செவ்வாய், 29 ஜனவரி, 2013

எத்தனை பட்டும் புத்தி வரவில்லையே?

நம் தொழில் நுட்ப பதிவர்கள் சில முறை நல்ல உதவி புரிந்தாலும் பெரும்பாலான தடவைகளில் தவறான பாதைகளைக் காட்டி விடுகிறார்கள்.

இன்டர்நெட்டில் நல்ல பல புரொக்ராம்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் பல புரொக்ராம்கள் சோதனைப் பதிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன. நம் தொழில் நுட்ப பதிவர்கள் ஒரு புரொக்ராமை பரிந்துரைக்கும்போது, இது சோதனைக்காக மட்டும், சோதனைக் காலம் முடிந்ததும் இதற்கு நீங்கள் விலை கொடுக்கவேண்டும் என்று ஏன் சொல்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை?

ஆகவே, சக பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. தேவையில்லாமல் தொழில் நுட்ப பதிவர்கள் பரிந்துரைக்கும் புரொக்ராம்களை தரவிறக்கி, தலைவலியையும் திருகு வலியையும் ஒன்றாக வாங்கவேண்டாம். எல்லா தொழில் நுட்ப பதிவுகளும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான்.

ஏன் இவ்வளவு காட்டமாக எழுதுகிறேன் என்றால், பல முறை சூடு வாங்கியதால்தான். இன்று வாங்கிய சூடு கொஞ்சம் அதிகமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.

22 கருத்துகள்:

  1. /////எல்லா தொழில் நுட்ப பதிவுகளும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான்//////////
    உண்மைதான் த.ம3

    பதிலளிநீக்கு
  2. வாங்கிய சூடு கொஞ்சம் அதிகமான காயத்தை ஏற்படுத்தி விட்டது../

    எனக்கு கணிணி கொடுக்குமுன்பே எச்சரிக்கையோடுதான் கொடுப்பார்கள்..
    எதையும் தரவிறக்கம் செய்துவிடக்கூடாது என்று ..

    பதிலளிநீக்கு
  3. என்ன...மிஞ்சி மிஞ்சி போனா வட்டை Format பண்ணியிருப்பீர்கள் அதுவும் ஒரு அனுபவம் தானே? சொந்த கோப்பு எல்லாம் போச்சா? அதுக்கு தான் கூகிள் டிரைவ்,ஸ்கை டிரைவ் என்று இருகே அதில் போட்டு வைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லா வேலையையும் செய்து முடித்தபிறகு "சேவ்" போட்டால் எவாலுவேஷன் வெர்ஷன் என்று வருகிறது. இது ஏமாற்று வேலைதானே. இப்படி ஏமாந்து விட்டோமே, ஏமாற்றுகிறார்களே என்ற கோபம்தான்.

      நீக்கு
  4. இலவச மென்பொருட்கள் பற்றி சொன்னது உண்மை. நூறு சதவிகிதம் இலவசமாகவும் சில (மிகச்சில) கிடைக்கிறது. GIMP போல. மற்றவை கொஞ்சநாள் இலவசம். பின்னர் காசு. கொடுமை இலவசமாக இருக்கும்போது அதில் செய்த வேலைகள் பின்னர் பயன் படுத்த முடியாமல் போவது. There is no such thing like free meal என்று சொல்வது மென்பொருட்கள் விஷயத்தில் மிகச்சரி!

    பதிலளிநீக்கு
  5. நானும் வாங்கியது உண்டு.....விழிப்புடன் இருப்போம்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. //பல முறை சூடு வாங்கியதால்தான். இன்று வாங்கிய சூடு கொஞ்சம் அதிகமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.//

    ஹா... ஹா...

    எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. நண்பரே நான் எப்பொழுதும் இது சோதனை பதிப்பு முழுவதும் இலவசம் என்று தனியாக சொல்லிதான் பதிவிடுவது வழக்கம் அதற்காக அனைவரையும் குறை கூடாது எந்த பிரச்சனை என்றாலும் கூகிளை நாடுகிறீர்கள் அல்லது தொழில்நுட்ப பதிவர்கள் உதவுங்கள் என்று கேட்கிறீர்கள். ஆகையால் அனைவரையும் குறை கூற வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அனைவரையும் குறை சொல்லவில்லை. பெரும்பாலான தொழில்நுட்ப பதிவுகளில் இந்த தகவல் இருப்பதில்லை. இந்த தளத்தைப் பாருங்கள்.
      http://velang.blogspot.com/2013/01/wedding-album-maker.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FIZKar+%28%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%29

      நீக்கு
  8. நண்பரே நான் எப்பொழுதும் இது சோதனை பதிப்பு முழுவதும் இலவசம் என்று தனியாக சொல்லிதான் பதிவிடுவது வழக்கம் அதற்காக அனைவரையும் குறை கூடாது எந்த பிரச்சனை என்றாலும் கூகிளை நாடுகிறீர்கள் அல்லது தொழில்நுட்ப பதிவர்கள் உதவுங்கள் என்று கேட்கிறீர்கள். ஆகையால் அனைவரையும் குறை கூற வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, இதற்கு பதில் கொடுத்தால் அது அவமரியாதையாகப் போய்விடும். குறை கூறவில்லை. உபயோகிப்பவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

      இந்த பதிவிற்கு சென்று பாருங்கள்.

      http://velang.blogspot.com/2013/01/wedding-album-maker.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FIZKar+%28%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%29

      எங்காவது இது சோதனைக்காக மட்டும் என்று தள ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறாரா?

      நீக்கு

  9. எனக்குத் தெரிந்தது மிகக் குறைவு. தெரியாத விஷயங்களில் கை வைப்பது இல்லை எனலாம். ஆனால் என் பாடு வேறு விதம். மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ என்னைச் சூடாக்குகிறார்கள். !

    பதிலளிநீக்கு
  10. தரவிறக்கும் போதும் சரி , நிறுவும் போதும் சரி, திறக்கும் ஒவ்வொரு தரவையும் கூட ஒரு எச்சரிக்கை நிச்சயம் வரும். அதை எல்லாம் கவனிக்காது Save செய்யும் போது பிரச்சனை என்பது உங்கள் தவறல்லவா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். இந்த புரொக்ராமில் அப்படி ஏதும் வரவில்லை. தரவறக்கும்போதோ, நிறுவும்போதோ அப்படி வந்திருந்தால் நிச்சயம் அப்பொழுதே அதை ஸ்டாப் பண்ணியிருப்பேன்.

      நீக்கு
  11. நீங்கள் எந்த program(s) என்று சொல்லவில்லையே. ஆனால் உங்கள் குற்றசாட்டு உண்மை தான். பலரும் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எங்கெல்லாம் சென்று பொறுக்க முடியுமோ அங்கெல்லாம் சென்று பொறுக்கி போடுகிறார்கள்-அவர்களே பயன்படுத்தியே இருக்க மாட்டார்கள். உங்களில் தான் முன்னோட்டம் பார்க்கின்றனர் போல. தரவிறக்க முதல் நிச்சயம் நீங்களும் இணையத்தில் தேடிப்பார்ப்பது நல்லது. www.toptenreviews.com இதற்கு பிரபலமான ஒரு தளம்.

    பதிலளிநீக்கு
  12. ஏதாவது தேவைக்கு (இலவச) மென்பொருள் தேவைப்பட்டால் http://sourceforge.net/ இல் நிச்சயம் தேடிப்பாருங்கள். Opensource இன் மிகப்பெரும் களஞ்சியம்.. இதிலும் பொருத்தமானது கிடைக்கவில்லை என்றால் Ubuntu போன்ற Open source OS க்கு மாறலாம். இங்கு இவற்றுக்கு கிடைக்காத எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. மதிப்பிற்குரிய ஐயா திரு பழனி.கந்தசாமி அவர்களின் பய்னுள்ள பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. மிகச் சமீபத்தில்தான் இதே விஷயம் சொல்லியிருந்தீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே, அதனால்தான் ஏமாற்றம் அதிக வேதனையைத் தந்து விட்டது.

      நீக்கு
  15. சூடு வாங்கமல் தப்ப உதவியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  16. please use this serial
    000K5U-7AFGKJ-N10B91-VF586P-ZWT2GH-HQNTTR-7AH5U0

    பதிலளிநீக்கு