செவ்வாய், 16 அக்டோபர், 2012

என் கேள்விக்கு என்ன பதில்?


அன்புள்ள நண்பர்களே,

நமது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இரண்டு சாதாரண சம்பவங்களை இங்கே நான் விவரிக்கிறேன்.  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவைகளுக்கு என்ன முடிவு எடுப்பீர்கள் என்று யோசியுங்கள். (உங்களுக்கு வயது 70 ஐத் தாண்டி விட்டது என்று வைத்துக்கொள்வோம்.)

சம்பவம் ஒன்று:

நீங்கள் உங்கள் ஊரிலிருந்து டில்லிக்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பர் டில்லியிலிருக்கும் தன் மகளுக்கு ஒரு விலை உயர்ந்த நகை ஒன்றைக் கொடுத்தனுப்புகிறார். அவருடைய மகள் நீங்கள் வரும் ரயில் அல்லது விமானத்திற்கே வந்து அந்த நகையை வாங்கிக்கொள்வாள், உங்களுக்கு சிரமம் வைக்கமாட்டாள் என்று உங்கள் நண்பர் உறுதி கூறுகிறார்.

பிரயாணத்தின்போது அந்த நகை வைத்திருந்த பெட்டி காணாமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நிலை என்ன?

சம்பவம் இரண்டு:

நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வந்து உங்களை அவர் வேலையாக ஒரு ஊருக்குப் போவதற்கு உங்களைத் துணைக்கு அழைக்கிறார். நீங்களும் சரியென்று போகிறீர்கள். போகும்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உங்களுக்கு பலமான அடி பட்டு விடுகின்றது. உங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். உங்களை யார் கவனிப்பார்கள்? கண்டிப்பாக உங்கள் குடும்பத்தார்கள்தான். இந்த நிலையில் அவர்கள் என்ன சொல்வார்கள்?

தவிர, உங்கள் வைத்தியச்செலவு சில லட்சங்கள் ஆகிறது. இதை யார் கொடுப்பார்கள்?

இந்தக்கேள்விகளுக்கு எனக்கு விடை சொல்லத் தெரியவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? நன்றாக யோசியுங்கள்.