அனைவருக்கும் வணக்கங்கள்.
நிஜமா நாளைக்குத்தான் பொங்கல். இன்றைக்கு போகி. இது தமிழர் பண்டிகையா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இன்று சங்கராந்திப் பொங்கல் என்று ஒன்று வைப்பார்கள். மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.
நான் சொல்ல வந்தது என்னவென்றால் இன்று கிராமங்களில் ஊருக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்துவார்கள். இது என்னவோ சிறுவர்களின் விளையாட்டு என்று பலர் கருதினாலும் இதில் உள்ள தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.
சொக்கப்பனையில் வேண்டாத பொருட்களை எல்லாம் போட்டு எரிப்பார்கள். இது ஒருவகையில் வீட்டை சுத்தம் செய்யும் காரியம். இதனுடன் கூடவே மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும்.
என்னுடைய ஆசைக் கனவு இது.
சனி, 14 ஜனவரி, 2012
வெள்ளி, 13 ஜனவரி, 2012
பாதி கிணறு தாண்டினால் போதுமா?
சிலரிடம் ஏதாவது
ஒரு பொறுப்பான
வேலையை ஒப்படைத்துவிட்டு சிலநாள்
கழித்து அதைப்
பற்றிக் கேட்டால்
“முக்கால்வாசி முடிஞ்சிட்டுதுங்க”
என்ற பதில்
வரும். இதற்கு
என்ன அர்த்தம்
என்றால் அவர்
அந்த வேலையைப்
பற்றி இதுவரையிலும்
எதுவும் செய்யவில்லை
என்று அர்த்தம்.
அந்த வேலை
நடக்கவேண்டுமென்றால் அதை
நீங்களே செய்து
முடிப்பது உத்தமம்.
ஒரு வேலை
செய்ய ஆரம்பித்தால்
அதை முழுவதும்
செய்து முடிப்பவனே
செயல் வீரன். முக்கால்வாசி
முடிந்தது, முக்காலே
மூணு வீசம்
முடிந்தது என்று
சொல்வதெல்லாம் கவைக்குதவாது.
கிணற்றை தாண்டுவதென்றால்
முழுவதும் தாண்டினால்தான்
கிணறு தாண்டியதாக
அர்த்தம். 99 % தாண்டிவிட்டேன்
என்றாலும் கூட
அதனால் பலன்
இல்லை. கிணற்றுக்குள்தான்
விழவேண்டிவரும். ஆகவே
எந்த வேலை
செய்தாலும் அதை
முழுமையாக செய்து
முடித்தால்தான் விரும்பிய
பலன் கிடைக்கும்.
புதன், 11 ஜனவரி, 2012
குட்டையர்களே அழகானவர்கள்
மனிதர்களில் எப்படியோ,
மரங்களில் குட்டை
மரங்கள் எப்போதும்
கவனத்தை ஈர்க்கும்.
இந்த மாதம் 6 ம்
தேதி முதல் 8 ம்
தேதி வரை
கோயமுத்தூர் வேளாண்மைப்
பல்கலைக் கழக
தாவரவியல் பூங்காவில்
நடைபெற்ற மலர்க்
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த
குட்டை மரங்களைப்
பாருங்கள்.
கொடுமையல்லவா? என்று சிலர் சிந்திக்கக் கூடும்.
அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.
1. பச்சிளம் பாலகர்களை படிப்பு என்கிற போர்வையில் சித்திரவதை
நடக்கிறதல்லவா?
2. வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர்களை
தனிமைப் படுத்துவது கொடுமையல்லவா?
3. ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு வந்த பிறகு
வரதட்சிணை, சீர் வரிசைகளுக்காக கொடுமைப் படுத்தவில்லையா?
4. நம் உணவிற்காக எத்தனை உயிர்களைக் கதறக் கதறக்
கொல்லுகிறோம். அது சித்திரவதையல்லவா?
செடி கொடிகளுக்கு ஒரு உணர்வு மட்டுமே இருக்கிறது. அதனால்தான்
அவைகளை நாம் நம் உணவுக்காக பயிர் செய்து பின்பு அவைகளைக்
கொன்று உண்ணுகிறோம்.
இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது என்று நீங்கள்
கருதினாலும் அதை நான் தவறென்று கொள்ளமாட்டேன். உங்கள்
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
செவ்வாய், 10 ஜனவரி, 2012
அதிசயம் ஆனால் உண்மை
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரூ. 5 1/2 கோடி பரிசு விழுந்ததாகக் கூறி நூதன மோசடி. என்ஜினீயரிங்க் மாணவர் ரூ.5 லட்சம் பறி கொடுத்தார். தினத்தந்தி செய்தி 10-1-2012.
இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு திட்டம். அதன் விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கவும்.
அதிசயம் ஆனால் உண்மை.
தமிழ் நாட்டின் செல்போன் உபயோகிப்பாளர்களே. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை தட்டுகிறது. விட்டு விடாதீர்கள்.
ஒரு தென் ஆப்பிரிக்க வைர சுரங்க அதிபர் தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை தமிழ்நாட்டு செல்போன் உபயோகிப்பாளர்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.
உங்கள் செல்பொன் நம்பரில் இரண்டு தடவை பூஜ்யம் இருக்கிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு 10 லட்சம் பரிசு காத்திருக்கிறது.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் மற்றும் உங்கள் ரேசன் கார்டு காப்பியுடன் வருகிற 11-1-11 ந் தேதி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வெயிட்டிங்க் ஹாலில் காத்திருக்கவும். உங்களை அடையாளம் காண்பதற்காக கருப்புச் சட்டையும் வெள்ளை பேன்ட்டும் போட்டுக்கொண்டு வரவும்.
உங்கள் பரிசுத்தொகை அங்கேயே ரொக்கமாக கொடுக்கப்படும். அதை கொண்டு போகத் தேவையான அளவு பைகளை நீங்களே கொண்டு வரவும். கம்பெனியின் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு 10000 ரூபாய் கொடுக்க வேண்டும்.
முந்துங்கள். அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத் தட்டும். தவறவிடாதீர்கள்.
இந்தக் கம்பெனியில் கூட்டு சேர விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

திங்கள், 9 ஜனவரி, 2012
நிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.
சிறு வயதிலிருந்தே
புது இடங்களுக்கு டூர்
போக எனக்கு
மிகுந்த ஆசை
இருந்து வந்திருக்கிறது.
அப்போது வசதி
இல்லை. பின்பு
படித்து முடித்து
வேலைக்கு சேர்ந்த
பின், பல
இடங்களைப் பார்த்தும்
ஆகிவிட்டது. இருந்தாலும்
ஊர் சுற்றும்
ஆசை இன்னும்
இருக்கிறது. இரண்டு
மாதங்களுக்கு முன்
மனைவியுடன் மலேசியா,
சிங்கப்பூர் போய்
வந்து ஒரு
நாலைந்து பதிவுகள்
தேத்தினேன்.
அப்போது சில
சங்கடங்களை அனுபவித்தேன்.
அந்த அனுபவத்தினால்தான்
இந்த இரண்டு
கனவுகளும் (நிறைவேற
வாய்ப்பு 100 % இல்லாத,
இரண்டு ஆசைகள்) தோன்றின.
ஆசை ஒன்று:
இரண்டு செட்
காவி டிரெஸ். ஒன்று
போட்டுக்கொள்ள. இரண்டாவது
மாற்றிக்கொள்ள. தலையை
மொட்டை அடித்து,
அதற்கு ஒரு
காவித்துணியை பித்துக்குளி
முருகதாஸ் ஸ்டைலில்
கட்டிக் கொள்ளவேண்டியது.
தோளில் ஒரு
ஜோல்னாப்பை. அதற்குள்
மாற்று டிரெஸ். ஒரு
போர்வை. வேறு
பணம் காசு, ஒன்றும்
எடுத்துக்கொள்ளக் கூடாது.
பயணங்கள் முழுவதும்
ஓசி. சாப்பாடும்
ஓசி. திண்ணை
கண்ட இடத்தில்
தூக்கம். தண்ணி
கண்ட இடத்தில்
நித்திய கடமைகள்.
இப்படி ஒரு
ஆறு மாதம்
இந்தியா முழுவதும்
சுற்றி வரவேண்டியது.
இந்த ஆசை
எந்த ஜன்மத்திலாவது
நிறைவேறும் என்று
நம்பிக்கொண்டிருக்கிறேன்.
இரண்டாவது ஆசை:
இதிலும் முதல்
ஆசை போலவே
கையில் காசு, பணம்
ஒன்றும் எடுத்துக்
கொள்ளக்கூடாது. ஒரு
வித்தியாசம். ஒரு
உதவியாளர் எல்லா
வேலைகளையும் பார்த்துக்கொள்ளுவார்.
டூர் ஏற்பாடுகள்
அனைத்தும் பக்காவாக
முதலிலேயே ஏற்பாடு
செய்யப்பட்டு இருக்கும்.
வீட்டு வாசலில்
டாக்சி வந்து
நின்றவுடன் ஐயா
ஏறிக்கொள்வார். ஐயா
ஒரு சாமானையும்
கையில் தொடமாட்டார்.
எல்லாம் உதவியாளர்
பார்த்துக்கொள்வார். ரயிலோ, பிளேனோ,
உதவியாளர் பின்தொடர
பயணம் நடக்கும்.
சேரவேண்டிய இடத்தில்
வாகனவசதி ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கும். ஓட்டலுக்குப்
போய் தினசரி
கடமைகளை முடித்துவிட்டு,
அன்று போடவேண்டிய
டிரஸ்களை உதவியாளர்
எடுத்துக் கொடுக்க,
வெளிவேலைகள் தொடங்கும்.
இப்படியாக பார்க்க
வேண்டிய இடங்களைப்
பார்த்து முடித்து
விட்டு, அடுத்த
ஊர் போகவேண்டியது.
இந்த மாதிரி
டூர் போக
அம்பானி அளவு
சொத்து இருந்தால்
போதும் என்று
கருதுகிறேன். அடுத்த
ஜன்மத்திலாவது அந்த
பாக்கியத்தை அருளுமாறு
பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)