VGK 15 அ ழை ப் பு
இந்தக் கதைக்கு என் விமர்சனம்.
எந்த விசேஷம் என்றாலும் விருந்தினர்கள் அவசியம். அதுவும்
கல்யாணத்திற்கு எவ்வளவு விருந்தினர் வருகிறார்களோ அவ்வளவிற்கு கல்யாணக்காரரின்
மவுசு கூடும். இதற்காகவே எவ்வளவு கூட்டம் கூட்ட முடியுமோ அவ்வளவு கூட்டம் கூட்டுவதற்கு
கல்யாணக்காரர் ஆசைப்படுகிறார்.
இதற்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று விவஸ்தை
இல்லாமல் அழைப்பிதழைக் கொடுப்பதுதான் வழி. இவ்வாறு அழைப்பிதழ் கொடுக்கும்போது
ஏற்படும் அனுபவங்களை பல விதமானவைகளாக இருக்கும். அதை இந்தக் கதையில் நன்கு படம்
பிடித்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
எப்படி பார்த்துப் பார்த்து அழைப்பிதழ் கொடுத்தாலும்
ஏதாவது ஒன்றில் கோட்டை விடுவது வழக்கமே. இந்தக் கல்யாணத்தில் தாய் மாமனுக்கு
நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. இது ஒரு பெரிய தவறுதான். பொதுவாக இந்த
மாதிரி தபாலில் அழைப்பிதழ் வந்தால் கல்யாணத்திற்கு வரமாட்டார்கள். ஆனால் இந்த
மாமன் வந்து விட்டார். சண்டை போடுவதற்கென்றே வந்திருக்கிறார்.
கல்யாணக்காரரின் ஆப்த நண்பர் மாமாவின் காலில் விழுந்து
சமாதானம் செய்து விடுகிறார் என்பதுதான் கதையின் உச்ச கட்ட திருப்பம். காரியம்
ஆகவேண்டுமென்றால் கழுதையின் காலில் கூட விழலாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துப்
போயிருக்கிறார்கள்.
எப்படியோ கல்யாணம் சுபமாக நடந்தேறியது. நமக்கும் ஒரு கல்யாண
(கதை) விருந்து கிடைத்தது.
அன்புள்ள ஐயா, வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது.
தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
பெரியவர்கள் இதை எல்லாம் சொல்லி உள்ளார்களா...? நீங்கள் சொன்னால் சரி...
பதிலளிநீக்குதிரு வைகோ அவர்களின் ‘அழைப்பு’ கதையையும் தங்களின் திறனாய்வையும் படித்தேன்.திருமண அழைப்பிதழ் தர ஒருவர், அதுவும் பணி ஓய்வு பெற்றவர் படும் அவஸ்தையை மிக சுவாரஸ்யமாக அவருக்கே உரித்த பாணியில் விளக்கியுள்ளார் கதாசிரியர். அதுவும் தாய் மாமா கோபித்துக்கொண்டு இருக்கும்போது நடக்கும் உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் அவர்களின் ‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. கதை இயல்பாக நேரில் பார்ப்பதுபோல் எழுதப்பட்டிருப்பது இதனுடைய சிறப்பு. வாழ்த்துக்கள் திரு வைகோ சார்! இந்த கதையை இரத்தின சுருக்கமாக விமரிசித்த தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
VGK to Mr. வே.நடனசபாபதி [2]
நீக்கு//அதுவும் தாய் மாமா கோபித்துக்கொண்டு இருக்கும்போது நடக்கும் உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் அவர்களின் ‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.//
தங்களின் ஒப்பீட்டுத் தகவலுக்கு மிக்க நன்றி, இருப்பினும் நான் தாங்கள் சொல்லும் இந்த நாவலை இதுவரை படித்தது இல்லை.
கல்கி, சுஜாதா உள்பட இதுவரை எந்தப்பிரபலங்களின் எழுத்துக்களையும் நான் அதிகமாகப் படித்ததே இல்லை. அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
காரணம் :
[1] இளமையில் வறுமை. அப்போதெல்லாம் ஓஸியில் கிடைக்கும் எதையும் நான் மிக ஆர்வமாகப் படிப்பதுண்டு. நிலக்கடலை சுற்றித்தரும் பேப்பர்கள் உள்பட அனைத்தையும் ஒருவரி விடாமல் படித்து விடுவேன்.
[2] வாலிபப்பருவத்தில் குடும்ப பாரத்தை சுமக்க நேர்ந்தது. வயதான தாய் தந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. இளம் வயதிலேயே எனக்குத் திருமணம் நடந்தது, அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தது, அவர்களை வளர்த்தல், படிக்க வைத்தல். ஆளாக்குதல் என அவற்றிலேயே என் கவனம் சென்று விட்டது.
நடுத்தர வயதில் என் அலுவலகத்தில் மிக மிகப் பொறுப்பான வேலைகள் எனக்குத்தரப்பட்டு, மற்ற எதிலும் நான் என் கவனத்தை செலுத்தவே இயலாமல் போய்விட்டது. எனக்கு ஆர்வம் இருந்தும் என்னால் எதையும் படிக்க இயலவில்லை.
இருப்பினும் 40 வயதுக்கு மேல் 48 வயதுக்குள், மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து, அன்று SSLC XI Std. உடன் விடுபட்ட என் கல்வியை ஆர்வத்துடன் ஓர் சவலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்தேன். In Single Attempt இரண்டு இளநிலைப்பட்டங்களும், ஒரு முதுநிலைப்பட்டமும் என்னால் வாங்க முடிந்தது.
தங்களுக்கு நேரம் இருந்தால் நான் எழுதியுள்ள மிகவும் விறுவிறுப்பான “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற என் தொடர் கட்டுரையை வாசியுங்கள்.
ஆரம்ப முதல் பகுதி: http://gopu1949.blogspot.in/2012/03/1.html ....
8வது இறுதிப் பகுதி: http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html
[3] இப்போது முதுமையில் எனக்கு எதற்கும் எந்தக்குறைவும் இல்லைதான். வீடு நிறைய பலர் அன்பளிப்பாகக் கொடுத்துள்ள + நான் பரிசுகள் பெற்றுள்ள புத்தகங்கள் நிறையவே உள்ளன. எதையுமே பிரிக்கவோ படிக்கத் தோன்றாமல் மிகவும் சோம்பலாக உள்ளது.
மேலும் நானே ஒரு சிறுகதை எழுத்தாளனாக மாறும் வாய்ப்பு 2005 முதல் கிடைத்துள்ளதால், பிறர் எழுத்துக்களைப்படித்து, அவர்களின் பாணி எனக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்திலும் நான் பிற பிரபலங்களின் எழுத்துக்களை வாசிக்கவே விரும்புவது இல்லை.
என் பாணியில் என் அனுபவங்களையும், என் கற்பனைகளையும் எனக்கே உண்டான நகைச்சுவை கலந்து மிகவும் யதார்த்தமாக எழுதுவதையே இன்றும் நான் விரும்புகிறேன். அதையே பிறரும் (என் வாசகர்களும் / பத்திரிகைக்காரர்களும்) விரும்புகிறார்கள். அதில்தான் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைத்து வருகிறது.
எனக்குள்ள அந்த தன்னம்பிக்கையில் தான் என்னால் சமீபத்தில் 2014 பொங்கல் முதல் 2014 தீபாவளி வரை தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு வெற்றிகரமாக ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ களும் என்னால் மிகப்புதுமையாகவும், மிகச்சிறப்பாகவும் நடத்த முடிந்தது.
அந்த நான் நடத்திய போட்டிகளின் முழுமையான வெற்றி விபரங்களும் இதோ இந்த ஒரிரு பதிவுகளில் உள்ளன. முடிந்தால் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html and
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
அன்புடன் VGK
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குVGK to Mr. வே.நடனசபாபதி
நீக்கு'ஓர் சவலாக’ என்பதை மட்டும்
‘ஓர் சவாலாக’
என மாற்றிப் படிக்கவும்.
VGK
திரு வைகோ அவர்களுக்கு,
நீக்குதேவன், கல்கி இருவரும்தான் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இரண்டு வாரப் பத்திரிக்கைகளின் ஆணிவேர். அந்தக் காலத்தில் இந்தப் பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகளை விரும்பாதவர்கள் அரிது. நான் அனைத்து தொடர்களையும் விடாது படித்து வந்திருக்கிறேன். எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்க வசதியில்லை. எல்லாம் ஓசி படிப்புதான். அந்த வார ஆனந்தவிகடனைப் படிக்க மூன்று மைல் தூரத்திலுள்ள லைப்ரரிக்குப் போவேன்.
மிஸ்டர் வேதாந்தம் தேவனின் ஒரு மாஸ்டர் பீஸ்.
நீக்குதிரு VGK அவர்களுக்கு, ஐயா நான் தங்களுடைய கதையை தேவன் அவர்களுடைய நாவலுடன் ஒப்பிட்ட காரணம் அவரது எழுத்தில் இழைந்தோடிய நகைச்சுவை போன்று தங்களுடைய நகைச்சுவை உரையாடலும் இருந்தது தான். மற்றபடி நீங்கள் அவரது நாவலை தழுவி எழுதியதாக சொல்லவில்லை. இரண்டும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்டவை. உரையாடலில் இருந்த அங்கதம் (Satire) என்னைக் கவர்ந்ததால் அவ்வாறு எழுதினேன். தவறாக இருந்தால் மன்னிக்க.
தாங்கள் உழைப்பால் உயர்ந்த மனிதர் என எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! அவசியம் தங்களது பதிவுகளை படித்து எழுதுவேன்
VGK TO Mr. வே.நடனசபாபதி Sir [4]
நீக்குஐயா, வணக்கம். தங்களுக்கு நான் எழுதியதோர் முதல் பின்னூட்டம் எங்கோ காணாமல் போய் விட்டது. அதைத்தேடிக் கண்டுபிடிக்க முடியாததால், முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், நான் மெயில் மூலம் மீண்டும் அனுப்பியுள்ளதை கீழே பிரசுரித்துள்ளார்கள்.
//உரையாடலில் இருந்த அங்கதம் (Satire) என்னைக் கவர்ந்ததால் அவ்வாறு எழுதினேன். தவறாக இருந்தால் மன்னிக்க. //
இதில் தவறேதுமே இல்லை சார். நான் மிகவும் மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டேன். பிரபலங்களின் நாவல்கள் எதனையும் நான் படித்தது இல்லை என்பதை மட்டும் தங்களுக்கு ஓர் தகவலாகக் கொடுத்திருந்தேன். அவ்வளவுதான். மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் வேண்டாமே, சார்.
//தாங்கள் உழைப்பால் உயர்ந்த மனிதர் என எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! அவசியம் தங்களது பதிவுகளை படித்து எழுதுவேன்//
மிகவும் சந்தோஷம், சார்.
நானும் தாங்கள் பதிவினில் எழுதும் அனைத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன். கருத்துக்கள் மட்டும் அளிக்காமல் உள்ளேன். அதற்கும் ஒருசில குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.
பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் காலத்து வங்கி நிகழ்ச்சியொன்றைக்கூட எழுதியிருந்தீர்கள். அதைப் பற்றி எனக்கும் ஓரளவு செய்தித்தாள்கள் மூலம் தெரியுமாதலால், அதனை ஒருமுறைக்கு இருமுறையாகப் படித்தேன்.
அன்புடன் VGK
கதையையும் தங்கள் விமர்சனத்தையும் ப்டித்தேன். இயல்பான நடையில் கதை. அவ்வாறே விமர்சனம். யதார்த்தத்தின் வெளிப்பாட்டை முழுமையாகக் காணமுடிந்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி புதன், 14 ஜனவரி, 2015 ’அன்று’ 7:15:00 முற்பகல் IST
பதிலளிநீக்குDear Sir, Welcome Sir.
//திருமண அழைப்பிதழ் தர ஒருவர், அதுவும் பணி ஓய்வு பெற்றவர் படும் அவஸ்தையை மிக சுவாரஸ்யமாக அவருக்கே உரித்த பாணியில் விளக்கியுள்ளார் கதாசிரியர்.//
//கதை இயல்பாக நேரில் பார்ப்பதுபோல் எழுதப்பட்டிருப்பது இதனுடைய சிறப்பு. வாழ்த்துக்கள் திரு வைகோ சார்! //
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, சார்.
>>>>>
நல்ல சிறுகதை விமர்சனம்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.