புதன், 14 ஜனவரி, 2015

VGK 15 அ ழை ப் பு

VGK 15   ழை ப் பு
 இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.
இந்தக் கதைக்கு என் விமர்சனம்.
எந்த விசேஷம் என்றாலும் விருந்தினர்கள் அவசியம். அதுவும் கல்யாணத்திற்கு எவ்வளவு விருந்தினர் வருகிறார்களோ அவ்வளவிற்கு கல்யாணக்காரரின் மவுசு கூடும். இதற்காகவே எவ்வளவு கூட்டம் கூட்ட முடியுமோ அவ்வளவு கூட்டம் கூட்டுவதற்கு கல்யாணக்காரர் ஆசைப்படுகிறார்.
இதற்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று விவஸ்தை இல்லாமல் அழைப்பிதழைக் கொடுப்பதுதான் வழி. இவ்வாறு அழைப்பிதழ் கொடுக்கும்போது ஏற்படும் அனுபவங்களை பல விதமானவைகளாக இருக்கும். அதை இந்தக் கதையில் நன்கு படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
எப்படி பார்த்துப் பார்த்து அழைப்பிதழ் கொடுத்தாலும் ஏதாவது ஒன்றில் கோட்டை விடுவது வழக்கமே. இந்தக் கல்யாணத்தில் தாய் மாமனுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. இது ஒரு பெரிய தவறுதான். பொதுவாக இந்த மாதிரி தபாலில் அழைப்பிதழ் வந்தால் கல்யாணத்திற்கு வரமாட்டார்கள். ஆனால் இந்த மாமன் வந்து விட்டார். சண்டை போடுவதற்கென்றே வந்திருக்கிறார்.
கல்யாணக்காரரின் ஆப்த நண்பர் மாமாவின் காலில் விழுந்து சமாதானம் செய்து விடுகிறார் என்பதுதான் கதையின் உச்ச கட்ட திருப்பம். காரியம் ஆகவேண்டுமென்றால் கழுதையின் காலில் கூட விழலாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துப் போயிருக்கிறார்கள்.

எப்படியோ கல்யாணம் சுபமாக நடந்தேறியது. நமக்கும் ஒரு கல்யாண (கதை) விருந்து கிடைத்தது.