வியாழன், 10 பிப்ரவரி, 2011

பல்லி பிடிக்கத் தெரியுமா?

இது என்ன புதுசா இருக்குன்னு நினைக்காதீங்க. ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தெரிந்து கொள்ளவேண்டிய கலை இது. எத்தனை வீட்டுல இல்லத்தரசிகள் இந்த அப்பாவிப் பிராணியைப் பார்த்துவிட்டு ஊரைக்கூட்டி இருக்கிறார்கள் என்று விசாரித்தால் தெரியும்.


இதற்குத் தேவையான  உபகரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

1. ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்.
3. நிறைய மனோ தைரியம்.
படம் 1 ஐப் பார்க்கவும்.

                                                                       படம் 1

இவைகளைத் தயார் செய்த பிறகு வீட்டில் எங்காவது பல்லி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கவும். தேவையானால் ஆணி புடுங்குவதை சில நாட்கள் தள்ளிப்போடவும். பல்லி வருவதை எளிதில் அறிந்து கொள்ளலாம். சமையல் அறையிலிருந்து திடீரென்று அமானுஷ்யமான அலறல் கேட்டால் பல்லி வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

பல்லி சமையல் மேடையில் இருக்கும். ஏறக்குறைய படம் - 2 ல் இருக்கிற மாதிரி இருக்கும்.



படம் - 2

உங்கள் தளவாடங்களுடன் சமையலறைக்கு ஆஜராகவும். முதலில் உங்கள் துணைவியாரை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தவும். பல்லியைப் பயப்படுத்தி விடவேண்டாம். பிறகு பல்லிக்கு மேல் நைஸாக பிளாஸ்டிக் கிண்ணத்தால் மூடவும். பல்லியின் வாலை நசுக்கி விடாதீர்கள். பல்லி வாலைத் துண்டித்துக்கொள்ளும். அப்புறம் வால் தனியாகத் துடித்துக் கொண்டு இருக்கும். அதை டீல் பண்ணுவது வேறு கலை. அதை அடுத்த வகுப்பில் சொல்லித்தருகிறேன். பார்க்கவும் படம் - 3.


 
படம் - 3
இப்போது பல்லி பிளாஸ்டிக் கிண்ணத்தின் உள்ளே சிக்கிக்கொண்டது. அதை எப்படி வெளியே எடுப்பது?  ஒரு கெட்டி அட்டை முதலில் எடுத்து வைத்தோமல்லவா, அந்த அட்டையை எடுத்து நைஸாக கிண்ணத்தின் அடியில் சொருகவும். பார்க்க படம் - 4.
அவ்வளவுதான். பிளாஸ்டிக் கிண்ணத்தை அட்டையுடன் சேர்த்து தூக்கி, திருப்பிக் கொள்ளவும்.



 படம்- 4
இப்போது பல்லி பிளாஸ்டிக் ஜெயிலில். இந்தப் பல்லியை இப்போது என்ன செய்வது?

பல options  இருக்கின்றன. அவைகளில் சில.

  1. வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் (கண்டிப்பாக இருப்பார்கள்) அவர்கள் தலையில் இந்தப் பல்லியைப் போடலாம். ஆனந்தபோதினி சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ள பல்லி விழும் பலன்படி, தலை மேல் பல்லி விழுந்தால் உடனே மரணம் ஏற்படும். உங்கள் அத்யந்த நண்பர் எந்த விதமான நோய்நொடிகளும் இன்றி வைகுந்தப்ராப்தி அடைந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

2. அப்படி இல்லாமல் அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வைகுண்டம் போகவேண்டுமென்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அந்தப் பல்லியை
அவர்கள் வீட்டில் சாம்பார் கொதிக்கும்போது நைஸாக உள்ளே போட்டுவிடவும். இதற்கு அசாத்திய மனோதைரியமும் பின்விளைவுகளை சந்திக்கும் பலமும் வேண்டும்.

3. இந்த இரண்டு வழிகளும் பிடிக்காதவர்கள் பல்லியை காத தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடுவிக்கவும். எக்காரணம் கொண்டும் பல்லிக்கு எந்த விதமான தொல்லையும் கொடுத்து விடாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் இறந்த பிறகு, கல்ப கோடி காலம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் வதக்கப்படுவீர்கள். அப்படித்தான் கருட புராணம் சொல்கிறது.


படம் - 5

நேர்முக வகுப்புகள் தேவைப்படுபவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பினால் ஏற்பாடு செய்யப்படும்.

32 கருத்துகள்:

  1. ha ha haa....

    3vathu porulthan ennidam illai. ha ha ha...innum sirippu nirkavillai. en veetukkaararukku thamiz theriyathu. illainnaa ithai padikka solliyiruppeen.

    //சமையல் அறையிலிருந்து திடீரென்று அமானுஷ்யமான அலறல் கேட்டால் பல்லி வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.//

    ithellaam over sir. naanga paavamaa theriyalai?

    super comedy post unmaiyil... :))

    பதிலளிநீக்கு
  2. அன்னு said...
    ///ha ha haa....
    3vathu porulthan ennidam illai. ha ha ha...innum sirippu nirkavillai. en veetukkaararukku thamiz theriyathu. illainnaa ithai padikka solliyiruppeen.

    //சமையல் அறையிலிருந்து திடீரென்று அமானுஷ்யமான அலறல் கேட்டால் பல்லி வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.//

    ithellaam over sir. naanga paavamaa theriyalai?

    super comedy post unmaiyil... :))//

    இந்நேரத்தில் எழுந்து கம்ப்யூட்டருக்கு வந்து என் பதிவை, பதிவு போட்ட ஐந்து நிமிடத்தில் பார்த்து பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி.

    நிச்சயமா, உங்களைப் பார்த்தா பாவமா இருந்ததினால்தான் இந்தப் பதிவு போட்டேன்.

    கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் உங்களுக்கு சிரிப்பு வந்ததில்லையா? அது போதுங்க எனக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஆகா.. குசும்புதான் பாஸ் உங்களுக்கு..

    அடுத்த வகுப்பில், கரபான் பூச்சியை பிடித்து சூப் வைப்பதை பற்றி வீடியோ மூலமாக விளக்கினால் தனயனாவேன்..



    டவுட் 1.

    கிண்ணத்துக்கு அடியில், அட்டையை வைக்கும் கலை, இன்னும் வரவில்லை. தீவிர முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.. ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  4. பட்டாபட்டி.... said...

    //ஆகா.. குசும்புதான் பாஸ் உங்களுக்கு..
    அடுத்த வகுப்பில், கரபான் பூச்சியை பிடித்து சூப் வைப்பதை பற்றி வீடியோ மூலமாக விளக்கினால் தன்யனாவேன்..//

    ஆஹா, உங்களுக்கு இல்லாமயா? கண்டிப்பா செஞ்சுடறேன். உங்க ஊர்லயே பாம்பு, பல்லியெல்லாம் போட்டு சூப் வைப்பாங்களே, அங்கயே கரப்பான் சூப் கெடைக்குமான்னு விசாரிங்களேன்.

    //டவுட் 1.
    கிண்ணத்துக்கு அடியில், அட்டையை வைக்கும் கலை, இன்னும் வரவில்லை. தீவிர முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.. ஹி..ஹி//

    இங்க வரப்ப வீட்டுக்கு வாங்க, உங்களுக்காக ஒரு ஃப்ரீ கிளாஸ் எடுத்துடறேன்.

    பதிலளிநீக்கு
  5. அட இதுக்கில்ல "ரொம்ப வித்தியாசமான பயனுள்ள பதிவுன்னு" கமென்ட் போடணும். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  6. உங்ககிட்ட கத்துகிட வேண்டிய விசயம் நிறைய இருக்குங்க..:)))))))))))))))))

    பதிலளிநீக்கு
  7. பல்லிலாம் மேட்டர் இல்லை பாஸ் . கரப்பான் பூச்சிதான்

    பதிலளிநீக்கு
  8. நிகழ்காலத்தில்... said...

    //உங்ககிட்ட கத்துகிட வேண்டிய விசயம் நிறைய இருக்குங்க..:)))))))))))))))))//

    சும்மாவா 38 வருசம் ஆராய்ச்சியாளனா இருந்தனுங்க?!

    பதிலளிநீக்கு
  9. எல் கே said...
    //பல்லிலாம் மேட்டர் இல்லை பாஸ். கரப்பான் பூச்சிதான்.//

    பல்லி கரப்பானைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கறீர்களா? அதனால பல்லி பிடிக்கிறவங்க எல்லோரையும் அவர்கள் பிடித்த பல்லிகளை உங்கள் வீட்டில் விடச்சொல்லீடுவோம். அந்தப் பல்லிகள் எல்லாம் கரப்பான் பூச்சிகளைச் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் பல்லிகளைப் பிடித்து வேறு தேவைப்படும் வீட்டுக்கு சப்ளை செய்து விடலாம். இதற்கான கான்ட்ராக்டை ஜாய்ன்டாக நாம எடுத்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. இப்போ இருக்கும் வீட்டில் ஏராளமா பல்லிகள். கடையில் பல்லி விரட்டின்னு ஒன்னு விக்கறான். வாங்கிவந்து எல்லா அறைகளிலும் ட்யூப் லைட் அருகில் ஒட்டி வச்சேன்.

    அதை வெகு லாகவமாச் சுத்திக்கிட்டு நடக்குதுகள் அவையெல்லாம்!

    இந்தியா வந்தப்ப முதல்முதலில் பல்லியைப் பார்த்த என் மகள் (அப்ப அவளுக்கு 5 வயசு) சுவத்துலே ட்ராகன் இருக்குன்னாள்:-)))))


    வால் டிஸ்போசல் வகுப்புக்குக் காத்துருக்கேன்.

    பதிலளிநீக்கு
  11. இங்கு நாமெல்லாம் பல்லிக்குப் பயப்பட மாட்டோம். பல்லி எல்லாம் சிறிதாகவே இருக்கும்.:)

    பதிலளிநீக்கு
  12. பல்லியைப் பிடிக்க பரிந்துரை செய்த நமது மருத்துவர் ஐயா, இன்று முதல் பல்லியை வென்ற பராக்கிரம சோழன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவதாக....!

    பதிலளிநீக்கு
  13. புலி ( நல்லா நோட் பன்னுங்க புலி புளி அல்ல )

    எவ்வாறு பிடிப்பது?

    பதிலளிநீக்கு
  14. எனக்கென்னமோ நீங்க கொலைய தூண்டுறா மாதிரி தெரியுது..........வேணா CBI கிட்ட சொல்லட்டுங்களா ஹி ஹி!!

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப டிரைனிங் எடுத்திருப்பீங்க போல...
    ஆமா எந்தப் பல்லி நீங்க பிளாஸ்டிக் டப்பாவை வைத்து மூடும் வரை நிற்கிறது... செத்த பல்லியோ?

    பதிலளிநீக்கு
  16. சிரிப்பு வந்தாலும், இந்த பல்லி, கரப்பான் தொல்லையும், நான் இந்தியா வரும் எண்ணத்தைத் தள்ளிப் போட வைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்!! அவ்வ்வ்... ஆமாங்க.. ஆனா, எங்கூட்டுக்காரர் அதைப் பிடிக்கிற ரிஸ்கெல்லாம் எடுக்க மாட்டார்!! (அவரால முடியாததை அவை செய்கின்றனவே என்ற பொறாமையால்..)

    //இதற்கான கான்ட்ராக்டை ஜாய்ன்டாக நாம எடுத்துக்கலாம்//

    சார், கவர்மெண்ட் எம்ப்ளாயின்னு நிரூபிக்கிறீங்க!! :-))))))

    பல்லி பிடிக்கிற காண்ட்ராக்ட் எடுக்கிற ஐடியா இருந்தாச் சொல்லுங்க ப்ளீஸ்!!

    பதிலளிநீக்கு
  17. ///1. ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
    2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்.
    3. நிறைய மனோ தைரியம்.///

    முதல் இரண்டும் ஓகே. மூன்றவதற்கு எங்கே போவது. ஏதாவது பதிவு போடுவீங்களா ?

    பதிலளிநீக்கு
  18. Speed Master said...
    //புலி ( நல்லா நோட் பன்னுங்க புலி புளி அல்ல )
    எவ்வாறு பிடிப்பது?//

    இதென்னங்க ரொம்ப ஈசி. நாயர் பிடிச்ச புலி வால்னு கேள்விப்பட்டிருப்பீங்க இல்லீங்களா, அதே மெதட்தான். காட்டுல ரெண்டு மரம் பக்கமா இருக்குற இடத்தில போயி ஒளிஞ்சு நில்லுங்க. புலி வந்து அந்த மரங்கள் நடுவில் வாலை வச்சுட்டுத் தூங்கும்போது
    வாலை கெட்டியாப் புடிச்சுக்க வேண்டியதுதான். புலி இப்போ உங்க கையில். ஒரே சங்கடம் என்னன்னா, புலிய அப்புறம் உட்டுறக்கூடாது!

    உங்க கேள்வியை திரும்பவும் இன்னொரு முறை படித்துக் கொள்ளவும். புலி எப்படி பிடிக்கிறது என்று மட்டும்தான் கேட்டிருக்கிறீர்கள். அதற்குண்டான பதிலைக் கொடுத்திருக்கிறேன். வேறு கேள்வி உண்டானால் தனியாகக் கேட்கவும்.

    பதிலளிநீக்கு
  19. துளசி கோபால் said...

    //வால் டிஸ்போசல் வகுப்புக்குக் காத்துருக்கேன்.//

    கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க. ரூம் போட்டு யோசிக்கோணும்!

    பதிலளிநீக்கு
  20. //
    DrPKandaswamyPhD said...
    Speed Master said...
    //புலி ( நல்லா நோட் பன்னுங்க புலி புளி அல்ல )
    எவ்வாறு பிடிப்பது?//

    இதென்னங்க ரொம்ப ஈசி. நாயர் பிடிச்ச புலி வால்னு கேள்விப்பட்டிருப்பீங்க இல்லீங்களா, அதே மெதட்தான். காட்டுல ரெண்டு மரம் பக்கமா இருக்குற இடத்தில போயி ஒளிஞ்சு நில்லுங்க. புலி வந்து அந்த மரங்கள் நடுவில் வாலை வச்சுட்டுத் தூங்கும்போது
    வாலை கெட்டியாப் புடிச்சுக்க வேண்டியதுதான். புலி இப்போ உங்க கையில். ஒரே சங்கடம் என்னன்னா, புலிய அப்புறம் உட்டுறக்கூடாது!

    உங்க கேள்வியை திரும்பவும் இன்னொரு முறை படித்துக் கொள்ளவும். புலி எப்படி பிடிக்கிறது என்று மட்டும்தான் கேட்டிருக்கிறீர்கள். அதற்குண்டான பதிலைக் கொடுத்திருக்கிறேன். வேறு கேள்வி உண்டானால் தனியாகக் கேட்கவும்.


    நன்றி சார் முயற்சிசெய்கிறேன்

    பதிலளிநீக்கு
  21. ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
    2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்
    சின்ன விஷயம் தான். இதெல்லாம் எடுத்துட்டேன். நிறைய மனோதைர்யம் வேணும்னீங்களே..அங்க தான் இடிக்குது.
    அது சரி..புடிச்ச பல்லியை என்ன பண்றது?
    கடலை மாவுல தோச்சு, கொதிக்கிற எண்ணெய் வாணலியில் விடலாமா, ஸார்?

    பதிலளிநீக்கு
  22. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
    2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்
    சின்ன விஷயம் தான். இதெல்லாம் எடுத்துட்டேன். நிறைய மனோதைர்யம் வேணும்னீங்களே..அங்க தான் இடிக்குது.
    அது சரி..புடிச்ச பல்லியை என்ன பண்றது?
    கடலை மாவுல தோச்சு, கொதிக்கிற எண்ணெய் வாணலியில் விடலாமா, ஸார்?//

    அதுக்கு ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப மனோதைரியம் வேண்டுமே, அதுதான் நம்ம கிட்ட கொஞ்சம் குறைச்சலாச்சே? போனாப்போகுது, பல்லிய உட்டுடுங்க சார்.

    பதிலளிநீக்கு
  23. நீங்கள் நேர்மையாக பல்லி பிடிக்க கற்றுக்கொடுக்கிறீர்கள். லூதியானாவிலிருந்து மூட்டைப் பூச்சி கள் ஒழிக்க நிச்சயமான முறை என்று விளம்பரம் செய்து, பணம் பெற்று ஒரு பார்சல் அனுப்புவார்கள் அதில் ஒரு கிண்ணம் ,ஒரு சிறிய அம்மிபொல் ஒரு கல், ஒரு சின்ன சுத்தி இருக்கும். மூட்டைப் பூச்சியைப் பிடித்து,அம்மியில் வைத்து சுத்தியால் அடித்து கிண்ணத்தில் நீரில் போட்டால் மூட்டைப் பூச்சி நிச்சயமாக ஒழிந்துவிடும். அது எப்படி...!

    பதிலளிநீக்கு
  24. நீங்க சொல்ற மேட்டர் அது தரையில இருக்கும் போது ஓக்கே ..ஆனா சுவற்றை விட்டு கீழேயே இறங்க அடம்பிடிக்கும் பல்லிக்கு என்னங்க செய்யனும் ..!! :-))

    பதிலளிநீக்கு
  25. ஜெய்லானி said...

    //நீங்க சொல்ற மேட்டர் அது தரையில இருக்கும் போது ஓக்கே ..ஆனா சுவற்றை விட்டு கீழேயே இறங்க அடம்பிடிக்கும் பல்லிக்கு என்னங்க செய்யனும் ..!! :-))//

    நீங்க இப்படிக் கேப்பீங்கன்னு தெரியமில்ல, அதுக்காகத்தான் ரெண்டாவதா ஒரு வழியும் போட்டிருக்கறேனுங்க. அந்தப் பச்சை பக்கெட்டுக்கு கீழ பாருங்க, அது உங்களுக்காகத்தான் ஸ்பெசலாப் போட்டது.

    பதிலளிநீக்கு
  26. Blogger G.M Balasubramaniam said...

    //நீங்கள் நேர்மையாக பல்லி பிடிக்க கற்றுக்கொடுக்கிறீர்கள். லூதியானாவிலிருந்து மூட்டைப் பூச்சி கள் ஒழிக்க நிச்சயமான முறை என்று விளம்பரம் செய்து, பணம் பெற்று ஒரு பார்சல் அனுப்புவார்கள் அதில் ஒரு கிண்ணம் ,ஒரு சிறிய அம்மிபொல் ஒரு கல், ஒரு சின்ன சுத்தி இருக்கும். மூட்டைப் பூச்சியைப் பிடித்து,அம்மியில் வைத்து சுத்தியால் அடித்து கிண்ணத்தில் நீரில் போட்டால் மூட்டைப் பூச்சி நிச்சயமாக ஒழிந்துவிடும். அது எப்படி...!//

    ஆமாங்க, முந்தி ஜலந்தர்ல இருந்து அந்த மாதிரி விளம்பரங்கள் நெறய வரும். நானும் ஜலந்தர்ல இருந்திருந்தா இந்த டெக்னிக்கை அந்த மாதிரி மார்க்கெட் பண்ணி கொஞ்சம் காசு பண்ணீருப்பனுங்க.

    பதிலளிநீக்கு
  27. Dr. அய்யா ,

    கலக்கிட்டீங்களே !!!

    இதில் , பல்லி பிடிக்க அதிக நேரம் தேவைப் பட்டதா? இல்லை இதைப் பதிவாக்க அதிக நேரம் தேவைப் பட்டதா?

    அருள்

    பதிலளிநீக்கு
  28. அருள் சேனாபதி said...
    //Dr. அய்யா ,
    கலக்கிட்டீங்களே !!!
    இதில் , பல்லி பிடிக்க அதிக நேரம் தேவைப் பட்டதா? இல்லை இதைப் பதிவாக்க அதிக நேரம் தேவைப் பட்டதா?
    அருள்//

    அருமையான கேள்வி. இந்தக் கேள்வி கேட்க மிகுந்த புத்திக் கூர்மை வேண்டும். அது இந்தப் பதிவருக்கு இருப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தோம்.

    எப்படீங்க பதில்? இப்படி பதில் சொல்லித்தான் 38 வருஷம் புரொபசர் வேலை பார்த்தனுங்க. எப்பவும் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாம வளைச்சு வளைச்சுப் பேசியே ஆளை ஒரு வழியாக்கிடணுமுங்க.

    பதிலளிநீக்கு
  29. ரசித்துப் படித்தேன்.

    இது எங்க வீட்டு பல்லி ..
    http://puthupunal.blogspot.com/2006/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  30. பல்லியை கில்லியாக பிடித்தற்கு இன்னொரு டாக்டர் பட்டம் பதிவுலகில் கொடுக்கிறோம்.
    நீல நாக்குப்பல்லி, வாழும் பல்லியை என் பதிவில் படித்து கருத்து சொல்லுங்க டாக்டரே!!

    பதிலளிநீக்கு