வெள்ளி, 25 மார்ச், 2011

பெயர்க் காரணம்.





அன்னு அவர்கள் என்னுடைய  "பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்"   பதிவில் போட்டுள்ள பின்னூட்டம்.
{ ஹெ ஹே... ஏன் இப்படி???

அடுத்தடுத்து வரப்போற டிப்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹெ ஹெ :))

கந்தஸ்வாமி சார், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். வழக்கம் போல கோவை லோலாயுடன் கலாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். }
இந்த “ஹெ ஹே” வுக்கு அர்த்தம் தெரியாமத்தான் முளிச்சிகிட்டு இருக்கேன். நல்ல பாராட்டா இல்லை நக்கலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தொடர் பதிவுன்னு அழைப்பு வந்த பிறகு சும்மா இருந்தா நம் (தன்மைப்பன்மை – Royal We) சுயமரியாதை என்ன ஆவது? ஆகவேதான் ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தாலும் திருமதி அன்னுவிற்காக இன்னொரு பதிவு. 
இப்போது இருக்கும் பதிவின் தலைப்பு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஏறக்குறைய ஒரு முப்பது வருடம் தப்பு, தப்பு, முப்பது நாள் சீ, இதுவும் தப்பு, முப்பது நிமிஷம் ஆயுசில முப்பது நிமிஷம் எதையும் யோசித்ததே இல்லை, முப்பது செகண்ட் யோசித்து எடுத்த தலைப்பு ஆகும். ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.
இதுக்கு முன்னால பல தலைப்புகளை யோசித்து வைத்திருந்தேன். அவைகளை ஏன் கைவிட்டேன் என்பதற்கான விளக்கம்.
மசக்கவுண்டன் கிறுக்கல்கள்:  நீ எழுதறது எல்லாமே கிறுக்கல்கள்தான். அதைத் தனியா வேற சொல்லோணுமாக்கும் என்று நண்பர்கள் சொல்லவே அதைக் கைவிட்டேன்.
பயித்தயக்காரன் பிதற்றல்: பதிவுலகத்தில ஒருத்தரும் நிஜப்பேரை வைப்பதில்லை. நீ மட்டும் ஏன் உன்னுடைய நிஜப்பேரை வைக்கிறே, பயித்தக்காரா ? என்று நண்பர்கள் இதையும் நிராகரித்து விட்டார்கள்.
முட்டாள் பையன், ரெட்டை மண்டை, அழுகுணி, பல்லவராயன் (என்னுடைய பல் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் வந்த காரணப்பெயர்), இப்படி பல பெயர்களை நான் சொல்லச் சொல்ல நண்பர்களும், வீட்டு அம்மணிகளும் நிராகரிக்க, கடைசியில் யாரையும் கேட்காமல் நானே இப்போது இருக்கும் பெயரை முப்பது செகன்ட் யோசித்து வைத்துவிட்டேன். இதுதான் இந்தப் பதிவின் பெயர்க்காரணம்.
அம்மணி அன்னு, தொடர் பதிவு போட்டுவிட்டேன். இதற்கு மேல் மூளை வேலை செய்யாததால் இத்துடன் முடிக்கிறேன்.

17 கருத்துகள்:

  1. . ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.
    //

    கஜினிமாறியா சார்?..

    ஆமா.. இது நீங்க தூங்கும்நேரம் ஆச்சே..
    இப்ப எதுக்கு முழிச்சுக்கிட்டு இருக்கீங்க..

    ஓ..
    சரி சார்..

    மிக்ஸி டெலிவரியானதும் போன் பண்ணுங்க.. பார்க்க வாரேன்...

    பதிலளிநீக்கு
  2. பெயர்க்காரணம் பெரிசா இருக்கும்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஏங்க இதுக்குப்பெயர்தான் பெயர்க்காரணமா? சூப்பர். உங்கலைத்தொடர்பதிவு எழுதக்கூப்பிட்டாங்க இல்லியா, அவங்களுக்கும் படிக்கும் எங்களுக்கும் இதுவும் வேணும், இன்னமும்வேணும்.

    பதிலளிநீக்கு
  4. ஹெ ஹெ ஹெ... தப்பா எடுத்துக்காதீங்க சார். பழைய பதிவுல இருந்த ஹெ ஹெ யும் பாராட்டுதேன். இந்த ஹெ ஹெயும் பாராட்டு தேன். அரைப்பக்க கதை எழுதுற மாதிரி ஒரு பதிவை எழுதியிருக்கீங்க.

    வாழ்த்துக்கள்...!
    ஹெ ஹெ .. இந்த ஹெ ஹெ நக்கல் :)))

    பதிலளிநீக்கு
  5. //இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் உபயோகத்துக்காக...//
    ஒரே ஒரு சந்தேகமுங்க எனக்கு

    நானும் ஒவ்வொரு தடவையும் கேக்கனுமின்னு வந்து மறந்து போய்டுவேன் ..
    உங்க பிளாக் வரவங்க பெரும்பாலும் ஃபோலோயர்தான் .. அப்புறம் யாருங்க இந்த பொது மக்கள் ..ஹி..ஹி... :-)))

    இதுக்காக ஒரு பதிவு போட்டுட வேனாம் ..அவ்வ்வ்வ் :-))))

    பதிலளிநீக்கு
  6. //பதிவுலகத்தில ஒருத்தரும் நிஜப்பேரை வைப்பதில்லை//

    என்னோட பேரு 10000000 சதம் என்னோட ஒரிஜினல் பேர்தான் ..சந்தேகமே வேண்டாம் :-))

    பதிலளிநீக்கு
  7. //ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.//

    பரவாயில்லையே எனக்கு 30 வினாடி வரைதான் மூளை வேலை செய்யுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))

    பதிலளிநீக்கு
  8. பட்டாபட்டி.... said...

    ///. ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.//
    கஜினிமாறியா சார்?..///

    எனக்கு இந்த சரித்திரம் ரொம்ப வீக், பட்டா. கஜினியா, ரஜினியா?

    //ஆமா.. இது நீங்க தூங்கும்நேரம் ஆச்சே.. இப்ப எதுக்கு முழிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஓ..
    சரி சார்..மிக்ஸி டெலிவரியானதும் போன் பண்ணுங்க.. பார்க்க வாரேன்...//

    மிக்சி எப்ப வரும்கிற நெனப்புல இப்ப எல்லாம் தூக்கமே வரதில்ல, பட்டா. வந்ததும் கட்டாயம் போன் பண்ணறேன். சிங்கைக்கு லோகல் கால்தானே பட்டா?

    பதிலளிநீக்கு
  9. தமிழ் உதயம் said...

    //பெயர்க்காரணம் பெரிசா இருக்கும்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.//

    உங்களை ஏமாத்தினதிற்கு பெரிதும் வருந்துகிறேன். ஏமாற்றத்திற்கு மாற்றாக ஜவ்வு மிட்டாய் வாங்கி அனுப்பட்டுமா?

    பதிலளிநீக்கு
  10. Lakshmi said...

    //ஏங்க இதுக்குப்பெயர்தான் பெயர்க்காரணமா? சூப்பர். உங்கலைத்தொடர்பதிவு எழுதக்கூப்பிட்டாங்க இல்லியா, அவங்களுக்கும் படிக்கும் எங்களுக்கும் இதுவும் வேணும், இன்னமும்வேணும்.//

    ஏனுங்க, குருடனை ராஜ பார்வை பார்க்கச் சொன்னா அவன் என்னங்க பண்ணுவான்?

    சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்? நம்ம சரக்கு தீந்து போச்சுங்க, இனி புதுசா சப்ளை வந்தாத்தான் உண்டுங்க.

    பதிலளிநீக்கு
  11. அன்னு said...

    //ஹெ ஹெ ஹெ... தப்பா எடுத்துக்காதீங்க சார். பழைய பதிவுல இருந்த ஹெ ஹெ யும் பாராட்டுதேன். இந்த ஹெ ஹெயும் பாராட்டு தேன்.//

    தேனுக்கு நன்றி. நான் எப்பவும் எதையும் தப்பாவ எடுத்துக்கிறதில்ல. நேராத் தேன் எடுத்துக்குவேன்.

    //அரைப்பக்க கதை எழுதுற மாதிரி ஒரு பதிவை எழுதியிருக்கீங்க.//

    லக்ஷ்மி அம்மாவுக்கு எழுதிய பதிலைப் படித்துக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  12. ஜெய்லானி said...

    //இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் உபயோகத்துக்காக...//
    ஒரே ஒரு சந்தேகமுங்க எனக்கு

    நானும் ஒவ்வொரு தடவையும் கேக்கனுமின்னு வந்து மறந்து போய்டுவேன் ..
    உங்க பிளாக் வரவங்க பெரும்பாலும் ஃபோலோயர்தான் .. அப்புறம் யாருங்க இந்த பொது மக்கள் ..ஹி..ஹி... :-)))

    வருங்கால முதல்வர்கிட்ட கேக்க வேண்டிய கேள்விங்க இது. கேட்டா நல்ல பதிலா மிக்ஸ் பண்ணிக் கொடுப்பாருங்க.

    பதிலளிநீக்கு
  13. டாக்டர் சார் மிட்நைட்;ல பதிவு போட்டிருக்காரே.. வீட்ல சணடை போல.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  14. சி.பி.செந்தில்குமார் said...

    //டாக்டர் சார் மிட்நைட்;ல பதிவு போட்டிருக்காரே.. வீட்ல சணடை போல.. ஹா ஹா//

    ஐயையோ, என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்க போல இருக்கே. 12.45 pm அப்படீன்னா பகலுங்க, ராத்திரி இல்லீங்க. அப்புறம் ராத்திரி 12 மணி எப்படி இருக்கும்னே எனக்குத் தெரியாதுங்க. 9 மணிக்குப் படுத்து காலைல 3 மணிக்கு எழுந்திருக்கிற ஜாதிங்க நானு.

    பதிலளிநீக்கு
  15. சார், கோயமுத்தூர்ல முக்குனா கைது பண்றாங்களாமே....?

    பதிலளிநீக்கு
  16. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //சார், கோயமுத்தூர்ல முக்குனா கைது பண்றாங்களாமே....?//

    நான் வீட்டை விட்டு வெளியில் போய் ஒரு மாசம் ஆச்சு, ப.ரா. ஊருக்குள்ள என்னென்னமோ நடக்குதுன்னு பேசிக்கிறாங்க. ஆனா எனக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் போலீஸ்காரங்க புடிங்கீக்கராங்களாம். அதுதான் எனக்குப் பெருங்கவலை இப்போ.

    பதிலளிநீக்கு