புதன், 23 ஜனவரி, 2013

மனிதனுக்குள் ஒரு மிருகம்

மனிதன் ஆதி காலத்தில் மிருகமாக இருந்து, பின்பு மனிதனாக மாறினான் என்று உயிரியல் தத்துவங்கள் கூறுகின்றன. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு என்னவென்றால், மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலருக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

மனிதன் மிருகமாக செயல்பட்டதை சமீபத்தில் பார்த்தோம். ஆகவே மனிதனுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அது அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால்தான் மனிதன் அனுபவிக்கும் பல இன்பங்களை மிருக-இன்பம் (Animal Pleasure) என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு, பசிக்காக உணவு உண்கிறோம். தாகத்திற்காக தண்ணீர் குடிக்கிறோம். வேறு காரணங்களுக்காக என்னென்னமோ செய்கிறோம். இதையெல்லாம் மிருக-இச்சை என்று சொல்கிறோம் அல்லவா? ஒருவன் நாகரிகமில்லாமல் சாப்பிட்டால் என்ன சொல்கிறோம், “பன்னி மாதிரி தின்கிறான் பார்” என்று சொல்கிறோம். ஒருவன் நன்றாகச் சாப்பிட்டு விட்டு, படுக்கையில் படுத்து புரண்டால் “மலைப் பாம்பு தின்னுப்புட்டு நெளியற மாதிரி நெளியறான் பாரு” என்று சொல்கிறோம். ஏனென்றால் இவையெல்லாம் மிருக இச்சைகள்.

குளிப்பது மனிதனின் தேவை. மற்ற மிருகங்களும் குளிக்கின்றன. சீக்கிரம் குளிப்பவனை காக்காக் குளியல் போடுகிறவன் என்று சொல்கிறோம். சொரணை கம்மியாக இருப்பவனைப் பார்த்து “எருமை” என்று சொல்கிறோம். இதையெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நாம், பாத் டப்பில் குளிப்பவனை, (பாத் டப்பில் என்ன குளியல், தண்ணீரில் ஊறிக் கிடப்பதுதானே) குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையுடன் ஒப்பிடுவதில் ஏதாவது தப்பு இருக்கிறதா? நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்.

கடைசி செய்தி: எருமைகள் சங்க வக்கீல் என் மீது கேஸ் போட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி.

29 கருத்துகள்:

  1. கேஸ் வந்தா பார்த்துக்கலாம் சார். கலக்குங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப தேங்க்ஸுங்க, நீங்க எல்லாம் இருக்கற தைரியத்திலதான் உசிர வச்சிக்கிட்டிருக்கேன்.

      நீக்கு
  2. படமும் அதனைத்தொடர்ந்த சிந்தனையும் அருமை
    வெகு சுவாரஸ்யம்.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பத்திரிக்கை அறிவிப்பு

    **************************
    எங்கள் கட்சிக் காரர் திரு அருமை ராஜன் சாரி எருமை ராஜன் தலைவர் எருமைகள் சங்கம் 777, எருமை ராஜன் நகர், எருது நகர் பின் கோட் 7777777

    என்ற விலாசத்தில் வசிக்கும் அன்னார் சார்பாக நான் அறிவிப்பது என்னவென்றால் தாங்கள் தங்கள் வலைப்பூவில் அவரது இனமான

    எருமைகளைப் பற்றி மிகமிகக் கேவலமாக அதுவும் மனிதர்களுடன் சம்பந்தப் படுத்தி எழுதி உள்ளீர்கள் .

    இதனால் எங்கள் கட்சிக் காரர் மனவருத்தம் அடைந்து அதே மனக் கிலேசத்துடன்

    NATIONAL HIGHWAYS ஐ கடக்கும் போது, மனிதர்கள் ஒட்டி வந்த MATADOR VAN ஒன்று இடித்து மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு MENTAL DEPRESSION வருவதற்கும் காரணமாக உங்கள் எழுத்து உள்ளது .

    இந்த அசெளகர்யங்களினால் ஏன் உங்கள் மீது எ.பி.கோ. செக்ஷன் 707

    பிரகாரம் மான நஷ்ட ஈடு வழக்கு போடக்கூடாது என்பதற்கும் , தங்களால்

    என் கட்சிக் காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஏன் ஏழு மிலியன் டாலர்

    அபராதம் விதிக்க கூடாது என்பதற்கும் இந்த அறிவிப்பு கண்ட எழுபத்திஏழு நாட்களுக்குள்

    பதில் தருமாறு எங்கள் கட்சிக் காரர் சார்பாக கோரப் படுகிறது. அப்படி தங்களிடமிருந்து பதில் வராத பட்சத்தில் இந்த அறிவிப்பையே சம்மதமாக

    எடுத்துக் கொண்டு தங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் படும் என்று

    இதன் மூலம் கடுமையாக எச்சரிக்கை செய்யப் படுகிறது .



    இவண் ,

    எங்கள் கட்சிக் காரர் எருமை ராஜன் சார்பாக ,



    எம தர்ம ராஜன் எம்.ஏ .பி. எல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமி, என்னை மன்னிச்சுடுங்க, நான் அப்ரூவரா மாறிக்கிறேன்.

      நீக்கு
  4. ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

    http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

    பதிலளிநீக்கு
  5. \\ நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்.\\ மனிதனை நாயி, பன்னி, கழுதை, குரங்கு என்றெல்லாம் காலங் காலமாகத் திட்டி அவற்றை மிகவும் அவமானப் படுத்தி விட்டோம் என்பது வருந்தத் தக்கது. உண்மையில் அவை அவ்வளவு கேவலமானவை அல்ல, மனிதனை விட ஆயிரம் மடங்கு மேலானவை, நியதிப் படி நடப்பவை. மனுஷனுக்கு ஒண்ணுமே கிடையாதே..........

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்வது சரிதான். எருமைகள் தான் மனிதனை அவைகளோடு ஒப்பிட்டதற்கு வருத்தப்படவேண்டும். மிருகங்களுக்கு இருக்கிற நல்ல குணங்கள் மனிதனுக்கு இல்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  7. சார், என் படத்தை இப்படி அனுமதியில்லாமல் நெட்டில போட்டு ஏன் எல்லோரையும் பயமுறுத்திறீங்க???????----எருமைதாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சுக்கோங்க, தெரியாம செஞ்சுட்டனுங்க. இனிமேக் கொண்டு உங்க படத்தை போடறதுக்கு முன்னயே பர்மிஷன் வாங்கிடறனுங்க.

      நீக்கு
  8. சார்..எனக்கு வேற வழி தெரியவில்லை... நம்ம பொழைப்பும் ஓடணுமே!

    பதிலளிநீக்கு
  9. //பாத் டப்பில் குளிப்பவனை, (பாத் டப்பில் என்ன குளியல், தண்ணீரில் ஊறிக் கிடப்பதுதானே) குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையுடன் ஒப்பிடுவதில் ஏதாவது தப்பு இருக்கிறதா? நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்.//


    ’எருமை’யுடனான தங்களின் ஒப்பீடு ’அருமை.’ ;)))))

    பதிலளிநீக்கு
  10. //மனிதன் ஆதி காலத்தில் மிருகமாக இருந்து, பின்பு மனிதனாக மாறினான் என்று உயிரியல் தத்துவங்கள் கூறுகின்றன//

    ஐயய்யோ போச்சு! கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கெல்லாம் ஏஜண்டுகள் இருக்காங்க, சரி பண்ணீடலாம்.

      நீக்கு

  11. கூட்டாகத் தவறு செய்யும்போதுதானே அப்ரூவராக மாற முடியும். தனிப்பட்ட முறையில் குற்றம் செய்தால் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியானால் குற்றத்தை ஒப்புக்கொள்வோம். எப்படியும் நமக்கு அவர் (எருமை - எமனேறும் வாகனம்) தயவு வேண்டுமல்லவா?

      நீக்கு
  12. நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்..

    பதிலளிநீக்கு
  13. **** வேறு காரணங்களுக்காக என்னென்னமோ செய்கிறோம். ****

    புரியலை... இதைக் கொஞ்சம் விளக்கமா எழுதுங்களேன்! அப்படியே ஒரு வீடியோக் காணொளியை எம்பெட் பண்ணிடுங்க, ஈஸியா புரியும் :-)

    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க நியூஸ் பேப்பர் படிக்கிறதில்லைன்னு நினைக்கிறேன். தினத்தந்தி ரொம்ப நல்ல பேப்பர். வாங்கிப் படிங்க. அப்புறம் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்க மாட்டீங்க.

      நீக்கு
  14. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
    தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    பதிலளிநீக்கு