கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி, செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் தருகின்றன.
நாம் செய்யும் செயல்களுக்கு எப்போதும் நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளே ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும், எதிர் மறையாக இருந்தால் துன்பமும் நம் மனதில் தோன்றுகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவன் இந்த விளைவுகளைக் கண்டு கலங்க மாட்டான். அவன்தான் ஞானி எனப்படுபவன். எல்லோரும் ஞானியாக முடியாது. ஆனால் ஓரளவிற்கு இந்த உலக அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கீதை இதைத்தான் மக்களுக்குப் போதிக்கிறது.
“உன் கடமையைச் செய். பலனை என்னிடம் விட்டு விடு.”
இதை வெறும் வறட்டு வேதாந்தமாகக் கருதாமல் நடைமுறை வாழ்க்கையில் அனுசரித்தால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்
பதிலளிநீக்குhttp://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html
But, what are all one's duties and who defines that?
பதிலளிநீக்குGopi Ramamoorthy said...
பதிலளிநீக்கு//தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்//
இட்டு விடுகிறேன்!!!
Anonymous said...
பதிலளிநீக்கு//But, what are all one's duties and who defines that?//
ரொம்ப ஆழமான கேள்வி. இதற்கு ஒரு தனி பதிவுதான் போடவேண்டும். போட்டுவிடுகிறேன்.
நல்ல கட்டுரையை படித்த நிறைவு
பதிலளிநீக்குஆயினும் இன்னும் கொஞ்சம்
விரிவாக இருந்திருக்கலாமோ என்ற
எண்ணத்தை தடுக்க இயலவில்லை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கடைசி வரிகள் “நச்” ஐயா.
பதிலளிநீக்குRamani said...
பதிலளிநீக்கு//நல்ல கட்டுரையை படித்த நிறைவு
ஆயினும் இன்னும் கொஞ்சம்
விரிவாக இருந்திருக்கலாமோ என்ற
எண்ணத்தை தடுக்க இயலவில்லை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பதிவு போட்டு ஒரு வாரம் ஆகிவிட்டபடியால் விரிவாக எழ்த அவகாசம் இல்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
கருத்துக்கு மிக்க நன்றி.
“உன் கடமையைச் செய். பலனை என்னிடம் விட்டு விடு.” //
பதிலளிநீக்குஅது கொஞ்சம் கஷ்டமுங்க...கடமையை செய்தாலும் பலனை எதிர்பார்ப்பது தான் இன்றைய கலியுகத்தில் நடந்து வருகிறது...
கடமையை செய்பவனுக்கு எல்லாம் அதற்குண்டான பலனும் ஒழுங்காக சென்று சேர்வது இல்லை. உதாரணம் விவசாயிகள் தற்கொலை போன்றவை.
நல்ல வாயன் சம்பாதிச்சு நார வாயன் தின்ன கதை தான் சார் நடக்குது இங்க...