செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பழைய ஞாபகந்தான் பேராண்டி


பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:14 PM
இன்றைய குழந்தைகளுக்கு அந்த கால ஆசாமியின் ஒரு கடிதம்.
நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF



• தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை

• எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

• முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

குருச்சந்திரன்
பதிலளிநீக்கு
பதில்கள்
  1. பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:19 PM

    எங்கேயோ படித்த ஞாபகம் என்று என் நண்பன் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம்.
    குருச்சந்திரன் அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது.

    செல் போன் டவர்களால் தொலைந்து போன சிட்டு குருவிகளின் கீச் கீச் குரல்கள் 

    நானும் வீரன்தான் என்று காட்ட, பயந்து பயந்து மாடு விரட்டிய நம் ஊர் மஞ்சு விரட்டு மைதானம் 

    பெரிது பெரிதாக தொங்கிய விழுதுகளில் ஊஞ்சல் ஆடி மனம் களித்த நம் ஊர் பள்ளிகூடத்திலிருந்த ஓங்கி வளர்ந்த ஆலமரம் 

    காத்திருக்கும் போது வராமல் பாதி தூரம் நடந்த பிறகு நம்மை கடந்து போகும், ஒரே ஒரு முறை நம் ஊருக்கு எட்டிப்பார்க்கும் பேருந்து 

    யாயும் நீயும் யாராகியரோ என்று இருந்த நம்மை பின்னர் செம்புல பெய நீர் போல நண்பர்களாக்கிய நம்மூர் திருவிழாக்கள் 

    தூக்கி போடு நீச்சல் தன்னாலே வந்துடும் என்று சொல்லி தள்ளி விட , நெஞ்சில் சிலீர் என்று நீர் தெளித்த ஆழ் கிணறுகள் 

    அக்கம்பக்கத்து நண்பர், நண்பிகளுடன் சேர்ந்து விளையாடும்போது மரத்தடியில் நெருப்பு மூட்டி ஆக்கிய கூட்டாஞ்சோறு 

    பாங்குல இருக்கோ இல்லையோ எப்போதும் காசு வைத்திருக்கும் எங்க வீட்டு ஆயாவின் இடுப்பிலிருக்கும் சுருக்குப்பை 

    பாம் பாம் என்ற சத்ததுதுடன் வந்த காரை மார்க் 1,2,3 என்றுவகை பிரித்த பணக்கார வீட்டு பையன் 

    மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி 

    முகத்தை மட்டும் விட்டுட்டு உடம்புலே எங்கே வேணுமானாலும் விளாசலாம், பையன் மட்டும் நல்லா படிக்கணும்னு வாத்தியாருக்கு அனுமதி தந்த அப்பா அம்மா

    இதெல்லாம் நான் உனக்கு எப்படி காட்டுவேன்?
    எல்லாமே என் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே

    திருச்சி அஞ்சு

21 கருத்துகள்:

  1. இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்//சந்தேகமென்ன நீங்க அதிஷ்டசாலிதான் சார்

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்.

    1800 களில் பிறந்தவர்கள் 1900 களில் பிறந்தவர்களைப் பற்றிக் கூட இதே போல நினைத்திருப்பார்களோ!

    அறியாத சுகங்களின் அருமை தெரியாதவர்கள் இப்போது அனுபவிக்கும் சுகங்களைப் பெரிதாக பின்னாளில் நினைத்து மகிழலாம்! :)))

    பதிலளிநீக்கு
  3. அதிஷ்டசாலிதான் ...!

    எல்லாமே நம் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே...!

    பதிலளிநீக்கு
  4. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அந்த நாட்களை நினைத்துப் பார்த்து மனதில் அசை போடத்தான் முடியும். இனி அவைகள் வாரா!

    பதிலளிநீக்கு
  5. அது ஒரு பொற்காலம்தான்! பொழுதுபோக்கு சாதனங்கள் ஓவராக வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டன. என்றைக்காவது சினிமாவுக்குப் போவதில் இருக்கும் த்ரில் வீட்டில் மலையாகக் குவிந்திருக்கும் டிவிடிக்களில் வராது!

    ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி
    192 தம்பிடி = 16 அணா.
    ஒரு அணாவுக்கு 12 தம்பிடி
    கால் அணாவுக்கு 3 தம்பிடி. இதற்கு வாங்கக் கூடிய பொருட்களே அந்தக் காலத்தில் ஏராளம்!
    (மேற்படிகள் நான் படித்தவை, கேள்விப்பட்டவையே; அந்தப் பொற்காலத்தில் நான் பிறக்கவில்லை!)

    பிறகு ரூபாய், பைசா வந்தது. இந்தப் புதுப் பைசாவை எனக்குத் தெரிந்து 'நயா பைசா' என்பார்கள். 'பால் ஐஸ் 10 என்.பி'. என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம். இந்தக் காலக் குழந்தைகளுக்கு என்.கி. என்றால் புரியாது! இவ்வளவு ஏன், பைசா என்கிற சாமாச்சாரமே ஏறக்குறைய ஒழிந்துவிட்டது! இன்னும் 5 வருடங்களில் அரசாங்கமே பைசா என்ற அளவீடு ஒழிந்தது என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை!

    சரவணன்

    பதிலளிநீக்கு
  6. நானும் அந்தப் பொற்கால நினைவுகளில்
    மூழ்கி மகிழ்ந்தேன்.மனம் கவர்ந்த பதிவுக்கு
    மனமார்ந்த நன்றி,தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. Very meaningful entry. Yes, life was less stressful and fulfilling those days.

    Except - we had plenty of beggars even in those days.

    பதிலளிநீக்கு
  8. 1930 - 60 பொற்காலம்!
    1960 - 80 செம்புக்காலம்!
    1980 - 2000 இரும்புக்காலம்!
    21ம் நூற்றாண்டு - கற்காலம்!

    செல்ஃபோன், நெட், ஐபேட், டிடிஎச். டிவி போன்றவை வாழ்க்கையை மேம்படுத்த என்று வந்தாலும் இவற்றால் திருப்தி, மகிழ்ச்சி போன்றவற்றைத் தர முடியவில்லை!

    சரவணன்

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருந்தது. பழைய நினைவுகளை அசை போட வைத்த மின்னஞ்சலை பதிவாகத் தந்தமை நன்று.

    பதிலளிநீக்கு

  10. ஐயா, பெரிசுகளின் அங்கலாய்ப்புகள் குறித்து எனக்கு வந்த மின் அஞ்சலின் கருவை நானும் “ அதிர்ஷ்டசாலிகள் “ என்ற தலைப்பில் ஃபெப்ருவரி மாதப் பதிவொன்றில் எழுதி இருந்தேன். நீங்களும் கருத்திட்டிருக்கிறீர்கள். நினைவில்லையா.?ஒரு மின் அஞ்சல் பலரது பதிவுகளுக்கு வித்து.......?

    பதிலளிநீக்கு
  11. அருமையான ஓர்மைகள் தங்கி பகிர்வு.. நீங்களவர்கள் நிச்சயம் நற்பயனாளிகளே.. ஐயமே இல்லை. அழுத்தம் குறைந்த வாழ்வு.. என பாட்டனார், தந்தையார் சொல்லிக் கேட்டதுண்டு.

    பதிலளிநீக்கு
  12. சிலவற்றை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.
    இனிய நினைவுகளைக் கிளறிய பதிவு.

    பதிலளிநீக்கு
  13. இனிய நினைவுகள் என்றும் இனியவை...

    பதிவாக்கியமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  14. இதையெல்லாம் படித்த பிறகு இந்த கால குழந்தை ஒன்றின் ஏக்கம் கலந்த அழுகை.
    இது அந்த தாய்மார்களுக்கு புரியுமா
    தெரியவில்லை
    காலம்தான் பதில் சொல்லவேண்டும்




    என் அம்மா என்னைப்பெற்றதோடு சரி
    தொப்புள் கொடி வெட்டும் போதே
    என்னோடு தொடர்பு வெட்டப்பட்டு விட்டது
    காரணம் பணத்தின் தேவை, பணத்திற்காக வேலை,
    வேலைபளுவினால் நேரமின்மை,
    அதனால் என்னை கவனிக்க நேரமுமில்லை

    அன்று

    நான் இருந்த இடம் இருட்டுதான் கும்மிருட்டுதான்
    ஆனாலும் மனதில் வெளிச்சமிருந்தது
    கையை காலை குறுக்கிதான் வைத்திருந்தேன்
    நீட்ட இடமில்லை ஆனால் அவற்றை ஆட்ட முடிந்தது
    தொப்புள் கொடி வழியேதான் உணவு
    ஆனாலும் அதில் பாசமிருந்தது உன் நேசமிருந்தது
    அதனால் நான் சந்தோஷமாக இருந்தேன்
    உன் முகத்தை பார்க்க ஏங்கி இருந்தேன்
    அந்த நாளுக்காக எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தேன்

    இன்றோ

    என்னை சுற்றிலும் நல்ல வெளிச்சம்தான்
    ஆனால் மனத்துக்குள்தான் கும்மிருட்டுதானம்மா
    கையை காலை நன்கு நீட்டலாம்தான் ஆட்டலாம்தான்
    ஆனால் எனக்குத்தான் அதில் நாட்டமில்லையேயம்மா
    பார்த்து ரசிக்க, பரவசிக்கத்தான் நீ அருகிலில்லையே
    தங்கத்தட்டில் வெள்ளி ஸ்பூனில்தான் சாப்பாடு
    அதில் பணம் தெரிகிறது பாசத்தை காணோமேயம்மா
    அதனால் நான் சந்தோஷமாக சாப்பிடவில்லை
    இன்றும் உன் முகத்து பார்க்க ஏங்குகிறேன்
    அந்த நொடிக்காக நாள் முழுதும் காத்திருக்கிறேனேயம்மா
    ஆனால் நீயோ எழுமுன் வெளியே சென்று விடுகிறாய்
    நான் அசந்து தூங்கிய பிறகே வீடு வந்து விழுகிறாய்

    ஆசையாக உன் மடியிலே உருண்டு புரண்டு எழுந்து
    உன் முந்தானையை உள்ளங்கையில் சுருட்டி விளையாடி
    நீ குனிந்து என்னை பார்க்க நான் உன்னை பார்த்து சிரித்து
    தரையினில் மார்பில் நீந்த நீ ஓடி வந்து என்னை தூக்க
    தவழ்ந்து கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீச
    அந்த குறும்பை பார்த்து என் செல்லமே என்று நீ கொஞ்ச
    என் சின்ன பிஞ்சு மனத்து ஆசைகள் தப்பாம்மா
    வாய் வலியின்றி நான் பால் உறிஞ்ச உன் மெத்துமெத்தென்ற மார்கள்
    பால் குடிக்கையில் என் கைகளால் தொட்டுபார்க்க உன் கன்னங்கள்
    அந்த சந்தோஷத்தில் நடனமாடும் கால்களை தடவும் உன் மலர் கைகள்
    வயிறு நிறைய குடித்த அலுப்பில் லேசாக கண்ணயர உன் தொடைகள்
    அனைத்தும் கனவு காண்கிறேன் நிஜத்தில் நடக்காதாம்மா

    பதிலளிநீக்கு
  15. அவசரத்தில் மீதி பாதியை விட்டு விட்டேன்
    இதோ அந்த ஏங்கும் குழந்தை தேடும் சொர்க்கம் அந்த மீதி பாதியில் தான் இருக்கிறது

    எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லையே அம்மா
    நான் செய்த பாவம்தான் என்ன தெரியவில்லையே அம்மா
    குளிருக்கு போர்த்திக்கொள்ள கம்பளி இல்லை
    வெயிலுக்கு இதமாக பருத்தி ஆடை இல்லை
    வாடைக்காற்றுக்கு வாகான ஸ்கார்ப் இல்லை
    மழைக்கு நனையாமலிருக்க குடையும் இல்லை
    ஆனால் அந்த குழந்தையிடம் சந்தோசம் இருக்கிறது
    கம்பளி,பருத்தி ஆடை, ஸ்கார்ப், குடை எல்லாம் இருந்தும்
    என்னிடம் சந்தோசம் மட்டும் கிஞ்சித்தும் இல்லையே
    காரணம் அந்த குழந்தையுடன் அதன் அம்மா
    என்னுடன் இல்லையே என்னுடைய அம்மா, அதனால்
    எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லையே அம்மா

    ஆராரோ ஆரிராரோ தாலாட்டும் நான் கேட்டதில்லை
    யார் யாரோ கை வீசம்மா கை வீசு சொன்னதும் இல்லை
    தளிர் நடை பயின்று மழலையில் நான் பேசிய நாட்களில்
    வாரி அணைத்து உச்சி மோந்து பாராட்ட நீ இருந்தது இல்லை
    சற்றே கற்றதனால் மற்றொரு வேலைக்கு போய் விட்டாயே அம்மா
    பெற்றதனால் என் சுற்றமான உனக்கு என்னிடமிருந்து ஒரு கேள்வி
    பிள்ளைக் களி தீரவே நான் உனக்கு குழந்தையாய் பிறந்தேனாம்
    அது உண்மைதானேயம்மா, உண்மை என்று நீ நம்பினால்
    எந்தன் களி தீரவே நீ எப்போ என்னிடம் வருவாய் அம்மா
    காத்திருக்கிறேன் அம்மா நான் பல காலமாய் காத்திருக்கிறேன்
    சீக்கிரமே என்னிடம் வர அம்மா நீ கண்டுபிடி ஒரு மார்க்கம்
    நீ வரும் அந்த நாளே அம்மா என்னுடைய சொர்க்கம்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  16. அய்யா வணக்கம். தங்களின் நீண்ட நாள் வாசகன். தற்போது. புதியதாக பதிவு தொடங்கி உள்ளேன். எனக்கு தங்களின் வழிகாட்டல் தேவை. எனது முகநூலை மேம்படுதித் தர வேண்டுகிறேன். by 98650 46197 k.murugaboopathy@gmail,.com http://boopathy2012.blogspot.in/

    பதிலளிநீக்கு
  17. முகநூல் பற்றிய என் அனுபவம் குறைவு.

    பதிலளிநீக்கு
  18. இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்//


    எண்பது வயதை எட்டி நிற்கும் என் தந்தையாருக்கு
    நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது எப்படி
    மறுக்க முடியும் !சத்தியமாய் நீங்கள் தான் ஐயா
    அதிஸ்ர சாலிகள் இதில் என்ன சந்தேகம் வேண்டிக்
    கிடக்கிறது .போலி வாழ்க்கைக்குள் தினமும் பிரவேசிக்கும்
    கானல் நீர் நாங்கள் எல்லாம் .நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையைக்
    கனவாகத்தான் காண முடியும் எங்களால் :( சிறப்பான பகிர்வு
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு