மோடி வருகையை முன்னிட்டு 82 மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்கிறது - இன்றைய செய்தி
ஆஹா, என்ன ஒரு கருணை என்று வாய் பிளக்காதீர்கள். இது ஒரு பட்டவர்த்தனமான அரசியல் நாடகம்.
நான் வேலையில் இருந்த போது இப்படிப்பட்ட ஒரு நாடகத்தைப் பார்த்தேன். அப்போதுதான் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் உருவான புதிது. அதன் முதல் துணைவேந்தர் ஒரு சாமர்த்தியசாலி. காரியங்களை நடத்துவதில் கைதேர்ந்தவர்.
அவர் ஒரு முறை 25 நாட்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். திரும்பி வரும் நாளன்று அவர் கோவைக்கு 8 மணிக்கு விமானம் மூலம் திரும்பி வருவார் என்பது பயணத்திட்டம். பொதுவாக யாராக இருந்தாலும் 25 நாட்கள் வெளியூர் சென்று விட்டு ஊருக்கு வந்தால் தன் வீட்டுக்குத்தான் செல்வார்கள்.
ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை. கோவைக்குப் பக்கத்தில் பவானிசாகர் என்னுமிடத்தில் ஒரு விவசாயப் பண்ணை இருக்கிறது. அவர் திரும்பிவரும் அன்று அங்கு ஒரு விவசாயிகள் தின விழா ஏற்பாட் செய்யச்சொல்லி விட்டு வெளியூர் பயணம் மேற்கொண்டார். திரும்பி வந்த அன்று விமான நிலையத்தால் இறங்கியவுடன் காரில் பவானிசாகர் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு மாலையில்தான் கோவை வீட்டிற்கு வந்தார்.
எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். துணைவேந்தருக்கு என்ன ஒரு கடமை உணர்வு? இவ்வளவு நாள் கழித்து திரும்பியதும் வீட்டிற்குக் கூடப் போகாமல் உடனே ஒரு விழாவில் கலந்து கொள்ளுகிறாரே? என்ன ஒரு கடமை உணர்வு? என்ன ஒரு திறமை? என்ன ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு? என்ன, ஆச்சரியம்? என்று எல்லோரும் வாயைப் பிளந்தார்கள். நானும் கூடத்தான்.
பலநாட்கள் கழித்துத் தான் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. இது ஒரு அப்பட்டமான நாடகம். ஒரு நாள் முன்பாகவே பெங்களூர் வந்து இறங்கி அங்கு ஒரு விடுதியில் தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது. அங்கு தனக்கு வேண்டிய ஒருவரை ரகசியமாக வரவழைத்து விழா ஏற்பாடுகளெல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளவேண்டியது. மறுநாள் விமானத்தில் பெங்களூரிலிருந்து கோவை வந்து விழாவிற்கு செல்லவேண்டியது.
ஜனங்கள் அவர் அப்போதுதான் நேரடியாக வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குகிறார் என்று நம்பிக் கொள்வார்கள். எப்படி ஒரு நாடகம்?
ஒரு விஞ்ஞானிக்கே இப்படி ஒரு நாடகம் போட்டுத் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் ஒரு அரசியல்வாதிக்கு என்னென்ன தோன்றும்? மடத் தமிழன்கள் எல்லாம் இலங்கை அரசுக்குத் தமிழர்களின் பேரில் என்ன ஒரு அக்கறை என்று ஆச்சரியப்படமாட்டார்களா?