வெள்ளி, 18 ஜனவரி, 2013

கால் கழுவுவது எப்படி?

இந்தியன் டைப் அல்லது வெஸ்டர்ன் டைப், இதில் எதில் நீங்கள் காலைக் கடனைக் கழித்தாலும் "கால் கழுவ" வேண்டும். "கால் கழுவுதல்" என்றால் என்ன என்று புரியும் என்று நினைக்கிறேன். புரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நேரடி டெமான்ஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


இந்தியன் டைப் டாய்லெட் உபயோகப்படுத்திய பின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். வலது கையில் "மக்" கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பின்புறம் கொண்டு சென்று அந்த நீரை முக்கிய இடத்தில் மெதுவாக ஊற்றி, இடது கையால் அந்த பாகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவது முறையும் இதே மாதிரி செய்யலாம். அது நல்லதே. ஒரு முக்கிய குறிப்பு. இவ்வாறு நீங்கள் கால் கழுவும்போது அந்த தண்ணீர் முழுவதும் டாய்லெட் பேசினுக்குள் விழுமாறு கழுவ வேண்டும். இது முக்கியம். பாத்ரூம் முழுவதையும் அசிங்கப் படுத்தி விடக்கூடாது.  இதற்குப் பிறகு மக்கில் தண்ணீர் எடுத்து டாய்லெட் சீட்களை கழுவி விடவும்.

எனக்கு முன்னாடியே ஒரு அன்பர் இந்தப் பிரச்சினையை அலசி, ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் செய்திருக்கிறார். அந்தக் கோணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=dKkryfdtMNQ

இதன் பிறகு நம் ஆட்கள் செய்வதுதான் கொடுமையின் உச்ச கட்டம். இந்தக்காரியம் முடிந்தபின் அப்படியே அல்லது இடது கையை வெறும் தண்ணீரில் கழுவிவிட்டு மற்ற வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். மனிதக் கழிவில் எவ்வளவு நோய்க் கிருமிகள் இருக்கின்றன என்ற அறிவு இல்லாததால் அவர்கள் செய்யும் காரியம் இது. கால் கழுவிய பின், இரு கைகளையும் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் ஒரு சுத்தமான துவாலையில் கைகளை ஈரம் போகத் துடைக்கவேண்டும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தினம் ஒரு முறைதான் இதைச் செய்யவேண்டி வரும். அதற்குக் கூட சோம்பல்பட்டால் உங்கள் சுகாதார உணர்வை என்ன சொல்லி, எப்படித் திருத்துவது? வட இந்தியாவில் ஒவ்வொருவரும் டாய்லெட் உபயோகிக்கச் செல்லும்போது தவறாமல் சோப்பு டப்பாவை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் இரண்டு கையாலும் சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு இந்த முன்ஜாக்கிரதை அவசியம்.

அடுத்து வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டில் நம் காரியத்தை முடித்தபின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். இதற்கு பல வழிகள் இருக்கின்றன.

முதல் வழி - டாய்லெட் பேப்பர் உபயோகிப்பது. இது நம் ஊருக்கு சரிப்பட்டு வராது. ஆகையால் அதை விட்டு விடுவோம். 

இரண்டாவது வழி - இந்தியன் டாய்லெட்டில் கடைப்பிடிப்பது போலவே, மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கால் கழுவுவது. இதற்கு நீங்கள் டாய்லெட் சீட்டில் சிறிது முன் நகர்ந்து உட்காரவேண்டும். கால் கழுவும் தண்ணீர் முழுவதும் பேசினுக்குள்ளேயே விழ வேண்டும். பின்பு டாய்லெட்டை மற்றுமொரு முறை பிளஷ் செய்யவேண்டும். பின்பு எழுந்து டாய்லெட்டை மூடிவிட்டு, கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்ளவேண்டும்.

மூன்றாவது வழி - "பிடெட்" உபயோகிப்பது. 


இதை எடுத்து பின்புறம் கொண்டுபோய் அந்த லிவரை அழுத்தினால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். நாம் கழுவ வேண்டிய பகுதிக்கு தண்ணீர் செல்லுமாறு சிறிது நேரம் பிடித்துக்கொண்டு இருந்தால் அந்தப் பகுதி நன்றாகச்சுத்தமாகிவிடும்.
நம் கை அசுத்தமாகாது. ஆகவே இது மிகுந்த சுகாதாரமானது. இது மாதிரியே டாய்லெட்டுடன் சேர்ந்தே இருக்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய்களும் உண்டு.

இப்படியாக நாம் கால் கழுவும் படலத்தை முடித்தோம். ஏதாவது குறிப்புகள் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் மக்களுக்கு உபயோகப்படும். 

அடுத்த பதிவில் "வாஷ் பேசினை" உபயோகிப்பது பற்றியும் மற்ற குளியல் விஷயங்களையும் பார்ப்போம்.

16 கருத்துகள்:

  1. இரு தவறுகள் உங்கள் தகவலில். 1. சரியான உச்சரிப்பு 'பிடே' என்பதே. கடைசியில் வரும் டி-யை உச்சரிக்க க்கூடாது. 2. இதைவிடப் பெரிய தவறு, உங்கள் புகைப்படத்தில் இருப்பது ஃபாசெட் எனப்படும் குழாய்தானே தவிர இது பிடே அல்ல. இக்குழாயைச் சிலர் 'வாஷ் பைப்' அல்லது 'ஹேன்ட் ஷவர்' என்றுகூடக் குறிப்பிடுவார்கள் (உண்மையில் இது ஹேன்ட் ஷவர் அல்ல என்றாலும்). பிடே என்பது நீர் பீச்சக்கூடிய வசதிகொண்ட சீட் ஆகும். பார்க்க http://www.nachi.org/bidets.htm.

    அடுத்து, தண்ணீரை உபயோகிக்கும் முன் டாய்லட் பேப்பரை உபயோகிப்பது சுகாதாரமானது. கைகள் அதிகம் அசுத்தமாகாமல் இருக்கும்.

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1.நீங்கள் சொல்லும் உச்சரிப்பு சரி. I stand corrected.
      2.அப்படியானால் என் பதிவில் இருக்கும் இரண்டாவது படம் சரி என்று நினைக்கிறேன்.
      3.நீங்கள் சொல்லும் டாய்லெட் பேப்பர் உபயோகிப்பது சரியாகத்தான் படுகிறது. ஆனால் இந்த டாய்லெட் பேப்பர் முறை நம் ஊரில் இன்னும் பிரபலமாகவில்லை.

      உங்கள் விளக்கங்களுக்கு நன்றி, சரவணன். எப்படியோ சில தெரியாத, ஒருவரும் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சில தேவையான விவரங்கள் வெளியில் தெரிவது ஒரு நல்ல விஷயம்தானே.

      நீக்கு
    2. ரொய்லட் பேப்பரால் முதல் துடைத்து விட்டு பிறகு 'கால் கழுவுவது' நல்லது. கையில் படும் ?' யின் அளவு குறையும். Best of both, eastern and western.

      நீக்கு
  2. உபயோகமான குறிப்புகள். காணொளி நான் காணவில்லை! அப்புறம் காண்கிறேன். இது பெரும்பாலும் யாரும் தவறாகச் செய்ய மாட்டார்கள் என்றே நம்புகிறேன். கைச் சுத்தம் செய்து கொள்ள எத்தனையோ hand wash liquid கள் கூட கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. பேப்பர் பயன்படுத்தும் முறை நம் ஊரில் பிரபலம் ஆகாது. காரணம் வெளிநாடுகளில் அதிகமாக கார உணவுகளை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு ஆட்டுப்புழுக்கை போல் வரும். தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டிய அவசியம் இல்லை, துடைத்துவிட்டுப் போனால் போதும். ஆனால் நாம் சாப்பிடும் உணவோ அதிக காரமும் மசாலாவும் கலந்ததாக இருப்பதால் நமக்கு கொஞ்சம் செமி சாலிட் ஆக வரும். வெறுமனே பேப்பரில் துடைப்பதென்பது சரி வராது.

    பதிலளிநீக்கு
  4. பலர் சொல்லத் தயங்குவதை, செய்யும் தவறை, எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல உபயோகமான பதிவு. கால் கழுவும் போது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறை சாப்பிட போகும் போதும் நன்றாக சோப் கொண்டு கைகளை கழுவுவது அவசியம்.

    நான் முதன் முதலில் 2000 ஆம் ஆண்டு லண்டனில் இருந்த போது hand wash liquid உபயோக படுத்த துவங்கினேன். இன்று வரை எங்கள் வீட்டில் உப்பு மிளகாய் ஸ்டாக் இருக்கிறதோ இல்லையோ hand wash liquid எப்போதும் ஸ்டாக் இருக்கும். அப்போதெல்லாம் இந்தியாவில் hand wash liquid எல்லா இடங்களிலும் கிடைக்காது அப்படியே இருந்தாலும் அதை சொல்லி புரிய வைத்து வாங்குவது பெரும் பாடாக ஆகி விடும். சோப்பை விட hand wash liquid பயன்படுத்துவது பல மடங்கு சுகாதாரமானது.

    பதிலளிநீக்கு
  6. "காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடுத்த பதிவு என்பதை

    எதிர்பார்க்கலாமா சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவிற்கு அருமையான ஐடியா கொடுத்தமைக்கு மிக்க நன்றி, ஆர்ஆர்ஆர்.

      நீக்கு
    2. காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

      நீக்கு
  7. பதிவும் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும் மிக உபயோகமாக இருந்தன! நான் கூட முதலில் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்த முடியாமல் தவித்ததுண்டு! சுகாதாரமான வாழ்க்கைக்கு அவசியமான பதிவு! நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    பதிலளிநீக்கு