திங்கள், 12 செப்டம்பர், 2011

கல்யாண சீர்கள் – பாகம் 2




இனிமேல்தான் கல்யாண சீர்கள்ஆரம்பிக்கப் போகின்றன.ஒவ்வொண்ணாச் சொல்லீட்டுவரனுங்ககவனமாப் பாத்துக்கோங்க.

1.   சிறப்பு எடுத்தல்.
கொங்கு வேளாளர் சமூக அமைப்பின்சிறப்பு என்னவென்றால் ஒரு கிராமத்தின் அங்கத்தினர்கள்அனைவருக்கும் கல்யாணத்திலும் வேறு காரியங்களிலும்ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு இருக்கும்தினசரிவாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசியப்பொருட்களையும் உற்பத்தி செய்யத் தேவையான அனைத்துக்கலைஞர்களும் கிராமத்திலேயே குடியிருந்தார்கள்அந்தத்தொழில் கலைஞர்கள் அனைவரையும் கல்யாணத்தில்இணைத்திருக்கிறார்கள்.
சிறப்பு எடுத்தல் என்பது கல்யாணத்துக்குப் பிறகு அந்தத்தம்பதியருக்கு குடித்தனம் நடத்தத் தேவையான சட்டிபானைகளை வாங்குவதுசிறியதும் பெரியதுமான சட்டிபானைகளை அந்த ஊர் குயவர் கொண்டுவந்து சபையில்வைப்பார்அதற்கும் பூஜை செய்து பிறகு மங்கிலியப்பெண்கள்எடுத்துக் கொண்டுபோய் பொண்ணு ரூமுக்குள்ள வைப்பார்கள்.எல்ல பூஜைகளும் செய்வது போல்அந்த சட்டி பானைகளுக்குமுன்பாக ஒரு சாணிப்பிள்ளையாரைப் பிடித்து வைத்து நீர்விளாவிதூபதீபகற்பூர ஆர்த்தி காட்டுவதுதான் பூஜை.
மாப்பிள்ளை ஊட்லயும் இதே மாதிரி பண்ணுவாங்க.
நான் இப்போ சொல்ற சீர்களெல்லாம் மாப்பிள்ளை ஊட்லயும்பொண்ணு ஊட்லயும் தனித்தனிய பண்றதுங்கஅப்போஎல்லாம் அவங்கவங்க ஊட்லதான் கல்யாணம் நடக்குமுங்கோ.முகூர்த்தம் மட்டும்தான் பொண்ணு ஊட்ல நடக்குமுங்கஎந்தசீர் நடந்தாலும் வண்ணாத்தி தீப்பந்தம் புடிக்கோணுமுங்க.அந்தக்காலத்தில சீரகள் எல்லாம் பொளுதுஉளுந்ததுக்கப்பறம்தான் நடக்குமுங்கஎல்லாரும்விவசாயிங்களாதோட்டங்காட்டில வேலையெல்லாம்முடிச்சுட்டு பொளுதோடதான் ஊட்டுக்கு வருவாங்க.அதுக்கப்புறம்தான் கல்யாணவேலைகளைப் பாப்பாங்க.அப்பெல்லாம் கரண்ட் லைட் ஏதுங்கபந்தத்தோடவெளிச்சத்துலதான் எல்லா சீர்களையும் செய்யோணும்.அதுக்காகத்தான் பந்தம் முடிச்சுருப்பாங்கஅந்த வளக்கத்தைஉடப்படாதுன்னு இப்ப பகல்ல சீர் நடந்தாலும் பந்தம் புடிக்குறதுவளக்கமாயிட்டதுங்க

2.   சீர்தண்ணி கொண்டு வருதல்.
கல்யாணத்தில் நடக்கும் எல்லா சீர்களுக்கும் சீர்க்கார அம்மாஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவாங்கசாமிகும்பிடறப்போ நீர் விளாவுவது என்பது ஒரு முக்கியமானசடங்குகோயில்களில் பூஜை செய்யும்போது அய்யர் ஒருசெம்புக்கரண்டியில் நீர் எடுத்து பூஜை சாமான்களைச் சுற்றிப்போடுவதைப் பாத்திருப்பீங்கஅதே மாதிரிதான் இங்கயும்புள்ளாரைச்சுத்தி தண்ணி சுத்திப்போடுவாங்கஇதுக்கு சுத்தமானதண்ணி தனியாக் கொண்டு வருவாங்க.
ஒரு அஞ்சு மங்கிலியப் பொம்பளைங்க ஆளுக்கு ஒரு கொடம்எடுத்துக்கிட்டு பளைய காலத்துல கெணத்துக்குப் போவாங்க.இப்பக் கல்யாணம் மண்டபத்துல நடக்கறதாலெமண்டபத்துலஒரு பைப்கிட்டப் போயி அந்தக்கொடங்கள்ல தண்ணி புடுச்சுதலைல சும்மாடு கூட்டி அது மேல வச்சு கொண்டு வந்துசபைல வைப்பாங்கஅப்பறம் அந்தக் கொடங்களுக்கும் சாமிகும்பிட்டுஅந்தக்கொடங்களை எடுத்துட்டுப்போயிபொண்ணுரூமில வச்சிருக்கிற பெரிய பானைல ஊத்தி பூடி வச்சுருவாங்க.இந்தப்பானைல இருந்துதான் சீர்க்காரம்மா ஒவ்வொரு சீருக்கும்சொம்பில தண்ணி எடுத்துட்டு வருமுங்க.

3.   முகூர்த்தக்கால் பிடித்தல்.
அந்தக்காலத்துல கல்யாணத் தன்னிக்குத்தான் ஊட்டுக்குமுன்னால பந்தல் போடுவாங்கஎங்கஎப்பவும் பந்தல்போடறதுன்னாஅதுக்கு ஒரு சடங்குதான் முகூர்த்தக்கால்போடறதுவடகிழக்கு மூலைல மொத பந்தக்காலை நல்லநேரம் பார்த்து பூஜை போட்டு நடவேண்டும்அதற்கப்புறம்தான்பந்தல் போடுவாங்கஆனா இன்னிக்கு கூட்டம் பெருகிப்போச்சு.ஊட்ல கல்யாணத்தை வச்சுக்கறதுக்கு எடம் பத்தல.மண்டபங்கள் பெருகிப்போச்சுஆனாலும் சடங்கு என்கிறமுறையில் இந்த முகூர்த்தக்கால் போடுவது என்கிற சீரைஎல்லோரும் செய்து வருகிறார்கள்.
மூணு கிளை இருக்கிற பாச்சாங்கோல்மாவிலை,வாழைக்கன்றுசெம்மண்சுண்ணாம்புகாய்ச்சாத பசும்பால்,ஒரு முழ நீள ஒரு ஜாண் அகல புது மஞ்சத்துணிநவதான்யம் ஆகிய இவைகள் மற்ற பூஜை சாமான்களுடன் தேவை.பாச்சாங்கோல் நாவிதர் கொண்டு வந்து விடுவார்மண்டபத்தின்வடகிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணி போட்டு வளிச்சு(மெழுகிஅங்க ஒரு சாணிப்பிள்ளையார் புடிச்சு வைக்கோணும்.அந்தப் புள்ளையாருக்கு முன்னாடி பூஜை சாமான்கள் எல்லாம்எடுத்து வைக்கோணும்பூஜை சாமான் லிஸ்ட் மறந்திருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்எதுக்கும் இன்னொரு தடவைசொல்றனுங்கஎண்ணை ஊத்திதிரி போட்டு ரெண்டுகுத்துவிளக்குஒரு தட்டம்சொம்புல தண்ணீருவிபூதி,சந்தனம்குங்குமம்ஊதுபத்திசாம்பிராணிதூபக்கால்கற்பூரம்,வெத்திலைபாக்குநிறைநாழி (ஒரு படில நெறைய நெல்லுநெரப்பி அதுக்குள்ள நூல் சுத்தின ஒரு கதிருகுத்தியுருக்கோணும்), சின்னதா கொளவிக்கல்லுதேங்காய்,ரெண்டு வாழப்பழம்கொடுவாள் இதெல்லாம் வேணுமுங்க.வண்ணான் பந்தம் புடிக்கோணும்சீர் கொறைமையெல்லாம்சொல்றதுக்கு நாசிவன்இவுங்க ரெண்டு பேரு இல்லாம ஒருசீரும் பண்ண முடியாதுங்க.
முகூர்த்தக்கால் புடிக்கிறப்போமொதல்ல குத்து வெளக்குரெண்டையும் ஏத்தோணுமுங்கஇதை மங்கிலியப்பொம்பளைங்கதான் பண்ணோணுமுங்க.  பாச்சாங்கோலைஎடுத்து தண்ணீர்ல நல்லா கழுவீடணுங்கஅப்புறம் அதுக்குசுண்ணாம்பு பூசணும்அப்புறம் மூணு எடத்துல செம்மண்ணுலமூணு விரல்ல காப்பு கட்டணுங்கஅப்புறம் அதுல மேல் பக்கம்(கிளைகள் இருக்கும் பக்கம்அந்த மஞ்சள் துணியிலநவதான்யத்தை வச்சுக்கட்டி அதையும்ஒரு கொத்துமாவிலையையும் கட்டணுமுங்கஇதை புள்ளாருக்கு முன்னாடிவச்சுடணுமுங்கபங்காளிகள்தாயாதிகள் எல்லாத்தையும்கூப்பிட்டுக்கோணும்புள்ளாருக்கு திண்ணீரு பூசி,சந்தனப்பொட்டு வச்சு குங்குமம் வைக்கோணுங்க.பாச்சாங்கோலுக்கும் திண்ணீரு வச்சுசந்தனப்பொட்டு வச்சு,குங்குமம் வைக்கோணுமுங்ககொளவிக் கல்லுக்கும்,நிறைநாழிக்கும் இதேமாதிரி திண்ணீரு வச்சுசந்தனம்,குங்குமம் வைக்கோணுமுங்க.
அப்பறம் தேங்காயை ஒடைச்சு புள்ளாருக்கு முன்னால வச்சு.பக்கத்துல ரண்டு வாழப்பழம் வைக்கோணுமுங்கரண்டுதேங்காய் மூடிக்கு நடுவில நாலு வெத்தலைவெத்தலைக்குநடுவில நாலு பாக்கு வைக்கோணுமுங்கவாழப்பழத்தைநுனியில கிள்ளி வைக்கோணுமுங்கவெத்தலைல காம்பையும்நுனியையும் கிள்ளீடணுமுங்கஇதையெல்லாம் குனுப்பமாகவனிச்சு செய்யோணுமுங்கஇல்லீன்னாபெரியவங்க “என்னசீரு செய்யறான் பாருன்னு” சொல்லிப்போடுவாங்க.
தட்டத்துல நடுவில ஓரளவுக்கு திண்ணீரு போட்டுஅதுலநாலஞ்சு கற்பூரத்தை வச்சு அதெப் பத்தி வைக்கோணுமுங்க.தட்டு ஓரத்துல கொஞ்சம் கற்பூர வில்லைகளைவச்சுருக்கோணுமுங்ககற்பூரம் எரிஞ்சு தீர்ந்திடும்போலஇருந்தா இன்னும் ரெண்டு வில்லைகளை எடுத்து எரிகிறவில்லைகளோட சேர்த்தீடணுமுங்கஅதாவது பூசை முடிந்துஎல்லோரும் கற்பூரத்தீபத்தை கும்பிட்டு முடிகிற வரையில்கற்பூரம் அணையாமல் எரிஞ்சுட்டு இருக்கோணுமுங்கஅப்புறம்சொம்பில இருந்து வலது கையில கொஞ்சம் தண்ணியஎடுத்துட்டுபுள்ளாருஅதுக்கு முன்னாடி இருக்கற சாமானம்எல்லாத்துக்கும் சேத்தி வலது பக்கமா (அதாவது பிரதக்ஷணமா)மூணு தடவை சுத்திப்போடோணுமுங்கஅப்புறம் சாம்பிராணிய,கொளவிக்கல்லநெறநாழிய எல்லாம் இதேமாதிரி மூணு தடவசுத்தோணுமுங்க.  அப்புறம் கற்பூரத்தட்டத்தை இதே மாதிரிமூணு தடவை சுத்தோணுங்கஅப்பறம் திருப்பியும் வலதுகையில தண்ணிய எடுத்து மூணு தடவை சுத்திப்போடணுமுங்கஅப்பறம் அந்த பாச்சாங்கோலை எடுத்து அதைசாம்பிராணிக்கு மேலயும் கற்பூரத்துக்கு மேலயும் மூணுதடவை சுத்தோணுமுங்கஅப்புறமா எல்லாரும் கற்பூரத்தெதொட்டுக்கும்பிட்டுட்டு திண்ணீரு எடுத்து நெத்தீலவச்சுக்கோணுமுங்க.
அப்புறம் அந்தப் பாச்சாங்கோலை அஞ்சு பேரு ஒண்ணாச்சேர்ந்துபுடிச்சு பக்கத்துல இருக்கிற கம்பமோஜன்னலோ அதுல ஒருவாழைக்கம்பத்தையும் சேர்த்திக் கட்டீடணமுங்கஅஞ்சு பேர்லஆம்பிளைகளும் பொம்பளைகளும் சேர்ந்து இருக்கோணுங்க.எல்லோரும் குடும்பஸ்தரா இருக்கோணுமுங்கஇதைத்தான்முகூர்த்தக்கால்னு சொல்றதுங்கஅப்பறம் இதுக்கும்சாம்பிராணிகற்பூரம் காட்டி சாமி கும்புட்டுவிட்டுபால் ஊத்தணுமுங்கபாலை ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அதை முகூர்த்தக்காலின் மேல்புரத்தில் அந்த நவதானிய முடிச்சு நனையுமாறு கொஞ்சமாகமூணு முறை ஊற்ற வேண்டும்.பங்காளிகள்தாயாதிகள்மாமன்மச்சான்மாப்பிள்ளை மொறைக்காரர்கள் எல்லோரும் தவறாமல் இதைச் செய்யவேண்டும்பால் ஊற்றிய நவதானியம் முளைப்பது போல தம்பதியரின் வாழ்வும் சிறக்க வேண்டும் என்பது தாத்பரியம்.
இந்த முகூர்த்தக்கால் சீரை மண்டபமாக இருந்தால்முதலில் மாப்பிள்ளை வீட்டாரும் பிறகு பொண் வீட்டாரும் செய்வார்கள்.வீடாக இருந்தால் அவரவர்கள் சௌகரியம்போல் செய்துகொள்வார்கள்.  (தொடரும்….)
பின் குறிப்புபட்டினிச்சீரில் ஒரு குறிப்பு விட்டுப்போயிற்றுஇந்த வழக்கம் ரொம்பகாலத்துக்கு முன்பே நின்று போய்விட்டபடியால் ஞாபகத்திற்கு வரவில்லை.
அதாவது மாப்பிள்ளைக்கு முகவேலை செய்யறதுன்னு ஒரு சடங்குஅதாவதுஅந்தக்காலத்துல பசங்களுக்கு 19 வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்கஅந்தவயசுல பையன் மாடு மேய்த்துக்கொண்டுதலை முடியை வெட்டாமலும்முகசவரம்செய்யாமலும்தாடி மீசையுடனும் இருப்பான்பட்டினி சீர் செய்வதற்கு முன்பாகநாவிதன் இவனுக்கு முடி திருத்திமுகசவரம் செய்து பார்ப்பதற்கு மாப்பிள்ளை மாதிரிஆக்கிவிடுவான்முகசவரம் செய்யும்போது முதலில் கொஞ்சம் பால் எடுத்து முகத்தில்தடவி விட்டு பிறகுதான் சவரம் செய்வான்அநேகமாக இவன் முகசவரம் செய்வதுஇதுதான் முதல் தடவையாக இருக்கும்நாவிதனுக்கு இதற்காக தனி சன்மானம்உண்டு

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அதிக ஹிட்ஸ், ஓட்டுகள், பின்னூட்டங்கள் வேண்டுமா, இங்க வாங்கோ


இவங்க ரொம்ப நல்லா நடிப்பாங்க

என்னுடைய பதிவர்களுக்கு பத்து குறிப்புகள் என்ற பதிவிற்கு, பதிவுலக வரலாறு காணாத அளவில் அன்பும் ஆதரவும் கொட்டிக் கொடுத்த அனைவரது பாதார விந்தங்களுக்கும் அநேகம் கோடி நமஸ்காரங்கள். (இது எப்படி இருக்கு!)

இந்தப் பதிவில் எழுதிய குறிப்புகள் போதாதென்று சிலபல பதிவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தபடியால் அந்தக் குறையை நிவர்த்திக்கும் பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன். இந்த உலகத்தில எப்பொழுதும் நல்லதுக்கு காலமில்லைன்னு பெரியவங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மை.
குறை தெரிவித்ததில் ஒரு சேம்பிள்:
//JOTHIG ஜோதிஜி said...
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது) சொல்லிக்கொடுக்கோணும்//

சரீங்க, நீங்க சொல்றதுனால அதையும் போட்டுடறனுங்க. அதை ஏன் பாக்கி வைக்கோணும்? முட்ட நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதுக்கு?

என்ன, ரொம்பப் பேருக்கு உடம்பெரியும். எரியட்டுமே, நமக்கென்ன? அப்புறம் என்ன, நெறய, மைனஸ் ஓட்டு விழும். விழட்டுமே! நம்ம லெவலுக்கு பிளஸ், மைனஸ் எல்லாம் ஒண்ணுதானுங்களே?

அப்புறம் நான் வாத்தியாருங்க, வகுப்புல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் கிளாஸ் எடுப்பேன். ட்யூஷன் கிளாஸ் எல்லாம் வைக்கறது கிடையாது.

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ. இப்ப பாடத்தை ஒழுங்கா கவனியுங்கோ.

1.   உங்கள் பதிவிற்கு, உலகத்தில் இதுவரை யாரும் வைக்காத, பெயர் வைக்கவேண்டும். முடிசூடா மொக்கை மன்னன், கும்மாலக்கிடி கும்மா, சுளுக்கு சுந்தரி, இப்படி நல்லதா ஒரு தலைப்பு தேர்ந்தெடுங்கள். அப்புறம் பதிவருக்கு ஒரு முகமூடி பெயர் வேண்டும். தெருநாய், குப்பைவண்டி, தெருப்பொறுக்கி, ரெட்டைவால் குரங்கு, இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்ளுங்கள். உண்மைப் பெயருடன் போட்டோவையும் பதிவில் போடும் தவறை எக்காலத்திலும் செய்யாதீர்கள். அது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும். பிளாக்கில் ஈமெயில் விவரத்தைக் கொடுக்காதீர்கள். அது நிச்சயமாக வீட்டுக்கு ஆட்டோவை வரவழைக்கும்.

2.   ஒரு அரை டஜன் சகாக்களை தயார் செய்யுங்கள். எல்லோரும் கம்ப்யூட்டரே கதி என்று இருப்பவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு அரை டஜன் email ID தயார் செய்யவேண்டும். ஆக மொத்தம் 36 email ID தயார். இப்போ நீங்கள் பதிவு இடுவதற்கு தகுதி அடைந்து விட்டீர்கள்.

3.   பதிவின் தலைப்பு யாரும் கனவில் கூட நினைத்திராதபடி இருக்கவேண்டும். (உ-ம்) காதல் கன்னியுடன் இரவில் ஜாலி…… தலைப்பு, பார்த்தவுடன் பசங்களை அப்படியே சுண்டி இழுக்கவேண்டும். இதில் எந்த தவறும் கிடையாது. ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதிரி தலைப்பு வைத்துத்தான் வாசகர்களை தன் பதிவின் பக்கம் இழுத்தார்.

4.   பதிவில் நடிகைகளின் நல்ல (?) போட்டோக்கள் நாலைந்து கட்டாயம் போடவேண்டும். பதிவின் மேட்டர் எப்படியிருந்தாலும் சரி. இதில் எந்தத் தவறும் கிடையாது. அழகை ஆராதிப்பதில் என்ன தவறு வந்து விடும்?  

இந்த மாதிரி பதிவுகளுக்குத்தான் மொக்கைப் பதிவுகள் என்ற பெயர். இந்தப் பதிவர்களுக்கு “மொக்கைப் பதிவர்கள்” என்ற அடை மொழி உண்டு. இந்தப் பெயர் வாங்குவது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை இந்தப் பட்டத்தை வாங்கிவிட்டால் ஆயுளுக்கும் உங்களை விடாது.

5.   பதிவு போட்டவுடன் ரன்னிங்க் ரேசில் சொல்வார்களே, அந்த மாதிரி  On your marks, get set, ready, start என்று சொல்ல ஒரு சங்கேத வார்த்தையை முதலிலேயே நண்பர்களுடன் பேசி வைத்துக்கொள்ளுங்கள். பதிவு போட்டவுடன் இந்த சங்கேத வார்த்தையை உங்கள் நண்பர்களுக்கு மெயில் செய்து விடுங்கள். பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்தான் போடவேண்டும்.

6.   திட்டம் என்னவென்றால் இந்த சங்கேத வார்த்தை கிடைத்தவுடன் உங்கள் நண்பர்களெல்லாம் உங்கள் பதிவுக்கு வந்து ஒரு நிமிஷத்துக்கு ஒன்று என்ற ரேட்டில் அவர்களுடைய ஆறு ID யிலிருந்தும் சகட்டு மேனிக்கு பின்னூட்டங்கள் போடவேண்டியது. பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை. நீங்களும் இரவு முழுவதும் தூங்காமல் வந்த பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விடிவதற்குள் எப்படியும் ஆயிரம் பின்னூட்டங்கள் தேத்தி விடவேண்டும்.

7.   விடிந்து ஆணி பிடுங்கப் போகும் இடத்தில் நண்பர்கள் எல்லாம் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுக்குப் போய் ஒவ்வொரு ஐ.டி.யிலும் ஹிட்ஸ் கொடுத்து விட்டு, ஓட்டும் போடவேண்டியது.

8.   ஒரு கம்ப்யூட்டரிலிருந்து ஒரு திரட்டியில் ஒரு முறைதான் ஓட்டுப் போட முடியும் என்பது பதிவுலகின் துர்ப்பாக்கியம். ஆகவே எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே அதில் புகுந்து ஒரு ஓட்டைப் போட்டுவிடவேண்டும்.

9.   யாராவது ஒரு பதிவர், குறிப்பாக பெண் பதிவர்கள், ஒரு சின்ன விஷயத்தை யதார்த்தமாக எழுதியிருந்தாலும், அதில் நண்பர்கள் எல்லோரும் படையெடுத்து அந்த மேட்டரை ஊதி ஊதி பெரிசாக்கி, பூதாகாரமாகப் பண்ணி, அந்தப் பதிவர் ஊரை விட்டே ஓடும்படியாகச் செய்யவேண்டும்.

10. பிரபலமான பதிவர்களின் பதிவிற்குச் சென்று அவர்களை உசுப்பேற்றி அவர்கள் ஏமாந்து சொல்லும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு கும்மியடிக்கவேண்டும்.

கைவசம் இன்னும் நிறைய உத்திகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். இவைகளைக் கடைப்பிடித்து உங்கள் தளத்தை உலகப் பிரசித்தி பெற்ற தளமாக மாற்ற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாத்தியார் பேரைக் கெடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

டிஸ்கி: இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் எந்தக் குறிப்பும், யாரையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி யாராவது நினைத்தால் பொது நலம் கருதி அதை மறந்து விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

       
            இவங்க பெங்கால்ல ரொம்ப பிரபல பாடகி.




புதன், 7 செப்டம்பர், 2011

பதிவர்களுக்கு பத்து குறிப்புகள்


பதிவுலகத்தில் எழுதும் அனைவரும் பதிவர்களே. பதிவுலகத்தின் நெளிவு சுளிவுகளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் அல்லது அவர்களின் பதிவுலகப் பயணத்தில் அறிந்து கொள்வார்கள். ஆகவே பதிவர்களுக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை இல்லை. தேவையும் இல்லை. ஆனாலும் நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் என்னவென்றால் நான் கூறப் போகும் குறிப்புகள் நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்தவை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

1.   பதிவுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவை சீக்கிரம் தரவிறங்கும். பார்வையாளர்களுக்கு பதிவுகளுக்காக அதிக நேரம் காத்திருக்க பொறுமை இருக்காது. வேறு தளத்திற்கு சென்று விடுவார்கள்.

2.   பதிவுகளின் எழுத்துக்கள் பெரிதாகவும், வரிகளுக்கிடையில் உள்ள இடைவெளி போதுமானதாகவும் இருக்கட்டும். இதை மிக எளிதாக செயல்படுத்தலாம். Edit Template  சென்று அதில் Line height 1.2 என்று இருப்பதை 2.0 என்று மாற்றவும். அதே போல்  Font size 110%  என்று இருப்பதை 120 அல்லது 130 என்று மாற்றவும். தவிர வெள்ளை பின்புலத்தில் கருப்பு எழுத்துகள்தான் படிப்பதற்கு மிகவும் எளிதானது.

3.   பதிவுகளின் தலைப்பைப் பார்த்துத்தான் பார்வையாளர்கள் பதிவுக்குள்ளே வருகிறார்கள். ஆகையால் தலைப்பு கவர்ச்சியாக இருப்பது அவசியம். பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது.

4.   எல்லோரும் தங்கள் பதிவுகளை அதிகம் பேர் படிக்கவேண்டும் என்கிற ஆவலுடன்தான் எழுதுகிறார்கள். அப்படி எழுதப்படும் பதிவில் ஏதாவது ஒரு உபயோகமான செய்தி அல்லது பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு விஷயம் இருக்கவேண்டும்.

5.   தமிழில் எழுதும் அனைவரும் தமிழை பிழையில்லாமல் எழுத முயல வேண்டும். ற,ர வின் உபயோகம்,  ல,ள,ழ இவைகளின் வித்தியாசம், சந்தி விதிகள், ஆகியவைகளை உணர்ந்து பயன் படுத்தினால் உங்கள் பதிவின் தரம் கூடும்.

6.   பதிவுகளின் எழுத்து நடை சரளமாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியாக  இருக்கவேண்டும். பதிவை எழுதி முடித்தவுடன் ஒரு தடவைக்கு இரு தடவை படித்துப் பாருங்கள். பிழைகளைக் களைய இது உதவும்.

7.   பதிவுகள் அதிக நீளமாக இருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்றுள்ள அவசர கதியில் பதிவுகளுக்காக செலவிடப்படும் நேரத்தில் அதிக பதிவுகளைப் படிப்பதற்கே அனைவரும் விரும்புவர்.

8.   போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது.

9.   பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த தளங்களில் “பின்தொடர்பவர்கள்” ஆகிறார்கள். அவர்களுடைய Dash Board ல் அந்த தளங்களின் பதிவுகள் தானாகவே தெரிகின்றன. ஆகவே தனியாக email அனுப்புவது தேவையில்லை. Word Verification இருப்பது பெரும்பாலான சமயங்களில் பின்னூட்டமிடுபவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கிறது.

10. தங்கள் பதிவுகளில் பின்னூட்டங்கள், ஹிட்ஸ்கள், முதலானவை அதிகரிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

இப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி. 


திங்கள், 5 செப்டம்பர், 2011

என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும்



இனிய உளவாக இன்னாத கூறுதல்
கனி இருப்ப காய் கவர்ந்தற்று – குறள் (100)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள் (784)

இந்த இரண்டு குறள்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றுகின்றன அல்லவா? தெய்வப்புலவர் தம் நூலில் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைக் கூறியிருப்பாரா என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்கள்தான் விடை கூற இயலும்.

தமிழ் அஞ்ஞானியான நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரவர்களுக்கு பொருத்தமான குறளை அவரவர்கள் கடைப்பிடிக்கலாம் என்பதே. இக்கொள்கைப்படி இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போய்விட்டது. இதை மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். பொய்தான் இனிக்கும். கசப்பு மாத்திரைக்கு சர்க்கரைப்பூச்சு பூசி கொடுப்பதில்லையா என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம். நான் அதை “பசப்பு” என்று கருதுகிறேன். “பசப்பு” பத்தினிகளின் குணமாகாது. ஆகவே இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போனது. அப்படியிருக்க மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக  ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இது தவறு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய போன பதிவில் “வயிற்றெரிச்சல்” என்பதற்குப் பதிலாக “ஆற்றாமை” என்று போட்டிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்காது. மேலும் என் பதிவுலக வாழ்வில் முதன் முறையாக தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் மைனஸ் ஓட்டுகளும் விழுந்திருக்காது. தவிர, அருமையான பல கருத்துக்கள் ஜனனமாகாமலேயே மரித்துப் போயிருக்கும். அதனால் பதிவுலகத்திற்கு எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?! ஆகவே எந்த ஒரு கெடுதலிலும் ஒரு நன்மை உண்டென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கிழடுகளுக்கே எதையும் குறை கூறத்தான் தெரியும், இன்றைய இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது அறிவுரைகள் கூறுகிறார்களா? என்று ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். அது மிகவும் நியாயமான கருத்து. அடுத்த பதிவு இந்த குறிப்புகள்தான். தயை கூர்ந்து பொறுத்திருங்கள்.