அதற்குள் பொது என் முதுகைச் சுரண்டினான். என்ன என்று திரும்பிக் கேட்டதற்கு குசுகுசுவென்று, இவர்களை இருவரையும் நாம் ஏன் நம் எடுபிடி வேலைகளுக்கு வைத்துக் கொள்ளக்கூடாது, இருவருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது, நாம் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே என்றார். பரவாயில்லையே, நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது, எதற்கும் அவர்கள் அபிப்பராயத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
அவர்களை நீயே கேள் என்று பொதுவிடம் சென்னேன். பொது அவர்களை அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார். என்ன டீல் போட்டாரோ தெரியவில்லை. திரும்பும்போது தலைக்கும் வட்டத்திற்கும் வாயெல்லாம் பல். மந்திரி ஐயா, " அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். எனக்கு தலையும் செக்குவிற்கு வட்டமும் பி.ஏ. வாக இருப்பார்கள் " என்றார். சரி, ஆனால் அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.
அவர்களைப் பார்த்து யமலோகம் பார்த்ததை மறக்காதீர்கள். இன்னொரு முறை போனால் திரும்பி வரமுடியாது, ஜாக்கிரதையாயிருங்கள், உங்கள் பழைய வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.
இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே ரெண்டு தடவை போன். யாரென்று பார்த்தால் நம் நிதி மந்திரி. என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், வரப்போகின்ற தேர்தல் விஷயமாக பி.எம். உங்களைப் பார்க்க விரும்புகிறார். உங்களுக்கு எப்ப சௌகரியப்படும் என்று கேட்கச்சொன்னார், என்றார். நாளைக்கு நான் ப்ரீதான். நீங்கள் மூவரும் பத்து மணிக்கு வந்து விடுங்களேன். அப்படியே லஞ்ச் இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றேன். சரி என்றார்.
மறுநாள் சரியாக பத்து மணிக்கு மூவரும் வந்து விட்டார்கள். என்ன விஷயம் என்று கேட்டேன். தேர்தல் வருகிறது. கட்சியில் இருந்த பணத்தைப் பூராவும் எடுத்து ரிசர்வ் வங்கி கஜானாவில் சேர்த்து விட்டோம். இப்பொழுது தேர்தல் செலவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று கையைப் பிசைந்தார்கள்.
இதற்கா கவலைப் படுகிறீர்கள்? ஒரு கட்சிக்காரனிடத்திலும் காசு இல்லை. போய்க் கேட்டால் ஒருவனும் கொடுக்க மாட்டான். ஆகவே எல்லோரும் ஓட்டாண்டிகள்தான். ஆனால் உங்களுக்கு நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். ஆனால் நான் சொன்ன மாதிரிதான் தேர்தலை நடத்தவேண்டும் என்றேன்.
மூவரும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினார்கள்.
இந்த தேர்தலில் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகிய நீங்கள் இருவர் மட்டும்தான் பழைய ஆட்கள். கட்சித்தலைவர் ஏதோ ஆசை வைத்திருக்கிறேன் என்றாரே, அது என்ன என்றேன். அது ஒண்ணும் இல்லீங்க, அவங்க மகனை கொஞ்சம் மேலுக்கு கொண்டு வரவேண்டும், அவ்வளவுதானே, செஞ்சுடுவோம். அவர் இப்போதைக்கு உதவி பிரதம மந்திரியாக இருக்கட்டும். மற்ற மந்திரிகளைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவோம்.
இப்போது நாம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் இரண்டையும் முதலில் முடித்து விடுவோம். அப்போது நமக்கு ஓரளவு ஜனங்களை எடை போட்டுவிடலாம். இந்த அடிமட்ட தேர்தல்களில் இது வரைக்கும் அரசியலில் ஈடுபடாதவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் நம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவேண்டும். இந்த வேலையை அடிமட்ட கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கவேண்டும். நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம், கல்வி, தொழில், விவசாயம் ஆகிய துறைகளில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றவேண்டும்.
இவர்கள்தான் இனிமேல் இந்தியாவை நிர்வகிப்பார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் தழுவுவார்கள். இவர்களைத்தான் பஞ்சாயத்திற்கும் உள்ளாட்சிகளுக்கும் வரப்போகும் தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்கவைக்கப் போகிறோம். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எதிர்க் கட்சிகள் எந்தப் பொறுப்பிற்கும் வரக்கூடாது. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தல்கள் இவர்களின் பயிற்சி முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம். பயிற்சி நடக்கும்போதே அவர்களின் திறமைகளை கவனித்து அவரவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு நிற்க வைப்போம். நாம் நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களும் ஜெயிப்பார்கள். ஏனெனில் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் ஆதரவு பெற்றவர்கள். இந்தப் பயிற்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.
இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள். அவர்களை முடிந்த மட்டில் வேட்பாளர்களாக நிறுத்துவோம். எதிர்க்கட்சி என்பதே இந்த தேர்தலுக்கு அப்புறம் இருக்கக் கூடாது. பாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை காவலுக்குப் போட்டுவிடலாம். தகராறு பண்ணுகிறவர்களை அவர்கள் நேராக யமபட்டணமே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.
சரியென்று சொல்லிவிட்டு மூவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.
பின் குறிப்பு: இந்த பயிற்சி மற்றும் தேர்தல்கள் நடந்து முடிய கொஞ்ச நாட்கள் ஆகும். அது வரையில் நாம் வேறு பொருட்களைப் பற்றி சிந்திப்போம்.
.
பதிலளிநீக்கு//இடுகையிட்டது பழனி. கந்தசாமி நேரம் 3:49 AM//
.
சில இடுகைகள் நடுசாமத்தில் அல்லது சில இப்படியான நேரம் இதே போக்கில் போனால் நாங்கள் பின்னூட்டம் போட மூன்று ஷிப்ட் போதாதே!?..
.
வயசானா தூக்கம் வருவதில்லை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தின் காரணமாக இவ்வாறு நடுச் சாமத்தில் பதிவுகள் வெளியிடுகிறேன்.
நீக்குகாலை மூன்றேமுக்கால் மணிதான் உங்களுக்கு நடுச் சாமமோ?
டெய்லி உங்க போஸ்ட் வந்து இருக்கா எண்டு பாகுரதுக்க்காகவே ப்ளாக் பக்கம் வந்து போறன்.........
பதிலளிநீக்குரொம்ப நல்ல போகுது. சீக்கிரமா முடிச்சிடவேனாம்.......... ஹஹஹா.............
பாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை காவலுக்குப் போட்டுவிடலாம் உட்பட அனைத்தும் கலக்கல்...
பதிலளிநீக்குஅடுத்த் எலெக்ஷனா.... ஓகே ஓகே....
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வரும் பிரசச்சனைதான் ஐந்துமணி நேரம் தூங்கினாலே போதும் தொடர்ந்து எழுதுங்க அய்யா.
பதிலளிநீக்குபாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை காவலுக்குப் போட்டுவிடலாம். தகராறு பண்ணுகிறவர்களை அவர்கள் நேராக யமபட்டணமே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
பதிலளிநீக்குசிறப்பாக சிந்திக்கிறீர்கள் ஐயா.. பாராட்டுக்கள்.
மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.
பதிலளிநீக்குபதிவுலகம் என்ன ஆகும் ..??!!
நாடு முன்னேறட்டுமுங்க. பதிவுலகத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
நீக்குவேண்டாம் அய்யா
நீக்குஅப்புறம் இந்தமாதிரி கனவுலகத்தில் கூட நல்லதொரு இந்தியாவை காண முடியாது
ஒன்றிரண்டு பதிவர்களை விட்டு வையுங்கள்
அந்த ஒன்றிரண்டில் நீங்கள் உண்டு
சேலம் குரு
உடனடியாக பின்னூட்டங்களை வெளியிட்டு வந்தீர்கள். திடீர் என்று பழைய மாதிரி இப்படி "ஒப்புதலுக்கு பின்னர் உங்கள் கருத்துரை காண்பிக்கப்படும்" என்று சொல்லி விட்டீர்களே.
நீக்குஎதாவது பிரச்சினையாகி விட்டதா
சேலம் குரு
ஒரு பிரச்சினையும் இல்லை. மாடரேஷன் இல்லாததால் பின்னூட்டங்கள் நேராக பதிவில் சேர்ந்து விடுகின்றன. அதை மொத்தமாகப் படிக்க சோம்பலினால் இயலாமல் போகிறது. மாடரேஷன் இருந்தால் பின்னூட்டங்களை நான் படிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் அதை மீண்டும் கொண்டுவந்தேன். வேறு ஒன்றும் தவறு இல்லை.
நீக்கு//நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம்//
பதிலளிநீக்குஇந்தியாவில் இல்லாததெல்லாம் சொல்கிறீர்களே
இப்படியாவது நல்லது நடக்கட்டும்
சேலம் குரு
பதிலளிநீக்குI see all the qualities of a benevolent dictator in you. நாட்டுக்கு முக்கியமான தேவை. . பாராட்டுக்கள்.
//பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் இரண்டையும் முதலில் முடித்து விடுவோம்//
பதிலளிநீக்குஅப்படியென்றால் பொது தேர்தல் நடத்துவதாக உத்தேசமே இல்லையா
நம் நாட்டில் என்றைக்கு பஞ்சாயத்து தேர்தல் உள்ளாட்சி தேர்தல் நடக்கபோகிறது
அப்புறம் என்றைக்கு பொது தேர்தல் நடப்பது.
ஆனால் அய்யா அவர்களின் நேர்பார்வையில் நடப்பதால் கொஞ்சூண்டு நேம்பைக்கை வருகிறது
திருச்சி தாரு
//நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம், //
பதிலளிநீக்குஅய்யா என்னென்னவோ சொல்றீங்க
இதெல்லாம் கனவுல கூட நாங்க பார்த்ததில்லீங்க
ஏதோ அய்யா புண்ணியத்திலே பார்க்கபோகிறோம் போலிருக்கு
திருச்சி அஞ்சு
//இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எதிர்க் கட்சிகள் எந்தப் பொறுப்பிற்கும் வரக்கூடாது. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.//
பதிலளிநீக்குநீங்கள் இப்படி ஒரு ஐடியா செய்தால் எதிர்கட்சிகளாகிய நாங்கள் என்ன செய்வோம். சத்தம் போடாமல் நனக்ள ஆளும் கட்சியில் சேர்ந்து விடுவோம்.
சேலம் அரிசி
//பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள்//
பதிலளிநீக்குபதிவர்களுக்கு மட்டும்தானா
பின்னூட்டம் போடுபவர்களையும் கொஞ்சம் நினைத்து பார்க்கலாமே குறைந்த பட்சம் பஞ்சாயத்து அல்லது உள்ளாட்சி தேர்தலில்களாவது அவர்களை நிற்க வைக்கலாமே
சேலம் குரு
//எதிர்க்கட்சி என்பதே இந்த தேர்தலுக்கு அப்புறம் இருக்கக் கூடாது.//
பதிலளிநீக்குஇது எனக்கு 1976 எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இன்றி தானே கெடும் என்றாகி விட போகிறது
ஓரளவுக்காவது கொஞ்சம் பேரை எதிர் கட்சிகளாக வைத்துகொள்வது நல்லதல்லவா
திருச்சி அஞ்சு
//இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரின்றி தானே கெடும்.//
நீக்குரொம்ப நல்ல குறள்தான். "இடிப்பாரை" வைத்துக்கொண்டு இந்த நாலு வருஷமா நம்ம பார்லிமென்ட் எப்படி நடக்குதுன்னு பார்த்த பிறகும் "இடிப்பாரை" வேண்டுமா? அதற்கு "கடப்பாரை" மேல்.
//ஒரு கட்சிக்காரனிடத்திலும் காசு இல்லை. போய்க் கேட்டால் ஒருவனும் கொடுக்க மாட்டான். ஆகவே எல்லோரும் ஓட்டாண்டிகள்தான். //
பதிலளிநீக்குஏழைகளாகிய நாங்கள் எலெக்சன் சமயத்திலாவது கொஞ்சம் வயிறார உண்டோம். எல்லோரும் ஓட்டாண்டிகள் என்றால் எங்கள் கனவு அவ்வளவுதானா
பாலைவன சோலையாக எலெக்சனைத்தான் நாங்கள் நம்பி இருந்தோம்.
நாங்கள் உங்கள் வீட்டிற்கு வந்து விடுகிறோம். எங்களுக்கு சாப்பாடு போட்டு விடுங்கள்
திருச்சி தாரு
சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
//ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும்......இவர்கள்தான் இனிமேல் இந்தியாவை நிர்வகிப்பார்கள்//
பதிலளிநீக்குஇளைஞிகளை விட்டுவிட்டீர்களே.
33% இப்போதுதான் வராது என்றால் உங்கள் ஆட்சியிலுமா?
திருச்சி அஞ்சு
பதிலளிநீக்கு//ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும்.?/
உங்கள் யோசனையை காங்கிரஸ்காரர்கள் கேட்டால் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டுவரலாம். கேட்பார்களா?
//பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள். அவர்களை முடிந்த மட்டில் வேட்பாளர்களாக நிறுத்துவோம்.//
//மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.//
நல்ல யோசனை!