கேரளாவின் அடையாளமே நேந்திரன் பழம்தான். கேரளாக்காரர்கள் எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் இந்தப் பழத்திற்காக உயிரையே விடுவார்கள். அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.
கேரளாவில் வழக்கமான காலை சிற்றுண்டி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? குழாய்ப் புட்டு, கடலைக்குழம்பு, அவிச்ச நேந்திரன் பழம், கடைசியாக பாலில்லாத டீ. கேரளாவில் எந்த குக்கிராமத்திற்குப் போனாலும் இந்த காலைச்சிற்றுண்டி அங்குள்ள டீக்கடைகளில் கிடைக்கும். கேரளாவில் பால் வளம் குறைவு. காரணம் அந்த சீதோஷ்ண நிலைக்கும் அங்கு இருக்கும் விவசாய சூழ்நிலைக்கும் மாடுகளை வளர்ப்பது கடினம். ஆகவே அவர்கள் அன்றாட உணவில் பால், தயிர் ஆகியவை உபயோகிப்பது அபூர்வம்.
எங்க ஊர் அதாவது கோயமுத்தூர் கேரளா எல்லையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரில் கேரளாக்காரர்கள் ஏறக்குறைய 30 விழுக்காடு இருக்கிறார்கள். இங்கு நடக்கும் தங்க நகை வியாபாரம் முழுவதும் கேரளாக்காரர்கள் கையில்தான் இருக்கிறது. கொஞ்சம் வியாபாரம் சேட்டுகள் கையில் இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன் நங்க நகை வியாபாரத்தில் கோலோச்சிய வைசியச் செட்டியார்கள் அநேகமாகக் காணாமல் போய்விட்டார்கள்.
இப்ப நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம். என்னென்னமோ பஜ்ஜிகள் எல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அறுசுவையும் கொண்ட இந்த நேந்திரன் பஜ்ஜி சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். கோயமுத்தூரில் இரண்டு விதமான உணவகங்கள் உண்டு. ஒன்று பிராமணாள் காப்பி கிளப், இரண்டு கேரளாக்காரர்களின் சாயாக் கடை. பிராமணாள் காப்பிக் கடைக்குப் போய் டீ கேட்பவனும் சாயாக்கடைக்குப் போய் காப்பி கேட்பவனும் அசலூர்க்காரர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
பிராமணாள் காப்பிக் கிளப்பில் சாயந்தரமானால் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய்ச்சட்னியும் போடுவார்கள். சாயாக் கடைகளில் எப்பொழுதும் சுடுசாயாவும் காஞ்ச வர்க்கியும்தான் கிடைக்கும். எத்தனை நாளைக்குத்தான் இந்த காஞ்சுபோன வர்க்கியை வைத்துக்கொண்டே கடையை ஓட்ட முடியும்? யோசிச்சான் கேரளாக்காரன். ஆஹா, நம்ம ஊரு நேந்திரன் பழத்தில பஜ்ஜி போட்டால் எப்படி இருக்கும் என்று யோசிச்சான்.
அப்போது பிறந்ததுதான் நேந்திரன் பழபஜ்ஜி. பிராமணாள் சுடும் வாழைக்காய் பஜ்ஜி டெக்னிக்கேதான். என்ன மொந்தன் வாழைக்காய்க்குப் பதிலாக நேந்திரன் பழம். அவ்வளவுதான். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் வாழைக்காய் பஜ்ஜியில் உப்பும் காரமும் மட்டும்தான் இருக்கும். நேந்திரன்பழ பஜ்ஜியில் கூடவே இனிப்பும் இருக்கும்.
கோயமுத்தூர்க்காரன் அப்படியே இந்த பஜ்ஜியில் மயங்கிப்போனான். ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம். அதனால் இந்தப் பஜ்ஜிகளை அந்த பின்னணி நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே சாப்பிடப் பழகிக்கொண்டான். இவ்வாறு நேந்திரன் பழ பஜ்ஜி கோவையில் வலம் வரத்தொடங்கியது.
இதன் கூடவே நேந்திரன்பழ வறுவல்களும் வர ஆரம்பித்தன. கோயமுத்தூரில் எல்லாப் பயல்களும் இந்த இரண்டிற்கும் அடிமையானார்கள். இந்த இரண்டு சமாச்சாரங்களுக்கும் அடிப்படையான நேந்திரன் பழம் கேரளாவிலிருந்துதான் வரவேண்டியிருந்தது. இங்கு டிமாண்ட் அதிகமாகவே, போதுமான அளவு நேந்திரன் பழங்கள் கேரளாவிலிருந்து கிடைக்கவில்லை.
கோயமுத்தூர் விவசாயி என்ன லேசுப்பட்டவனா? அது என்ன அவன் மட்டும்தான் நேந்திரன் பழம் போடுவானா? நானும் போடுகிறேன் பார் என்று ஆரம்பித்து நேந்திரன் பழ விவசாயம் கோவையிலும் சூடு பிடித்தது. எங்கள் சம்பந்தி தோட்டத்திலும் நேந்திரன் பழமரங்கள் நட்டார்கள். நன்றாகவே விளைந்தது. பழங்கள் எங்கள் வீட்டிற்கும் வர ஆரம்பித்தது.
நான் முன்பே இந்த நேந்திரன் பழ பஜ்ஜியை ருசி கண்டவனாதலால் இந்தப் பழத்தில் பஜ்ஜி சுட்டால் என்ன என்று வீட்டுக்காரியிடம் ஒரு நாள் நைசாகக் கேட்டேன். அது எப்படி சுடுவதென்று எனக்குத் தெரியாதே என்று முதலில் பின் வாங்கினாள். நாம் விடுவோமா? இதென்ன பெரிய ஆரிய வித்தை? நான் உனக்கு உதவி செய்கிறேன் பார், என்று சொல்லி, நான் கற்ற வித்தைகளையெல்லாம் காட்டி எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்தேன்.
வாழைக்காய் பஜ்ஜி சுடுவதற்கான அதே கடலைமாவு-அரிசி மாவு கலவைதான். வாழைக்காய்க்குப் பதிலாக நேந்திரன் பழம். என்ன நேந்திரன் பழத்தை நீள வாக்கில் சீவுவது கடினம். அதனால் குறுக்கு வாட்டில் துண்டுகளாக வெட்டிக் கொடுத்தேன். அந்த துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து எண்ணையில் பொரிக்கவேண்டியதுதான். நேந்திரன் பழ பஜ்ஜி ரெடி.
இந்த வட்ட வடிவில் உள்ள பஜ்ஜியில் இன்னுமொரு சௌகரியம் என்ன வென்றால் ஒரு பஜ்ஜியை அப்படியே முழுசாக வாயில் போட்டுக் கொள்ளலாம்.நீள பஜ்ஜி மாதிரி கடித்துக் கடித்து சாப்பிடவேண்டியதில்லை. என்ன, பஜ்ஜியின் சூடு அளவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.
இந்த பஜ்ஜிக்கு எந்த சைடு டிஷ்ஷும் வேண்டியதில்லை. சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டேஏஏஏஏஏ இருக்கலாம். நேந்திரன் பழமும் கடலை மாவும் தீர்ந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம். ஆனால் அதற்கு முன் கேரளாவிற்கு ஒரு முறை போய் வருவது பஜ்ஜியின் சுவையைக் கூட்டும்.
ஐயா...
பதிலளிநீக்குநம்ம ஊரு நேந்திர பழ பஜ்ஜி சாப்பிட்டு வளர்ந்தவன் என்கிற முறையில் அந்த மேலே மொறு மொறு மற்றும் உள்ளே வழுக்கிக்கொண்டு போகும் பஜ்ஜிக்கு ஒரு சலாம். வெரைட்டி ஹால் சாலையில் இருந்து தலைமை தபால் அலுவலகத்திற்கு போகும் வழியில் இருக்கும் "மல்லு சாயா" கடை நீங்கள் குறிப்பிட்ட நேந்திர பழ பஜ்ஜிக்கு மிகப் பிரசித்தம். பஜ்ஜியுடன் இளமைக்கால நினைவுகள நினைக்க வைத்ததற்கு நன்றி..
சங்கர நாராயணன்,தி
ஆஹா, நீங்களும் நம்ம ஜாதிதான். நானும் என் சிநேகிதர்களும் அந்தக் கடைக்கு அடிக்கடி போவோம்.
நீக்குஅழகான படங்களுடன் அருமையான பஜ்ஜி பதிவு பசியை தூண்டி விட்டது ஐயா.
பதிலளிநீக்குதீரும் வரைக்கும் விடக் கூடாது...~~~~~ ஹா... ஹா... ~~~~~
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
நேந்திரம் பழ பஜ்ஜி சுவையாக இருக்கிறதோ இல்லையோ பதிவு உண்மையில் உங்கள் சுவையோ சுவை. நீங்கள் சொன்ன விதமே சாப்பிடத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குநானும் கேரளாவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தபோது நேந்திரன் பஜ்ஜி சாப்பிட்டு அதனுடைய சுவைக்கு அடிமையாய் இருந்திருக்கிறேன். நேந்திரன் காய்கள் கோவையிலிருந்து மட்டுமல்ல திருச்சியிலிருந்தும் கேரளாவிற்கு செல்கின்றன.
பதிலளிநீக்குதிருச்சி வயலூரில் இருக்கும் வாழை ஆராய்ச்சி மையத்தில் விசாரித்த போது விளையும் நேந்திரம் பழங்களில் 90% க்கு மேல் கேரளா அனுப்பி விடுகிறார்களாம். மீதி இஉர்ப்பதுதான் நமக்கு என்கிறார்கள். சொந்த வீட்டுக்கு ஒன்றும் இல்லையாம். சாப்பிட வேண்டுமென்றால் கேரளாதான் செல்லவேண்டும்.
நீக்குதுளசி மைந்தன்
அட்டகாசம், சார்.
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குஒரு சின்ன திருத்தம். நேந்திரன் பழ பஜ்ஜியை வாழைக்காய் அப்பம் என்று சொல்வார்கள்.அது மைதாமாவில் செய்யப்படுவது. நேந்திரன் பழம் பழுத்தாலும் அழுகாமல் நீண்ட நாட்கள் இருக்கும் தன்மையுடையது. பழுக்க ஆரம்பித்தவுடன் கத்தியால் கொஞ்சம் 3mm சைசில் நீள வாக்கில் வெட்டி மைதா கரைசலில் முக்கியெடுத்து தேங்காய் எண்ணையில் பொறித்து எடுத்து டிசு பேப்பரில் எண்ணெய் எடுத்துவிட்டு சாப்பிடவும். இதற்க்கு சட்னி போன்ற கூடுதல் ஐட்டம் தேவை இல்லை.
கொசுறு
தமிழ் நாட்டில் விளையும் நேந்திரன் பழங்களை கேரளத்தில் பாண்டி பழம் என்று ஒதுக்கி விடுவார்கள். ஏன் எனில் தமிழ் நாடு பழங்களில் சிறு வித்துக்கள் அதிகம், மற்றும் இனிப்பு சுவை குறைவு.
நேந்திரன் பழங்களை சின்னதாக கீறி உள்ளே அவல் வெல்லம் தேங்காய்த் துருவல் வைத்து முழுப்பழத்தை அப்படியே மைதாவில் முக்கி போரித்தெடுத்து பழம் பொரி என்று செய்வதும் உண்டு.
--
Jayakumar
நீங்க நெறய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. கேரளா உங்க பூர்வீகமோ? இல்லை யாராவது நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்களோ? இல்லாவிடில் இவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருப்பது சாத்தியமில்லை.
நீக்குதிருவனந்தபுரம் போனபோது முதன்முதலாக சுடச்சுட நேந்திரன்பழ பஜ்ஜி சாப்பிட்டேன். அப்புறம் சாப்பிடவில்லை! கிடைக்கவில்லை!
பதிலளிநீக்குஅதற்காகத்தான் செய்முறை கொடுத்திருக்கேன். இல்லைன்னா கோயமுத்தூருக்கு ஒரு நடை வாங்க. கேரளா போய் அங்கேயே ஒரிஜினல் பஜ்ஜி சாப்பிட்டுட்டு வரலாம்.
நீக்குகோயம்பத்தூருக்கு ஒரு நடை வாங்க. நம் வீட்டில் நேந்திரம்பழ பஜ்ஜி சாப்பிடலாம் என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் ஒரு நடை கேரளா போய் வரலாம் என்கிறீர்களே. ஒரு வேலை சுந்தரிகள் அங்குதான் இருக்கிறார்களோ? பஜ்ஜிக்கு பஜ்ஜியும் ஆச்சு . சுந்தரிகளை பார்த்த மாதிர்யும் ஆச்சு. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா
நீக்குசேலம் குரு
ஐயா! ஆஹா! சுந்தரமான கேரளத்து நாட்டிளம் பெண்கள் சுடும் /சுந்தரன் களும்தான்...இந்த நேந்தரம் பழ பஜ்ஜி பற்றி நகைச் சுவையும் கலந்து..ஆஹா!
பதிலளிநீக்குஇதனைக் கேரளத்தில் பழ அப்பம் இல்லை என்றால் பழம்பொரி என்றுச் சொல்லுவார்கள். எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
ஐயா செய் முறையில் மட்டும் சிறிது திருத்தம் ஐயா. அது கடலை மாவில் செய்வதல்ல. மைதா மாவில் சிலர் இதனுடன் சிறிது அரிசி மாவும் சேர்ப்பதுண்டு. அதனுடன் சிறிதே சிறிது மஞ்சள் தூள் இல்லை என்றால் கேசரிப் பவுடர் கலந்து, சிறிது ஒரு சிட்டிகை என்று சொல்வார்களே அப்ப்டி உப்பும் இட்டு, சர்க்கரையும் சிறிது சேர்த்து, பொதுவாகக் காரம் சேர்ப்பதில்லை (சிலர் வீடுகளில் சிறிதே சிறிது மிளகாய் தூள் ஆனால் இது ஒரிஜினல் அல்ல) மற்றும் சிறிது சோடா உப்பு (இது வீடுகளில் சேர்ப்பதில்லை நாங்கள்) சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து மற்றவை எல்லாம் நீங்கள் சொல்லியபடிதான். , பழத்தை அப்படியே நீளமாக/இல்லை பாதியாக வெட்டி , கொஞ்சம் தடிமனாக ஸ்லைஸ் செய்து பொரிப்பார்கள்.
நீங்கள் சொல்வது போல்கடைகளில் மைதா மாவில்தான் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டில் கடலை மாவில்தான் செய்கிறோம்.
நீக்குமைதா மாவும் சரி கடலை மாவும் சரி. எதுவென்றாலும் கையில் ஒரு நாலு யூனி என்சைம் மாத்திரை வைத்துகொள்வது நல்லது.
நீக்குதிருச்சி தாரு
ஓ! கடலைமாவில் செய்ததில்லை செய்து பார்த்துவிட்டால் போச்சு....ம்ம்ம் நீங்கள் சொல்லி இருப்பது போலவே....
நீக்கு////அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்./// //// ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்./// அய்யா! நானும் நேந்திரன் பழ ரசிகன் மற்றும் விளைவிப்பவன் தான் . நீங்கள் நேந்திரன் பஜ்ஜியை விட சுந்தரிகளை தான் அதிகமாக ரசித்ததாக தெரிகிறது இந்த வயதிலும் அதற்கான உடல்நிலையும் மனநிலையும் பெற்றிருபதற்காக வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//உடல்நிலையும் மனநிலையும் // இதில் பாதி சரி.
நீக்குநான் இன்றைக்கே கேகளா புறப்பட்டேன் ஐயா.
பதிலளிநீக்குதமிழ் மணம் 6 பஜ்ஜி ஆர்டர்
//கேரளாக்காரர்கள் எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் இந்தப் பழத்திற்காக உயிரையே விடுவார்கள்.//
பதிலளிநீக்குஇப்போதுதான் புரிகிறது - ஒருவழி செவ்வாய் கிரக பயணத்துக்கு ஏன் கேரளப்பெண்ணை தேர்ந்தெடுத்தார்கள் என்று. செவ்வாயிலும் அந்த பெண் தான் சென்றவுடன் ஒரு நேந்திரம்பழ பஜ்ஜி கடை ஆரம்பிக்கத்தான் என்று நினைக்கிறேன்.
சேலம் குரு
எங்க கல்லூரி ஆசிரியர் ஒரு கதை சொல்லுவார். ஒருவன் கடல் பயணம் போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் கப்பல் கவிழ்ந்து விட்டது. இவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திமிங்கலம் இவனை விழுங்கி விட்டது. திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இவன் போனவுடன் கண்ட காட்சி அங்கு ஒரு கேரளாக்காரன் சாயா விற்றுக் கொண்டிருந்தானாம். கேரளாக்காரர்கள் அவ்வளவு கெட்டிக்காரர்கள். எங்கு சென்றாலும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள்.
நீக்குமுன்பெல்லாம் அம்மை நோய் வந்தால் குளிர்ச்சிக்காக நேந்திரம்பழம் சாப்பிடக்கொடுப்பார்கள். இப்போது எங்குமே கிடைப்பதில்லை. (அம்மை நோயும் முன்பு மாதிரி அதிகமாக வருவதில்லை) இப்போதெல்லாம் நேந்திரம் பழம் வேண்டுமென்றால் கேரளாதான் செல்ல வேண்டும் போலிருக்கிறது.
பதிலளிநீக்குகாயத்ரி மணாளன்
//காரணம் அந்த சீதோஷ்ண நிலைக்கும் அங்கு இருக்கும் விவசாய சூழ்நிலைக்கும் மாடுகளை வளர்ப்பது கடினம்.//
பதிலளிநீக்குஓஹோ அதனால்தான் அடிமாடுகள் கூட தமிழ் நாட்டிலிருந்து செல்ல வேண்டியிருக்கிறதோ?
திருச்சி அஞ்சு
//காரணம் அந்த சீதோஷ்ண நிலைக்கும் அங்கு இருக்கும் விவசாய சூழ்நிலைக்கும் மாடுகளை வளர்ப்பது கடினம்.//
பதிலளிநீக்குமாடுகளே இல்லையென்றால் அந்த காலத்தில் விவசாயம் எல்லாம் எப்படி செய்தார்கள் என்ற சந்தேகம் வருகிறதே.
திருச்சி தாரு
கேட்டுச் சொல்கிறேன்.
நீக்கு//கேரளாவின் அடையாளமே நேந்திரன் பழம்தான். //
பதிலளிநீக்குநேந்திரம் பழம் மட்டுமல்ல - பெண்கள் அணியும் வெள்ளை முண்டு, ஆண்கள் அணியும் வேஷ்டி, சிறு வயதில் பயத்துடன் பார்த்த கதக்களி, இன்னமும் மேல் ஆடை அணியாமல் வந்தால் மட்டுமே ஆண்களை அனுமதிக்கும் குருவாயூர் கோயில், வேலைக்கு மரியாதை, நாயரின் சாயா, கேரள மாந்திரீகர்கள் - இப்படி இன்னும் பல உண்டு சாரே. (இந்த "சாரே"வும் கேரள ஸ்டைல்தான்)
சேலம் குரு
//50 வருடங்களுக்கு முன் நங்க நகை வியாபாரத்தில் கோலோச்சிய வைசியச் செட்டியார்கள் அநேகமாகக் காணாமல் போய்விட்டார்கள்.//
பதிலளிநீக்குவைசிய செட்டியார்கள் எல்லாம் உள்ளூர் சரக்கு.
பணம் கொஞ்சம்தான்.
சேட்டுகளுக்கு வட மாநில காசு.
கேரளக்காரர்களுக்கு துபாய் காசு.
எனவேதான் இந்த நிலை.
துளசி மைந்தன்
//கோயமுத்தூரில் இரண்டு விதமான உணவகங்கள் உண்டு. ஒன்று பிராமணாள் காப்பி கிளப், இரண்டு கேரளாக்காரர்களின் சாயாக் கடை.//
பதிலளிநீக்குமூன்றாவது முக்கியமான கடையை விட்டு விட்டீர்களே. மதுரை முனியாண்டி விலாஸ் டைப்பில் நடக்கும் அசைவ கடைகள். அவை என்றென்றும் இருக்கும் கடைகள் ஆயிற்றே
திருச்சி அஞ்சு
முனியாண்டி விலாஸ்கள் ஏறக்குறைய காணாமல் போய்விட்டன. ரெட்டியார்கள்தான் இன்று சைவத்தில் டாப். அன்னபூர்ணா உள்ளூர் நாயக்கர்களுடையது. கவுண்டர்கள்தான் இன்று அசைவத்தில் சக்கைப் போடு போடுகிறார்கள்.
நீக்கு//கோயமுத்தூரில் இரண்டு விதமான உணவகங்கள் உண்டு. ஒன்று பிராமணாள் காப்பி கிளப், இரண்டு கேரளாக்காரர்களின் சாயாக் கடை.//
பதிலளிநீக்குநீங்கள் கோயம்பத்தூர் ஆள்தானா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கோயம்பத்தூர் என்றாலே நினைவுக்கு வருவது அன்னபூர்ணா ஹோட்டல்தானே. இதை மூன்றாவதாக செர்த்துகொண்டால்தான் உங்கள் பதிவு நிறைவு பெறும்.
திருச்சி தாரு
இது ஐம்பது வருஷத்துக் கதை. இன்று பிராமணாள் காப்பி கிளப் என்று போட்டால் அடித்து நொறுக்கி விடுவார்கள்.
நீக்கு//நீங்கள் கோயம்பத்தூர் ஆள்தானா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது// எனக்கே அப்படித்தான் அடிக்கடி தோன்றுகிறது. கோயமுத்தூரில் கோயமுத்தூர்க்காரன் எவனுமில்லை. எல்லாம் மற்ற ஜில்லாக்களில் இருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து (சிந்து மாகாணம்) அகதிகளாக வந்தவர்களும்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் இன்றைக்கு கோயமுத்தூரில் கோலோச்சுகிறார்கள்.
//பிராமணாள் காப்பிக் கடைக்குப் போய் டீ கேட்பவனும் சாயாக்கடைக்குப் போய் காப்பி கேட்பவனும் அசலூர்க்காரர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.//
பதிலளிநீக்குஇன்னமும் சாயாக்கடை இன்னமும் இருக்கிறது. பிராமணாள் காப்பிக்கடை இருக்கிறதா என்ன? இருந்தால் எங்கே என்று சொல்லுங்களேன். போய் அமர்ந்து திவ்யமாக பித்தளை டம்ளரில் நல்ல சூடாக பில்டர் காப்பி ஒன்று குடித்து விட்டு வரவேண்டும்.
சேலம் குரு
இருந்தது. இப்போது இல்லை.
நீக்கு//பிராமணாள் காப்பிக் கிளப்பில் சாயந்தரமானால் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய்ச்சட்னியும் போடுவார்கள்//
பதிலளிநீக்குஇப்படி வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டு சாப்பிட்டுதான் உடம்பில் கொழுப்பும் கியாஸும் சேர்ந்து கொண்டு இந்த வயதில் பாடாய்படுத்துகிறது. இருந்தாலும் பிராமணாள் காப்பி கிளப் ஆசை விட மாட்டேன் என்கிறது.
துளசி மைந்தன்
//அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்//
பதிலளிநீக்கு"அவனுக்கு" என்ற இடத்தில் "அய்யா" என்று போட்டு படித்துப்பார்த்தேன். நன்றாக இருந்தது.
சேலம் குரு
அவனில் அய்யாவும் அடக்கம்.
நீக்கு//அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்//
பதிலளிநீக்கு"சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" பாட்டு பார்த்ததிலிருந்தே நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். உங்கள் நேந்திரம்பழ சுந்தரிகள் என்னை உடனே கேரள போக சொல்லுகின்றன.
காயத்ரி மணாளன்
//இந்த இரண்டு சமாச்சாரங்களுக்கும் அடிப்படையான நேந்திரன் பழம் கேரளாவிலிருந்துதான் வரவேண்டியிருந்தது.//
பதிலளிநீக்குஇன்றளவும் கேரளா யாராவது சென்றால் அங்கிருந்து நேந்திரம் சிப்சை வாங்கி கொண்டு வரச்சொல்வது எனக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த ஊரில் கிடைக்கும் நேந்திரம் சிப்ஸ் என்னவோ எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.
துளசி மைந்தன்
//அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்.//
பதிலளிநீக்குகேரளா போய் நேந்திரன்பழம் சாப்பிட்டு மட்டும் வந்தால் பரவாயில்லை. திரும்பி வரும்போது ஒரு சுந்தரமான சுந்தரியோடு வந்திருந்தால்தான் தொந்திரவே. அய்யா எனக்கு ஒரு சந்தேகம். என் காதோடு மட்டும் சொல்லுங்கள். வீட்டில் ஆம்படையாள் நம்மூர் பக்கமா இல்லை சேச்சியா?
சேலம் குரு
இருங்க, எதுக்கும் GMB சாரைக் கேட்டுட்டு சொல்றேன்.
நீக்கு//எங்கள் சம்பந்தி தோட்டத்திலும் நேந்திரன் பழமரங்கள் நட்டார்கள். நன்றாகவே விளைந்தது. பழங்கள் எங்கள் வீட்டிற்கும் வர ஆரம்பித்தது//
பதிலளிநீக்குசம்பந்தி தோட்டத்தில் நேந்திரம்பழ மரங்களி நட்டது முக்கியமில்லை. எங்கள் வீட்டுக்கும் வர ஆரம்பித்தது என்பதுதான் இங்கு முக்கியம். நன்றாகத்தான் மாப்பிள்ளையை கவனித்துக்கொள்கிறார்கள். பரவாயில்லை அய்யா நீங்கள்.
காயத்ரி மைந்தன்
//இந்தப் பழத்தில் பஜ்ஜி சுட்டால் என்ன என்று வீட்டுக்காரியிடம் ஒரு நாள் நைசாகக் கேட்டேன்.//
பதிலளிநீக்குபின்னே அதட்டியா கேட்க முடியும். நைசாகக்கேட்டாலே பாதி நேரம் வேலை நடக்காது. ஆனாலும் அய்யா அவர்கள் இப்படி நைசாகப்பேசி காரியத்தை சாதித்துக்கொள்வதில் சமர்தர்தான் போலிருக்கிறது
திருச்சி அஞ்சு
//இந்தப் பழத்தில் பஜ்ஜி சுட்டால் என்ன என்று வீட்டுக்காரியிடம் ஒரு நாள் நைசாகக் கேட்டேன்.//
பதிலளிநீக்குஉடனடியாக சுதாரித்துக்கொண்டிருக்க வேண்டாமோ? நீங்கள் கேட்டவுடன் ஒத்துக்கொன்டார்களே. அது முடிய நீங்கள் பாக்கியவான். உங்கள் நாக்குக்கு சரியானபடி சமித்து கொடுப்பதில் கில்லாடியாக இருக்கிறார்கள்.
துளசி மைந்தன்
//அதனால் குறுக்கு வாட்டில் துண்டுகளாக வெட்டிக் கொடுத்தேன்//
பதிலளிநீக்குஅப்பாடா. உண்மை வெளியே வந்து விட்டது. சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருக்கும்போது வெளியே ஈசி சேரில் ஹாயாக உட்கர்ந்து TV பார்த்து கொண்டிருந்தால், பஜ்ஜி வர வர சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்றுதான் எழ்துவீர்கள் என்று நினைத்தேன். உங்களையே அறியாமல் வாழைக்காயை குறுக்கு வாட்டில் துண்டு துண்டாக வெட்டிக்கொடுத்தேன் என்று ஒத்துக்கொண்டு விட்டீர்களே. இப்படி ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையாக இருந்தால் எந்த வகை பாசி வேண்டுமானாலும் செய்யலாம்.
சேலம் குரு
//அந்த துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து எண்ணையில் பொரிக்கவேண்டியதுதான்//
பதிலளிநீக்குமாவுகரைசல் பக்குவம் என்று ஒன்று இருக்கிறதே. அப்படியே வெட்டிய நேந்திரம்பழ துண்டுகளை எடுத்து லாகவமாக மாவில் முக்கி இடமும் வளமு ஒரு சுற்று சுற்றி பாத்திரத்தின் விளிம்பில் ஒரு தடவு தடவி அதிகமான மாவை வழித்து பின்னர் எண்ணையில் போட்டால் ஆஹா அதுதான் சுவை. அதற்கு மாவு கெட்டியாகவும் கரைக்காமல் ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும். சரிதானே அய்யா
காயத்ரி மணாளன்
//நேந்திரன் பழமும் கடலை மாவும் தீர்ந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.//
பதிலளிநீக்குஅய்யா எனக்கு ஒரு சந்தேகம். நேந்திரம் பழமும் கடலை மாவும் ஒன்றாகத்தீருமா? இல்லை ஏதேனும் ஒன்று முன்பே தீர்ந்து விடுமா? அப்படி தீர்ந்து விட்டால் என்ன செய்வது? இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தால் உங்களுக்கு ஒரு டசன் நேந்திரம் காய் பஜ்ஜி அனுப்பி வைக்கிறேன்.
திருச்சி அஞ்சு
இதுக்குத்தான் Ph.D. படிக்கோணும்கிறது. அந்தப் படிப்பைப் படிச்சா, எப்படி கடலை மாவும் நேந்திரன் பழமும் ஒன்றாகத் தீருகிற மாதிரி கரைப்பது என்ற பக்கவம் கைவந்து விடும்.
நீக்கு//ஆனால் அதற்கு முன் கேரளாவிற்கு ஒரு முறை போய் வருவது பஜ்ஜியின் சுவையைக் கூட்டும்.//
பதிலளிநீக்குஎதற்கு அய்யா கேரளா போகசொல்கிறீர்கள். ஒரு வேலை சுந்தரமான சுந்தரிகளை பார்த்து விட்டு வருவதற்கா? தெரிந்தால் அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுவார்கள் என் வீட்டில்.
பேசாமல் வீட்டில் பெரிய மனது பண்ணி செய்து கொடுக்கும் நேந்திரம்பழ பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.
துளசி மைந்தன்
//ஆனால் அதற்கு முன் கேரளாவிற்கு ஒரு முறை போய் வருவது பஜ்ஜியின் சுவையைக் கூட்டும்.//
பதிலளிநீக்குஎதற்கு அய்யா கேரளா போகசொல்கிறீர்கள். ஒரு வேலை சுந்தரமான சுந்தரிகளை பார்த்து விட்டு வருவதற்கா? தெரிந்தால் அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுவார்கள் என் வீட்டில்.
பேசாமல் வீட்டில் பெரிய மனது பண்ணி செய்து கொடுக்கும் நேந்திரம்பழ பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.
துளசி மைந்தன்
//ஆனால் அதற்கு முன் கேரளாவிற்கு ஒரு முறை போய் வருவது பஜ்ஜியின் சுவையைக் கூட்டும்.//
பதிலளிநீக்குஎதற்கு அய்யா கேரளா போகசொல்கிறீர்கள். ஒரு வேலை சுந்தரமான சுந்தரிகளை பார்த்து விட்டு வருவதற்கா? தெரிந்தால் அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுவார்கள் என் வீட்டில்.
பேசாமல் வீட்டில் பெரிய மனது பண்ணி செய்து கொடுக்கும் நேந்திரம்பழ பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.
துளசி மைந்தன்
அதே, அதே.
நீக்கு// நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.//
பதிலளிநீக்குநீங்கள் மட்டும் இந்த பஜ்ஜியை "சுடச்சொல்லி" சாப்பிடலாம். நாங்கள் மட்டும் நாங்களே "சுட்டு" சாப்பிட வேண்டுமாக்கும்.
திருச்சி தாரு
//கோயமுத்தூரில் எல்லாப் பயல்களும் இந்த இரண்டிற்கும் அடிமையானார்கள்//
பதிலளிநீக்குநல்ல வேலை. இந்த இரண்டுக்கும்தான் அடிமையானார்கள். இதை சாப்பிட்டு சுந்தரமான சுந்தரிகளுக்கு அடிமையாகி இருந்தால் என்ன ஆவது?
காயத்ரி மணாளன்
கன்னியாகுமரி எக்ஸ்ப்ர்சில் பயணிக்கும் போது காலை உணவாகக் கிடைப்பது பழம் பொறிச்சதே. எனக்குப் பிடிக்காது ஒரு அசட்ட்டுத் தித்திப்புடன் .. கோவை நேந்திரன் காய் வறுவல் கேரள வறுவலை விட சுவையாய் இருகும்.
பதிலளிநீக்குகேரள மாப்பிள்ளை நீங்க, இப்படி அவங்க உணவை அவமதிக்கலாமா?
நீக்குஎன்னங்க அய்யா செய்வது. GMB அவர்களுக்கு சம்பந்தி வீட்டில் இருந்து நேந்திரம்பழம் வருவதில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் மனைவியின் ஊரின் ஸ்பெஷல் ஆன ஒரு சாப்பாட்டு ஐட்டத்தை எனக்கு பிடிக்காது என்று சொல்ல அதீத தைரியம் வேண்டும்.
நீக்குசேலம் குரு .
என்னங்க அய்யா செய்வது. GMB அவர்களுக்கு சம்பந்தி வீட்டில் இருந்து நேந்திரம்பழம் வருவதில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் மனைவியின் ஊரின் ஸ்பெஷல் ஆன ஒரு சாப்பாட்டு ஐட்டத்தை எனக்கு பிடிக்காது என்று சொல்ல அதீத தைரியம் வேண்டும்.
நீக்குசேலம் குரு .
//கோயமுத்தூர்க்காரன் அப்படியே இந்த பஜ்ஜியில் மயங்கிப்போனான். ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம். அதனால் இந்தப் பஜ்ஜிகளை அந்த பின்னணி நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே சாப்பிடப் பழகிக்கொண்டான். இவ்வாறு நேந்திரன் பழ பஜ்ஜி கோவையில் வலம் வரத்தொடங்கியது.//
பதிலளிநீக்குஇந்த பஜ்ஜிகள் கோயம்பத்தூரில் பிரபலமானதற்கான கதையும் ருசியாகவும், சுவையாகவும், சுந்தரமாகவும், சுந்தரியாகவும் தங்களால் எழுதப்பட்டுள்ளது. :)
சொக்க வைக்கும் தங்களின் எழுத்துக்களுக்குத் தனியான பாராட்டுக்கள் ஐயா.