காதலர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதலர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.



காதலர் தினம் அதாவது Valentine Day என்று சொல்லப்படும் ஆங்கில மோக கலாச்சாரம் எப்படியோ நம் நாட்டு இளைஞ-இளைஞிகளிடம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை நேற்று எல்லோரும் பிரபலமாகக் கொண்டாடினார்கள். பல பதிவர்களும் அதற்கு ஜால்ரா கவிதைகள்  போட்டார்கள்.

ஆனாலும் நம் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது என்பது உலகம் அறிந்ததே. முந்தாநாள் ஒரு ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு பெண் செத்து, புதைத்த இடத்தில் இன்னும் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள் காதல் புராணம். மக்களுக்கு மனச்சாட்சியே கிடையாது.

இதுவரை டில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் ஏகப்பட்ட பேர் போராட்டம் நடத்தி அதில் ஒரு காவலர் கூட இறந்து போனாரே, அந்த சம்பவத்தில் அந்தப் பெண் கூட இருந்தவன் நண்பன் என்றுதான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களே தவிர, யாராவது அந்தப் பெண் ஏன் அவனுடன், வேலையிலிருந்து வந்தவுடன் ஊர் சுற்றினாள் என்று கேட்டார்களா?

எல்லோரும் பெண்கள் அபலைகள் என்று சொல்லுகிறார்களே தவிர, அவர்கள் பண்ணும் அக்கிரமங்களைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அவள் ஆணுடன் பழகுவாள், அவனுடைய எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவாள், திடீரென்று கழட்டி விடுவாள். அந்த இளிச்சவாயன், ஒன்றும் சொல்லாமல் அவள் வாழ்க்கையில் இருந்து மறைந்து விட வேண்டும்.

இது என்னவோ விளையாட்டு என்று இந்த அபலைப் பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின் விளைவுகளைப் பற்றித் தெரியாத அளவிற்கு இவர்கள் என்ன கை சூப்பும் குழந்தைகளா? அதற்கு இந்த வேலென்டைன் ஆட்கள் தூபம் போடுகிறார்கள். என்ன சட்டம் போட்டாலும் பெண்கள் மனது மாறி ஜாக்கிரதையாக செயல்பட்டால் ஒழிய, இந்த சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

எந்த கோவிலுக்கோ, பார்க்குக்கோ, பீச்சுக்கோ, சினிமாக் கொட்டகைக்கோ போய்ப்பாருங்கள் என்னென்ன அக்கிரமங்கள் நடக்கின்றன என்று? யாராவது இதைத் தட்டிக் கேட்க முடியுமா? கேட்டால் மனித உரிமைக் கழகம் மற்றும் பெண்கள் நலப் பாதுகாப்புக் கழகங்கள் வக்காலத்து வாங்கும். அப்புறம், வேறென்ன, போலீஸ் ஸ்டேஷன்களில்தான் திருமணங்கள் உறுதிப்படுத்தப்படும். பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

இத்தகைய காதல் திருமணங்களில் கால்வாசி கூட வெற்றியடைவதில்லை என்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா? எல்லா உயிரினங்களும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான்தோன்றித்தனமாக நடப்பான், அவனை ஒருவரும் கேள்வி கேட்கக் கூடாது?

இதையெல்லாம் காலத்தின் கோளாறுகள் என்று ரொம்ப சுலபமாக  சொல்லிவிடலாம். இந்த பெண்ணியல் நலப் பாதுகாவலர்கள் இதற்கு ஒன்றும் வழிவகை சொல்லமாட்டார்கள். அப்புறம் இதனால் தொடரும் சீரழிவுகளுக்கு மட்டும் ஏன் குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறீர்கள்?