்தனை பிடுங்கல்களும் இருந்திருக்காதே!!

    சார், நீங்க இன்றைய பதிவுக்கு சொன்ன சஜஸ்ஷன் படி கடைசியில் சில விளக்கங்களைச் சேர்ந்துள்ளேன், படித்துப் பாருங்கள். நன்றி.
    பதிலளிநீக்கு
  13. என்னவோ போங்க ஜி!

    ஜோசியம்/ கைரேகை அப்படின்னுகிட்டு... எனக்கு ஒண்டுமே விளங்கலை - இந்த ஜோசியம் அப்படின்னா என்ன?
    பதிலளிநீக்கு
  14. ஜெயதேவ் தாஸின் விளக்கங்கள் என்னைப் பொறுத்தவரையில் அருமை. வாழ்த்துக்கள்.
    பதிலளிநீக்கு
  15. ஜோதிடம் குறித்து அருமையான விளக்கம் ஐயா! நான் 70 வீதம் நம்புகிறேன்!!!!
    பதிலளிநீக்கு
  16. இந்த தலைப்பு கிண்டலா? அல்லது உண்மையாகவே ஒண்ணுமே இல்லையா? NO post என்று தான் இருக்கு; சென்று பாருங்கள்.

    நீங்கள கோவை எனபதால், "எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது"...இப்படித்தான் காலியாக இருக்கும் என்று சொல்கிறீர்களா?

    ///எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது///
    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது///

      அது ஒரு வேலீல போற வம்புல மாட்டீட்ட விவகாரமுங்க. இந்த தலைப்பில ஒரு பதிவு இருந்துச்சு. அதில கமென்ட் போடாட்டி நரகத்துக்கு போவீங்கன்னு இருந்துச்சு. சரீன்னு கமென்ட்ட போட்டுட்டு அவங்க கிளிக் பண்ணச்சொன்னபடி பண்ணினா,நம்ம பிளாக்குல ஒரு பதிவு ஏறிடுச்சு. ஒடனே அதை அளிச்சுப்புட்டனுங்க. அப்படியும் கூகுள்காரன் காட்டிக் கொடுத்துப்புட்டானா?

      இதுதான் வம்பை விலை கொடுத்து வாங்கற சமாச்சாரமுங்க. மன்னிச்சுக்கோங்க.
      நீக்கு
  17. அட என்னங்க இதுக்கு போய் மன்னாப்பு எல்லாம் கேட்டுட்டு; இதை வெச்சு சந்துல சாக்குல நான் ஒரு பிட்டு போட்டுக்கிட்டேன்.... 
    எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்தால்..இப்படித்தான் காலியாக இருக்கும்! இதனால், எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எந்த கிரகத்தையும் டைப் பண்ணமுடியாது. அப்படிதான் நினைக்கட்டுமே மக்கள்...
    பதிலளிநீக்கு