ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சக பதிவரை வருந்த விடலாமா?


திரு.கோபி அவர்கள் தன்னுடைய பதிவில் இவ்வாறு அங்கலாய்த்துள்ளார். 

http://ramamoorthygopi.blogspot.in/

R கோபி

"இதுபோன்ற புது விஷயங்களை அவ்வப்போது ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வதற்காகவே எனக்கு ஏதேனும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம். ஆனால் பாருங்கள் தமிழ்ச் சூழலில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது:-)"


ஒரு சக பதிவர் இவ்வாறு சொல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சொல்லாமல் செய்வர் பெரியோர். சொல்லிச் செய்வர் இடையோர்,சொல்லியும் செய்யார் கடையோர். நான் பெரியோராக இருக்கமுடியாவிட்டாலும் கடையோனாக இருக்க விரும்பவில்லை. அதற்காக கூகுளில் தேடி அவருக்கு ஒரு விருது கண்டுபிடித்தேன்.


அதை அவருடைய பதிவுலக் சேவையை பாராட்டி இந்த விருதை அவருக்கு அளிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.


இதோ விருது:




இதற்காக எனக்கு அவர் நன்றி சொல்ல வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்கிறேன். (அப்பொழுதுதான் அவர் நன்றி தெரிவிப்பார் என்று நம்புகிறேன்)

16 கருத்துகள்:

  1. விருது பெற்ற திரு கோபி அவர்கட்கு வாழ்த்துக்கள்! விருதை தந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. Medal of Honour என்ற இடத்தில் உங்க பெயர் இருக்கு... அப்ப விருது உங்களுக்கு தானே?

    டிஸ்கி: கோவிச்சுக்காதீங்க ஐயா! சும்மா தமாசுக்கு... :D :D :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்தவங்க யாருன்னு தெரிய வேண்டாங்களா? அதுக்குத்தான்.

      நீக்கு
  3. விருது பெற்றவருக்கும் வழங்கியவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. விருது கொடுத்தமைக்கு நன்றி! ஒரு வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கும்தான்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. விருது குடுக்க கிளம்பிட்டீங்களா!! எதுக்கும் இந்த பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் ஒரு தடவை படிச்சிடுங்க சார். [நீங்க கூட அங்க வந்திருக்கீங்க!!] விருதை குடுத்துட்டு நாலஞ்சு நாள் தூங்காம அவஸ்தை பட்டவங்க கதையும் உண்டு!! எதையும் தாங்கும் இதயம் நாலைஞ்சு வேணும்னு ஆண்டவன்கிட்டே வேண்டிக்குங்க.

    http://samudrasukhi.blogspot.in/2012/02/56.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் லிங்க்கைப் படித்தேன். எனக்கும் இந்த விருதுகளிலெல்லாம் விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒருவர் கேட்டு அதை நாம் கொடுக்காமலிருந்தால் அது தமிழனுக்கு இழுக்கல்லவா?

      நீக்கு
  7. அவர் உருப்படியாக எழுதுபவர் யார் என்று பட்டியலிட்டு உள்ளார். அதுவா?

    பதிலளிநீக்கு
  8. அன்பின் கந்தசாமி அய்யா - விருது கொடுத்தது நற்செயல் - சக பதிவர் வருந்துவது கண்டு கலங்கி உடனே செயல் பட்டது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. அய்யோயோ மறுபடியும் விருது குடுக்க ஆரமிச்சிடாங்களா, ஒரு ஒன்னு ரெண்டு வருசத்துக்கு முன்னால, நின்னா விருது, பாத்ரூம் போனா விருது,
    சிறப்பா பல்லு விளக்குபவர் விருது, நன்றாக நாய் மேய்ப்பவர் விருது அப்படி இப்படினு மொக்க கிராபிக்ஸ்ல ஒரு படத்த போட்டு விருது குடுத்து
    அட்டூழியம் பண்ணிட்டு இருந்தாங்க. காலைல இவருக்கு அவங்க ஒரு விருது குடுப்பாங்க, சாயந்திரம் இவர் அவங்களுக்கு ஒரு விருது குடுப்பார்,
    ஆனா விருது வாங்கின எல்லாரும் ஆஸ்கார் அவார்டு வாங்கின டைரக்டர் ரேஞ்சிக்கு தன் திறமைய நினைச்சி புல்லரித்து நன்றி சொற்பொழிவு ஆற்றுவாங்க.

    நான் என் பாட்டி வீட்டுக்கு போயிட்டு பத்து வருஷம் கழிச்சி வரேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு "பாட்டி வீட்டுக்குப் போன வீரன்" அப்படீங்கற விருது கொடுக்கிறேன்.

      நீக்கு