நானும் என் நண்பர்கள் சிலரும் இவ்வாறுதான் வருடா வருடம் செய்து வந்தோம். வருமான வரி படிவத்திற்கு என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. வருமான வரி ஆபீசில் கேட்டால் தாராளமாக கொடுப்பார்கள். இரண்டு மூன்று படிவங்கள் என் பைலில் எப்போதும் இருக்கும்.
போன வருடம் இந்த மாதிரி வழக்கம்போல் ஒரு படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து வருமானவரி ஆபீசுக்கு சென்றோம். அவர்கள் இந்த பழைய படிவங்கள் செல்லாது, புதிய படிவங்கள் இன்டர்நெட்டில் இருக்கிறது, டவுன்லோடு செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வாருங்கள் என்றார்கள். நீங்களே படிவங்கள் தருவீர்களே, அந்த முறை என்ன ஆயிற்று என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், நாங்கள் கொடுப்போம், இப்பொழுதுதான் படிவங்களை அச்சாபீசுக்கு கொடுத்திருக்கிறோம், அவை வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும், உங்களுக்கு அவசரமில்லையென்றால் காத்திருங்கள் என்றார்கள். எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.
வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.
இந்த வருடமும் அவ்வாறே மார்ச் 31 க்குள் வரி முழுவதையும் கட்டிவிட்டு பழைய படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு வருமானவரி ஆபீசுக்குப் போனோம். அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களிடம் இந்த மாதிரி வருமானவரி படிவம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அவர்கள் எங்கள் படிவங்களை ஏறெடுத்தும் பாராமல், இந்த வருடம் புது படிவம் வரப்போகிறது, அதில்தான் நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்யவேண்டும் என்றார்கள். சரி, புது படிவங்கள் எப்பொது கிடைக்கும் என்று கேட்டோம். மூன்று மாதங்களில் அநேகமாக கிடைக்கும் என்றார்கள், அதாவது ஜூன் மாதக் கடைசியில் வரும் என்றார்கள்.
இன்டர்நெட்டில் இப்போது கிடைக்குமா என்று கேட்டதற்கு, இன்டர்நெட்டிலும் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்றார்கள். இப்போது தினம் இன்டர்நெட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.
அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்? இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.
இந்த மேட்டரில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் வருமானவரித்துறை மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?
வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?
//எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.//
பதிலளிநீக்குஇந்த இடத்தில் பலக்கச்சிரித்து விட்டேன். நானும் உங்களைப்போலவே நினைப்பவன் என்பதால்.
>>>>>
//வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்தவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.//
பதிலளிநீக்குநேர்மையாக வருமானம் ஈட்டி. உண்மையாகக் கணக்கு காட்ட நினைக்கும் இந்தியனுக்கு கிடைக்கும் பரிசு இந்த ‘தாவு தீர்வது’ ;(((((
//அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.//
பதிலளிநீக்கு;))))) ரஸித்தேன். சிரித்தேன்
ஈக்களும் கொசுக்களும் அதிகமாக இருப்பதாலோ என்னவோ,. எங்கள் ஊரில், இந்த அலுவ்லகத்தை முழுவதும் குளிர் சாதனம் செய்துள்ளாகள்.
>>>>>
//அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?//
பதிலளிநீக்குஉங்களைப்போல என்னைப்போல உரிய காலத்தில் ஒழுங்காக ரிட்டன் சப்மிட் செய்ய நினைத்து வரும் அப்பாவிகளுக்கு, இதுபோல 3 மாதம் ஆகும் என பதில் சொல்லத்தான் சம்பளம் கொடுக்கிறார்களோ என்னவோ?
// இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.//
எல்லோரும் இதுபோலத்தான் செய்ய வேண்டியதாக உள்ளது. ;(
>>>>>>
//ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?//
பதிலளிநீக்குமுன்பெல்லாம் ஏராளமான பக்கங்களுடன், பூர்த்திசெய்யவே மிகவும் சோம்பலாகவும், சிக்கல் பிடித்ததாகவும், தலையைச்சுற்ற வைப்பதாகவும், வைத்திருந்த ரிடர்ன் ஃபாரங்களை இப்போது கொஞ்சம் எளிமையாக ஆக்கியுள்ளார்கள்.
அதை ஏதாவது மீண்டும் மாற்றி தொல்லை கொடுக்கலாம் என்ற எண்ணமாக இருக்குமோ?
//வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?//
மிகவும் வருந்தத்தக்க விஷயம் தான்.
தங்களின் இந்த அனுபவப்பகிர்வு, நல்லா இருக்கு. படிக்க சுவாரஸ்யமாக இருக்கு. எல்லாவற்றையும் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.
[நானெல்லாம் ஏப்ரில் முதல் வாரத்தில் ரிடர்ன் ஃபார்ம் ஒன்று மேலோட்டமாக வெள்ளைத்தாளில் எழுதி வைத்து என் ஃபைலில் போட்டுக்கொள்வேன், ஜூலை 15 தேதிக்கு மேல் தான் INCOME TAX OFFICE க்குச் செல்வேன். தங்கள் தகவலுக்காக]
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி வைகோ. என் வேவ் லென்த்திலேயே இருக்கிறீர்கள் என்று அறிந்ததில் மிக்க சந்தோஷம்.
பதிலளிநீக்குபலரும் இப்படித்தான் இருக்கிறார்கள் அய்யா.
நீக்குஎன்ன, இந்த பதிவில் தங்கள் ஆதங்கத்தை கொட்டிவிடுவதால் பலருக்கு மன அழுத்தம் குறைகிறது. தங்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்ற இயலாமையின் தாக்கம் குறைகிறது. அந்த வகையில் உங்கள் பதிவு பல பேரின் உடல் நலத்தை பாதுகாக்கிறது.
சேலம் குரு
நானும் உங்களைப்போலத்தான். ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வருமான வரிக்கான படிவத்தை தாக்கல் செய்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு செய்யமுடியவில்லை. யாரிடம் முறையிடுவது எனத்தெரியவில்லை. மேலும் இந்த வயதில் இதற்கெல்லாம் போய் மெனக்கிட விரும்பவில்லை. உங்கள் பதிவின் மூலம் எல்லோர் சார்பிலும் அனைவருடைய மன வேதனையையும் தெரிவித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபல கேள்விகளை விழுங்க வேண்டிய நிலையில் தான் உள்ளோம்...
பதிலளிநீக்குதங்களின் அனுபவம் பலருக்கும் பாடம்... நன்றி...
எந்த கேள்வியையும் விழுங்க வேண்டாம்.
நீக்குவிழுங்குவதால்தான் இத்தகைய நிலை.
சுய நலத்தினால்தான் விழுங்குகிறோம் நாளை நாம் போனால் காரியம் நடக்காது இழுத்தடிப்பார்கள் என்ற எண்ணத்தினால் அசடு வழிந்து விட்டு கேள்விகளை விழுங்கி விட்டு வருகிறோம்.
யாராவது ஒருவர் இதையெல்லாம் சரி செய்ய மாட்டாரா என்று ஏங்குகிறோம் அந்த யாராவது ஒருவர் ஏன் நாமாக இருக்க கூடாது என்று யாரும் நினைப்பதில்லையே என்பதுதான் வேதனையாக உள்ளது
சேலம் குரு
//வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?//
பதிலளிநீக்குஎல்லா அரசு அலுவலகங்களும் இப்படித்தான் இருக்கின்றன.
வருமான வரி கட்ட வேண்டிய கடமை நம்மை போன்ற பொது ஜனங்களுக்கு இருக்கிறது. தவறி விட்டால் இவர்கள் கேட்கும் கேள்விகள் (நீங்கள் ஒழுங்காக வரி கட்டி விடுவதால் இதை அனுபவித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்) கூடுதலாக கட்ட வேண்டிய வரி அப்பப்பா சொல்லி மாளாது.
ஒழுங்காக இருப்பவர்களுக்கு அல்லது ஒழுங்காக இருக்க நினைப்பவர்களுக்கு எப்போதுமே தொந்திரவுதான்.
சேலம் குரு
எங்க இந்தியன் தாத்தாவுக்கு கோவம் வந்திருச்சி...!? ஆனால் மிக நியாயமான கோபம்.
பதிலளிநீக்குதாத்தாக்கள் கோபப்பட்டு என்ன ஆக போகிறது. ஒரு பதிவு வேண்டுமானால் வரலாம். நம்மை போன்ற இளைஞர்களுக்கு கோபம் வரவேண்டும். இத்தகைய அலட்சிய போக்கிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த வேண்டும். அப்போதுதான் இத்தகைய நிலை மாறும். மனிதனை மனிதனாக மதிக்கும் நிலை உருவாக வேண்டும். பொது ஜனங்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் அரசு ஊழியர்களுக்கு வரவேண்டும்.
நீக்குசேலத்தான்
கணினி தொழில் நுட்பத்தினை நன்கு உபயோகிக்கும் நீங்கள் ஏன் வருமான வரி அலுவலகத்திற்கு அலைகறீர்கள் ? online-ல் எளிதாக ரிடர்ன் தாக்கல் செய்யலாமே ? Facilities have been improving over the years. Now you can verify your TDS details online
பதிலளிநீக்குஅதை எல்லாம் பாத்து ரிஜிஸடர் பண்ணி வச்சிருக்கேன். இருந்தாலும் பாருங்க, நான் பழைய காலத்து ஆளில்லையா, அதுல பூரணமா நம்பிக்கை வரமாட்டேன்கிறது. அப்புறம் நாங்க நாலு பேர், ஒரு பொழுது போக்காட்டம் இன்சூரன்ஸ் ஆபீஸ் போய் அங்க ரெண்டு பேரை கலாட்டா பண்ணி, ரிடர்ன் கொடுத்திட்டு, அந்த கேன்டீன்ல போண்டா, காப்பி சாப்பிட்டுட்டு வர மாதிரி இருக்குமுங்களா?
நீக்குநாங்கள் இந்தியாவில் ரெண்டரை வருடம் இருந்துட்டு வந்தோம். அப்ப இந்தியாவில்தான் வருமானவரி கட்டணுமுன்னு சொல்லி ஒரு அக்கவுண்டண்ட் போட்ட கணக்குப்படி கட்டியாச்சு. போன வருசம் தெரிஞ்சது அவர் அளவுக்கதிகமா வரி செலுத்தி இருக்கார்னு. அதனால் அதை திரும்ப எடுக்க விண்ணப்பித்து இருக்கோம். வருமான்னு தெரியலை. யானை வாயில் போன கரும்போன்னு எனக்கொரு சந்தேகம். விட்டுத் தொலைக்கலாமுன்னா 17 லட்சம் என்பது மனசை உறுத்துது:(
பதிலளிநீக்குஅவ்வளவு ரூபாயை எப்படி அதிகமாக் கட்டினீங்க? நல்ல ஆடிட்டரா இருந்தா வாங்கிக்கொடுப்பாரு, உங்க அதிர்ஷ்டத்தை நம்புங்க. இத்தனை கோவில் போயிருக்கீங்க, ஒரு சாமியாவது கடைக்கண் பாலிக்காதா, பார்ப்போம்.
நீக்குநம்பிக்கை வையுங்கள்.
நீக்குஎனக்கு அப்படித்தான் 6000 ரூபாய் அதிகமாக பிடித்து விட்டான்.
பேசாமல் இருக்கலாம். நப்பாசை விடுகிறதா. நம் காசாயிற்றே என்று ஒரு ஆடிட்டரை பிடித்து எல்லா தகவல்களையும் கொடுத்து அதற்கு அவருக்கு பீஸ் 500 ரூபாயும் தந்து கடைசியில் ஒன்றுமே வரவில்லை. எல்லா தகவல்களையும் கணினியில் பதிவு செய்வதால் கொஞ்சம் வெயிட் செய்தால் அப்படியே வந்து விடும் என்றார்கள். நான்கைந்து முறை ஆடிட்டரிடம் காரில் போய் வந்ததுதான் மிச்சம். கணினியில் பதிவு செய்த பிறகு ஆள் மாறி விட்டாராம். எனவே தகவல்கள் எடுப்பது கஷ்டம் என்று சொல்லி முடித்து விட்டார்கள். 6000 ரூபாயோடு போக வேண்டியது ஆடிட்டருக்கு ஒரு 500, கார் செலவு ஒரு 500, வெட்டி அலைச்சலால் மன வருத்தம் என தொந்திரவுதான்.
ஆனால் உங்களுக்கு வர வேண்டிய தொகை அதிகம் எனவே விட்டு விடாதீர்கள். ஒரு நாள் ஆடிட்டரை பிடியுங்கள்.
சேலம் குரு
பதிலளிநீக்குஅனுபவம் கூறும் ஆதங்கம். பகிர்வுகூறுகிறது. ஆமாம். வரி கட்ட எவ்வளவு வருமானம் இருக்கவேண்டும்.?
Ignorance is Bliss. நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்.
நீக்குஅய்யா அவர்கள் 40 வருடங்களாக வருமான வரி கட்டுகிறார் என்றால் 1973 லேயே 10000 ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் இருந்திருக்க வேண்டும். அன்றைக்கு சேமிப்பு எல்லாம் கழித்த பிறகே வருமான வரி கணக்கிடபடும். அதாவது மாதம் 1200 ரூபாயாவது சம்பளமாக இருந்திருக்க வேண்டும். (அல்லது சம்பளம் + மற்ற வருமானம்). அன்றைய கால கட்டத்திற்கு அது ஒரு பெரிய தொகை. (கலெக்டருக்கே அன்றைய சம்பளம் 450-500 ரூபாய்தான்).
நீக்குநீங்கள் நல்ல அனுபவஸ்தரிடம்தான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.
அய்யா அவர்கள் சொல்வது போல இதைபற்றியெல்லாம் தெரியாமல் இருக்கும் வரை மன நிம்மதி.
சேலத்தான்
1973 ல் 5000 ரூபாய்க்கு மேல் வருமான வரி கட்டவேண்டும்.
நீக்குஅடுத்த வருடம் அதை 6000 ரூபாய் என்று அதிகப்படுத்தினார்கள்.
வருமானவரி சட்டத்தில் ஒரு தமாஷ். "Married with two children" என்று ஒரு குரூப் பிரித்திருந்தார்கள். அதாவது சரியாக தமிழில் மொழி பெயர்த்தால் "இரண்டு குழந்தைகளுடன் கல்யாணம் ஆனவர்" என்று பொருள் வரும். அதாவது கன்னுக்குட்டியோட மாடு வாங்குகிற கதைதான். இந்த குரூப்புக்கு வரி சலுகை கொஞ்சம் அதிகம்.
கொஞ்ச நாள் கழித்து இந்த வகையை நீக்கிவிட்டார்கள்.
வருமான வரி ஒழுங்காக் கட்டணும்னு நினைக்கறவங்களுக்கு இவ்வளவு சோதனை.
பதிலளிநீக்குநீங்கள் வருமான வரி கட்டிவிட்டு பாரத்தை நிரப்பி ரெகுலரைஸ்தான் செய்கிறீர்கள்.
நீக்குஉங்களுக்கு பாரம் முன்னாடியே அச்சடித்து வைத்து கொடுப்பதால் உபரியாக அரசுக்கு பணம் வரபோவதில்லை.
மார்ச்சுக்கு முன்னர் கட்டிய பணத்திற்கு ஒரு ரசீது மாதிரிதான் இந்த பாரம் கொடுக்கும் வேலை.
அரசை பொறுத்த வரை ஏப்ரல் 1 தேதி செய்ய வேண்டிய செலவை ஜூன் மாதம் செய்தால் மூன்று மாதம் அந்த செலவு தொகையை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாமே.
எல்லாம் ஒரு பொருளாதார நிபுணர்களின் எண்ணம்தான்
திருச்சி அஞ்சு
நல்ல லாஜிக்!!!
நீக்குவருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?
பதிலளிநீக்குஅரசுத்துறையா ?? அவலத் துறையா !!!!
” நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி!” – என்று யாரும் ஒன்றும் சொல்வதில்லை!
பதிலளிநீக்குஅரசு அலுவலர்களின் இத்தகைய மனோநிலையினால்தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றன. ஒரு பார்முக்காக எத்தனை பேர் எத்தனை தடவை அலைய வேண்டியாதாய் இருக்கிறது. இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்யலாம்தான். ஆனால் எத்தனை பேரிடம் கணினி இருக்கிறது என்பது கேள்விக்குறிதான். மேலும் அய்யா வர்கள் சொல்வது போல இதை ஒரு சாக்காக வைத்து நாலு நண்பர்களை பார்க்கலாம் பேசலாம் காண்டீனில் வடை போண்டா சாப்பிடலாம். எல்லாவற்றிக்கும் மேலாக வருமான வரி துறை அலுவலகத்தில் நான்கு பேரை நண்பர்களாக்கி கொள்ளலாம். நாளைக்கு உதவுமல்லவா
நீக்குஇதெல்லாம் மாறவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியே இல்லை
திருச்சி தாரு
இப்பிரச்சனையில் அரசு கவனம் செலுத்துவது நலம்
பதிலளிநீக்குநல்லதொரு படிப்பினை
தொடர வாழ்த்துகள்...
அரசு ஏன் கவனம் செலுத்த வேண்டும்.
நீக்குஅரசு அதிகாரிகள் எல்லாம் வல்லாள கண்டர்கள்.
இது போல சரியான நேரத்தில் வரி செலுத்தி விட்டு பாரத்தை நிரப்பி ரெகுலரைஸ் செய்பவர்களுக்கு அவர்கள் நேரத்தை செலவு செய்ய மாட்டார்கள்.
உங்கள் பணம்தான் ஏற்கனவே அரசு கஜானாவிற்கு போய் விட்டதே. நீங்கள் கொடுக்கும் பாரம் ரெகுலரைஸ் செய்ய கொடுக்கபடும் பாரம்தானே. அதை எப்போது கொடுத்தால் என்ன. அதனால் புதிதாக பணம் வரபோவதில்லையே என்ற அலட்சியம்தான்.
ஆனால் சட்டத்தை மதித்து ஒழுங்காக நடப்பவர்களுக்கு மதிப்பு கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்.
சேலம் குரு
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ரிடர்ன் கொடுக்கப் போனால், ரிடர்ன் வாங்ற இடத்துல ஒருத்தரும் இருக்கமாட்டார்கள். அங்கே இங்கே தேடி, ஒரு வழியாக ஆளைக் கண்டு பிடித்தால், வரவேற்பு ஒரு விதமாய், வேண்டா வெறுப்பாய் இருக்கும். "வந்துட்டீங்களா ஐயா,வாங்க, உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா" என்றுதான் எங்களை வரவேற்பார்கள்.
நீக்குஐயா.வருமான வரி யார் யாருயெல்லாம் கட்ட வேண்டும்.ரிட்டன் தாக்கல் செய்வது என்றால் என்ன?வரி கட்ட வில்லை என்றால் என்ன செய்து விடுவார்கள்.
பதிலளிநீக்குதங்களின் பதில் தனி பதிவாக வெளியிட்டால் நலம்.
ஆஹா, ஒரு பதிவுக்கு சான்ஸ், உட்டுடுவனா, பிச்சுப்போட்டுடறேன் பாருங்க.
நீக்குவருமான வரி கட்ட சில தகுதிகள் வேண்டும்.
நீக்கு1. முதலில் ஒரு நல்ல சொல்லிகொள்ளும்படியான வருமானம் இருக்க வேண்டும்.
2. வருமானம் அரசு வேலை வழியாக இருக்கலாம் அல்லது சொந்த தொழில் மூலமாக இருக்கலாம்
3. அரசு வழியில் சம்பளமாக இருந்தால் ரொம்ப கவலை பட தேவையில்லை. இந்த கையில் கொடுத்துவிட்டு அந்த கையில் பிடுங்கி கொள்வான்.
வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் கொடுப்பவன் கர்ணன். - இது அந்த கால மொழி
வலது கை வழியாக சம்பளம் கொடுத்து விட்டு இடது கை வழியாக அதில் கணிசமான அளவு பிடுங்கி கொள்பவனுக்கு பெயர் அரசாங்கம். இது இந்த கால மொழி
4. அரசு வழி வாங்கும் சம்பளம் கருப்பு வெள்ளையில் இருப்பதால் ஏமாற்ற நினைத்தாலும் முடியாது. முக்காவாசி இடங்களில் சம்பளத்திலேயே வருமான வரியை பிடித்து விடுவான்.
5. சொந்த தொழில் செய்து வருமானம் ஈட்டினால் கதையே வேறு. நாம் சொல்வதுதான் வருமானம். காட்டுவதுதான் கணக்கு நியாயமாக நடந்துகொண்டு கட்டும் வருமான வரியில் ஒரு சிறு பகுதியை ஆடிட்டர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு கொடுத்தால் பெரும் பகுதி உங்களுக்கு மிச்சமாகி விடும். பின்னே நேற்று ஆரம்பித்த வியாபாரிகள் பல பேர் இன்று பெரும் பணக்காரர்கள் ஆவது எப்படி என்று நினைக்கிறீர்கள்.
6. எல்லாவற்றுக்கும் மேலாக வரும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் வேண்டும்
7. உதாரணத்திற்கு உங்களுக்கு மாதம் 30000 ரூபாய் சம்பளம் என்று வைத்துகொள்ளுங்கள். வருடம் 3.6 லக்ஷம் ஆயிற்று. போனஸ் ஒரு 40000 என்று வைத்துகொள்ளுங்கள். அதில் சேமநலநிதி ஒரு 50000 ரூபாய் போய்விடும். ஒரு லக்ஷம் முடிய சேமிப்புக்கு வரி கழிவு உண்டென்பதால் இன்னொரு 50000 ரூபாய் சேமிப்புக்கு பொய் விடும். வீடு எதாவது கட்டியிருந்தால் அதற்கு மாதம் ஒரு 8000-10000 என்று வருடத்திற்கு ஒரு லக்ஷம் போய்விடும். மீதி வருவது 2 லக்ஷம்தான். அதற்கு இன்றிய கணக்குபடி 16000 வருமான வரி போய்விடும். மீதி 15000 தன மாதம் வரும்படி.
சேலம் குரு
இதாவது பரவாயில்லை.
நீக்குமாதம் 1 லக்ஷம் சம்பாதிப்பவர்களுக்கு உழக்கு கூட மிஞ்சாது என்பது போன்ற கணக்குதான்
நான் சொல்ல போவது லஞ்சம் பற்றி நினைத்துகூட பார்க்கமுடியாத வேலையில் இருப்பவர்களை பற்றி.
வருட வருமானம் 12 லக்ஷம்
சேம நல நிதி 1 லக்ஷம்
இன்ப்ரா பாண்ட்ஸ் 20,000 ரூபாய்
வீட்டு கடன் தவணை மாதம் 30000 வீதம் வருடத்திற்கு 3.6 லக்ஷம்
வருமான வரிக்கு எடுத்துகொள்ளும் தொகை 12 லக்ஷம் - 1.2 லக்ஷம் (சேமிப்பு) - 1.5 லக்ஷம்(வீடு கடன் வரி விலக்கு உச்ச வரம்பு) = 9.3 லக்ஷம்
இதற்கு வருமான வரி = முதல் 2 லக்ஷம் 0, அடுத்த 3 லக்ஷம் -> 30000 ரூபாய் மீதி 4.3 லக்ஷம்-> 86000 ரூபாய் அதற்கு 3% கல்வி வரி என மொத்தம் 1.2 லக்ஷம் பொய் விடும்.
மீதி என்ன தெரியுமா?
12 - 1.2 (சேமிப்பு) - 3.6 (வீடு கடன்) - 1.2 (வரி) -> 6 லக்ஷம்தான்.
பாதிக்கு பாதிதான்.
பேரு பெத்த பேரு தாக நீலு லேது அல்லது காலி பெருங்காய டப்பா என்பதெல்லாம் அரசு வேலை பார்பவர்களுக்கு சரியாக பொருந்தும்.
திருச்சி அஞ்சு
இன்னொன்றை விட்டு விட்டீர்களே
நீக்குவெட்டி வறட்டு கெளரவம்
இந்த அளவு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு கார் வைத்திருக்க வேண்டும். எரி பொருள் செலவை குறைக்கலாமே என்று டீசல் கார் வாங்கினால் இப்போது பெட்ரோல் விலை குறைகிறதே தவிர டீசல் விலை ஒன்றும் குறைய காணோம்.
வெளியே சாப்பிடனும் என்றால் ஏசி ஓட்டலுக்கு போனால் ஏற்கனவே அங்கு விலை அதிகம் இப்போது சேவை வரி என்று இன்னொரு தண்ட செலவு. போகாமலும் இருக்க முடியாது.
கார்பரேசன் பள்ளியில் சேர்க்க முடியாது. கான்வென்டில் சேர்த்தால் பீஸ் என்ற பெயரில் அடித்து பிடுங்கும் காசுக்கு அளவே இல்லை.
தினமும் எந்த பெயரில் காசு பிடுங்குவார்கள் என்றே சொல்ல முடியாது.
இவ்வளவுக்கு அப்புறம் காசு மிஞ்சினால் அதை வைத்து குடும்பம் நடத்த வேண்டியதுதான்
ஒன்று அம்பானியாக இருக்க வேண்டும் அல்லது ஒன்றுமில்லாத ஏழையாக இருக்க வேண்டும். நடுத்தர மக்களாக இருந்தால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தினமும் ஐசியு வில் இருக்கிற மாதிரிதான்.
சேலம் குரு
ஆயிரத்திலொரு வார்த்தை.
நீக்குநடுத்தர மக்கள் இந்த பக்கமும் போகமுடியாமல் அந்த பக்கமும் போக முடியாமல் திரிசங்கு சொர்கம்தான் (அல்லது திரிசங்கு நரகமா?).
ஏழைக்கு எல்லாம் இலவசம்தான் (தப்பு என்று சொல்லவில்லை)
பணக்காரனுக்கு எல்லாம் முடியும்.
நடுவில் மாட்டிகொண்டிருக்கும் இந்த வாயில்லா ஜீவன்கள் வெறும் வறட்டு கௌரத்தினாலேயே சீரழிந்து போகிறார்கள்.
இது அவர்களாகவே ஏற்படுத்தி கொண்டதுதான். வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு தூபம போட மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகின்றன
ஏ நடுத்தர வர்க்கமே சீக்கிரம் முழித்து கொள் இல்லையென்றால் அழிந்து விடுவாய் நீ வெட்டிய குழியில் நீயே விழுந்து விடுவாய் மண் அள்ளி போட எல்லோரும் காத்துகொண்டிருக்கிரார்கள்
வறட்டு கொஎரவத்தை விட்டு விட்டு வெளியே வந்து உண்மையாக இரு. வீண் விமர்சனத்திற்கு பயப்பட்டு உன்னையே நீ இழந்து விடாதே.
நீ பிழைப்பதும் சாவதும் உன் கையில்தான் இருக்கிறது
திருச்சி அஞ்சு
நல்ல சொன்னிங்க சார்,...
பதிலளிநீக்கு