என்னுடைய கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையை முடித்துக்கொண்டு நேற்று இரவுதான் கோவை திரும்பினேன். யாத்திரை பற்றி விரிவாக எழுதுமுன் ஒரு முக்கிய செய்தி.
யாத்திரையின்போது இரண்டு பதிவர்களைச் சந்தித்தேன். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் முன்னேயே ஏற்பாடு செய்திருந்தபடி டில்லி ரயில்வே ஸ்டேஷனில் பிளம்ஸ் பழங்களுடன் அன்புடன் வந்து சந்தித்தார்.அவருடன் ஸ்டேஷனிலேயே பிளாட்பாரத்தில் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டோம். வேறு வழியில்லை. கூட்டமோ கூட்டம். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
எதிர்பாராமல் இன்னொரு பதிவரை ஹரித்துவாரில் பார்த்தேன். ஆனால் அவர் என்னைப் பார்க்கவில்லை. அதனால் ஒரு போட்டோ மட்டும் எடுத்தேன். படத்தைப் பார்க்கவும். படத்தை இந்தப்பதிவில் போட இயலவில்லை. அவர் மேல் இருக்கும் மரியாதை காரணமாக தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன்.