முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும். பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும்.
1. முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2. அங்கு Design என்று உங்கள் பதிவின் கீழ் இருக்கும். அதை அழுத்தவும்.
3. இப்போது தோன்றும் ஸ்கிரீனில் Edit HTML என்று இருப்பதை அழுத்தவும்.
4. இப்போது Back up/Restore Template என்கிற இடத்தில் இருப்பீர்கள். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5. இப்போது Download Full Template என்று இருப்பதை அழுத்தவும்.
6. இப்போது you have chosen to open என்று ஒரு விண்டோ வரும்.
7. அதில் Save File ஐ செலக்ட் செய்யவும். பிறகு OK ஐ அழுத்தவும்.
8. இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Desk Top இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
9. அடுத்து Edit Template க்கு கீழே ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டித்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
10. அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்துக்கொண்டு மூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
11. இப்பொது டெம்ப்ளேட் கட்டத்துக்கு கீழே x Find என்று ஒன்று தோன்றியிருக்கும். அதற்குப்பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும். அந்தக் கட்டத்தில் .post-body என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.
முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.
12. இப்போது கர்சரை வைத்து இந்த .post-body என்ற எழுத்துகள் சிறிது மேலே போகும்படி செய்யுங்கள்.
13. இப்போது தெரிபவை:
.post-body {
Font-size 110%
Line-height 1.2;
14. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
15. இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
16. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும். View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
17. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.
18. இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
டாக்டர் திடீர்னு இந்த ரூட்ல இறங்கீட்டாரே என்ன மேட்டர்? ஹி ஹி
பதிலளிநீக்குNanri iyah.samy
பதிலளிநீக்குஉடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும்./////காசா... பணமா... ஒரு நன்றி தெரிவிச்சிடலாமே. டிப்ஸ்க்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குமுயற்சி செய்து பார்க்கிறேன். ஒரு கேள்வி - நமது பதிவை எந்தெந்த திரட்டிகளில் இணைக்கலாம் என ஆலோசனை மின்னஞ்சலில் கூறுங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி:
rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com
நன்றி.
கலக்குங்க!
பதிலளிநீக்குநன்றி நன்றி நன்றி :)
பதிலளிநீக்குநன்றி குருவே. நேற்று நீங்கள் சரவணக் குமாரின் தளத்தில் பின்னூட்டம் இட்டதில் இருந்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குசி.பி.செந்தில்குமார் said...
பதிலளிநீக்கு//டாக்டர் திடீர்னு இந்த ரூட்ல இறங்கீட்டாரே என்ன மேட்டர்? ஹி ஹி//
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கம்தான் செந்தில்.
பயனுள்ள பதிவு.நன்றி
பதிலளிநீக்குசொன்ன முறை வித்தியாசமா இருக்கு.
பதிலளிநீக்குசூப்பரு!
ரொம்ப லேட். நீங்க மாற்றியுள்ள உங்க டெம்பிளேட் முன்னை விட நல்லா இருக்கு. அது என்ன ஹெட்டரில் உள்ள நிறம் மட்டும் சந்நியாசி கலரில்?
பதிலளிநீக்குஆனாலும் ஒ.கே.இண்ணமும் கூட நிறைய மாற்றங்கள் செய்யலாம். அதுதான் விஷயம் என்னன்னு தெரிஞ்சு போச்சே!!
saravanakumar saudi should use this optiopn
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு...
பதிலளிநீக்குபகிர்வுக்கு,நன்றி,, நன்றி,,நன்றி ..
பதிலளிநீக்குஉடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,..... தேங்காய் பழம் உடன் தட்சணை காசு வைக்க வேண்டாமா?
நமது பதிவை எந்தெந்த திரட்டிகளில் இணைக்கலாம்
பதிலளிநீக்கு.....தமிழ்மணம் மற்றும் இன்ட்லி.
சார், நீங்க பண்ணினது கொஞ்சம் கஷ்டமான வேலை,,சுலபமா ஒரு வழி(வலி இல்ல) இருக்கு.இதில் நீங்க உங்களுக்கு தேவையான,நிறம்,வடிவம் அனைத்தும் மாற்றி இன்புறலாம்.
பதிலளிநீக்குDesign -->edit html க்கு பதிலாக Template designer ,
templates - background - adjust widths - layout ..மாத்த மாத்த கீழ உங்க ப்ளாக் சாம்பிள் வரும்..பிடிச்சு இருந்த apply பண்ணிக்கலாம்.
அப்புறம் இந்த வசதி சில browser ல வொர்க் ஆகாது..google chrome ல சூப்பரா வொர்க் ஆகும்.
ஒரு அரசியல்வாதி உருவான கதை
சார்...........ரொம்ப பில்ட் அப் கொடுத்து பயம் காட்டுகின்றீர்கள் சார்.இருந்தாலும் இத்தனை தெளிவாக,விளக்கமாக விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள்.மிக மிக நன்றி.செயல் முறையை செய்முறைபடுத்திவிட்டு வெற்றியுடன் உங்களுக்கு நன்றிப்பதிவிடுகின்றேன்.
பதிலளிநீக்குகக்கு - மாணிக்கம் said...
பதிலளிநீக்கு//ரொம்ப லேட். நீங்க மாற்றியுள்ள உங்க டெம்பிளேட் முன்னை விட நல்லா இருக்கு. அது என்ன ஹெட்டரில் உள்ள நிறம் மட்டும் சந்நியாசி கலரில்? //
சந்நியாசம் வாங்கக் கூட சுதந்திரம் இல்லாத பதிவுலகம் வாழ்க. கலரை மாத்தீட்டேன் கக்கு
அட போங்க சார்...
பதிலளிநீக்குபுரியவில்லை..முதல இருந்தே சொல்லுங்க....ஹி.ஹி...
அட, சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குதான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் வாழ்க...!
’’’அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்’’’
பதிலளிநீக்குஇது தான் ரொம்ப முக்கியம்..பக்கத்தில் பொருள் வச்சுட்டே தேடுரவங்கன்னு நல்ல தெரிந்து வச்சிருக்கேங்க..
குருவே எப்படி ப்ளாகரை பப்ளிஷ் செய்வது என்று எழுதவும் எனக்கும் என்னைப்போன்று பலருக்கும் உதவியாக இருக்கும். தயவு செய்து உதவும்
பதிலளிநீக்குசாய்ராம்
malar said...
பதிலளிநீக்கு//அட போங்க சார்...
புரியவில்லை..முதல இருந்தே சொல்லுங்க....ஹி.ஹி...//
நெஜம்மா!!!!!!!!!
Sairam said...
பதிலளிநீக்கு//குருவே எப்படி ப்ளாகரை பப்ளிஷ் செய்வது என்று எழுதவும் எனக்கும் என்னைப்போன்று பலருக்கும் உதவியாக இருக்கும். தயவு செய்து உதவும் //
நெஜம்மா??
drpkandaswamy1935@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்பவும். ஒரு தொடர் பதிவே போட்டுடலாம்.
malar said...
பதிலளிநீக்கு//அட போங்க சார்...
புரியவில்லை..முதல இருந்தே சொல்லுங்க....ஹி.ஹி...//
மொதல்ல கம்ப்யூட்டரை ஷட் டவுன் பண்ணுங்க. அஞ்சு நிமிஷம் கண்ணை மூடிட்டு உங்க இஷ்ட தெய்வத்தை நெனச்சுக்குங்க. இப்ப கம்ப்யூட்டரை ஓபன் பண்ணுங்க.
ஓபன் ஆகுதா? இந்தப் பதிவ மறந்துட்டு வேற வேலையப் பாருங்க. எல்லாப் பிரச்சினைகளும் போயே போச். அவ்வளவுதான்.
நம்ம முப்பத்தியஞ்சு வருஷ வாத்தியார் வேலைல உங்க மாதிரி எத்தனை பேரைப் பார்த்துட்டு வந்திருக்கேன், நம்ம கிட்டநா
பிளாக்கர் டிப்ஸ் இப்படி கூட சொல்லலாமா.... வாத்தியார்ர ஸ்டைலே தனி
பதிலளிநீக்குsir, ithu musings maathiri illai. pathivargalin kaathukku music maathiri irukku :))
பதிலளிநீக்குஅன்னு said...
பதிலளிநீக்குsir, ithu musings maathiri illai. pathivargalin kaathukku music maathiri irukku :))
இது பின்னூட்டம் மாதிரி இல்லை. கவிதை மாதிரி இருக்கிறது.
பயனுள்ள பதிவைப் பகிர்ந்ததற்கு இனிய நன்றி!
பதிலளிநீக்குNice information to share... thanks
பதிலளிநீக்குஐயா.. நீங்கள் சொன்னதுபோலமாற்றி பதிவை எழுதினேன்.
பதிலளிநீக்குஇப்பொது ’இரண்டாவது வரியை’ காணவில்லை..
என்ன செய்வது என்று தயைகூர்ந்து சொல்லுங்கள்..
பட்டாபட்டி.... said...
பதிலளிநீக்கு//ஐயா.. நீங்கள் சொன்னதுபோலமாற்றி பதிவை எழுதினேன்.
இப்பொது ’இரண்டாவது வரியை’ காணவில்லை..
என்ன செய்வது என்று தயைகூர்ந்து சொல்லுங்கள்..//
எலக்ஷ்ன் முடியட்டும், பட்டா, எல்லா வரியும் சேர்ந்து வந்துவிடும். ஜட்டிய பத்திரமாப் பாத்துக்குங்க.
குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என பயந்து அன்புடன் மிக்க நன்றி சொல்லிவிட்டேன். கொடுமையிலும் கொடுமை சாபம் விடுவது. தாராளமாக copy, paste செய்து கொள்ளலாம்.இது உங்கள் பெரிய மனதினை காட்டுகின்றது. நாம் பெற்ற அறிவு மற்றவருக்கும் பகிர்ந்து கொடுப்பது சிறப்பு. அறிவு இறைவனால் தரப்பட்டது அது அனைவருக்கும் சொந்தம் . பொதுவுடைமை
பதிலளிநீக்கு