ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சக பதிவரை வருந்த விடலாமா?


திரு.கோபி அவர்கள் தன்னுடைய பதிவில் இவ்வாறு அங்கலாய்த்துள்ளார். 

http://ramamoorthygopi.blogspot.in/

R கோபி

"இதுபோன்ற புது விஷயங்களை அவ்வப்போது ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வதற்காகவே எனக்கு ஏதேனும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம். ஆனால் பாருங்கள் தமிழ்ச் சூழலில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது:-)"


ஒரு சக பதிவர் இவ்வாறு சொல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சொல்லாமல் செய்வர் பெரியோர். சொல்லிச் செய்வர் இடையோர்,சொல்லியும் செய்யார் கடையோர். நான் பெரியோராக இருக்கமுடியாவிட்டாலும் கடையோனாக இருக்க விரும்பவில்லை. அதற்காக கூகுளில் தேடி அவருக்கு ஒரு விருது கண்டுபிடித்தேன்.


அதை அவருடைய பதிவுலக் சேவையை பாராட்டி இந்த விருதை அவருக்கு அளிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.


இதோ விருது:




இதற்காக எனக்கு அவர் நன்றி சொல்ல வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்கிறேன். (அப்பொழுதுதான் அவர் நன்றி தெரிவிப்பார் என்று நம்புகிறேன்)