இந்தப் பழமொழியை எல்லோரும் அறிவீர்கள். ஈமு கோழியின் நிலை இதற்கு நல்ல உதாரணம்.
சுசி ஈமு பண்ணை திவாலானதும் போலீசும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து அந்தக் கம்பெனியின் சொத்துக்களை முடக்கியதும் தெரியும். ஆனால் ஓடிப்போன இந்தக் கம்பெனி முதலாளி இப்படி ஒரு வில்லங்கத்தை விட்டுச் செல்லுவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மூன்று இடங்களில் சுமார் 6500 ஈமு கோழிகளையும் அந்த ஆள் விட்டுச் சென்றிருக்கிறான். அவைகள் நாலு நாளாக பட்டினி. இதை அப்படியே விட முடியுமா? அவைகளுக்குத் தீனி போட்டுத்தான் ஆகவேண்டும். 6500 கோழிகளுக்கு ஒரு நாளைக்கு 5 டன் தீவனம் வேண்டும். ஒரு டன் 20000 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யவேண்டும்.
பராமரிப்புக்கு அவன் போதுமான ஆட்களை விட்டுச் செல்லவில்லை. அதற்கு குறைந்தது 30 ஆட்களாவது வேண்டும். ஆள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அதற்கு தினம் 15000 ரூபாய் வேண்டும்.
இது போக ஈமு கோழி ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 6500 கோழிக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும்.
இவ்வளவு இருந்தும் பராமரிப்பு சரியில்லாவிட்டால் கோழிகள் இறந்து போக வாய்ப்புகள் உண்டு. அப்படி இறந்து போனால் அவைகளை என்ன செய்வது? கோர்ட்டுக்கு என்ன பதில் சொல்வது?
ஐயா, சுசி முதலாளியே, எங்கிருந்தாலும் உடனே வந்து எங்களை இந்த உடும்பிலிருந்து காப்பற்றும் ஐயா!