வெள்ளி, 27 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப்.

                                   Image result for Coimbatore Agricultural College
இங்கிலாந்து நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் எல்லாம் பொழுதுபோக்கு கிளப்கள் இருப்பது பிரசித்தம். மேஜரான ஒவ்வொரு ஆங்கிலேயனும் ஏதாவதொரு கிளப்பில் அங்கத்தினராக இருக்கவேண்டும். இல்லாவிடில் அவனை ஒரு கனவானாக யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். இந்தப் பழக்கம் அனைவரும் அறிந்ததே.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி 200 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வந்ததை சரித்திரம் கூறும். அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பெரிய பதவிகளில் எல்லாம் ஆங்கிலேயர்கள்தான் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அனைத்துப் பெரிய ஊர்களிலும் கணிசமான அளவு ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கலாச்சாரச் சின்னமான கிளப் கலாச்சாரத்தையும் அவர்கள்இருக்கும் இடங்களில் நிறுவினார்கள். இங்கிலாந்தில் உள்ள இப்படிப்பட்ட கிளப்களைப் பற்றி நான் படித்தவற்றில் இருந்து சில குறிப்புகள் கொடுக்கிறேன். நான் இங்கிலாந்து போனதில்லையானதால் இவைகளைப் பற்றிய நேரடி வர்ணனை கொடுக்க இயலாததற்கு மன்னிக்கவும்.

இந்தக் கிளப்புகளில் பொதுவாக சுகஜீவனம் நடத்தும் இங்கிலாந்து பிரமச்சாரி கனவான்களுக்கு ( Bachelor Gentlemen with independent income - இது தமிழ் தெரியாத இந்தியக் கனவான்களுக்கான மொழி பெயர்ப்பு) ஒரு நல்ல புகலிடம். இங்கு அவர்கள் நாட்கணக்கில் தங்கிக்கொள்ளலாம். இந்தக்கிளப்புகளில் கூடவே மெஸ்சும் இருக்கும். ஆகவே உணவுப்பிரச்சினை இல்லை. செய்தித்தாள்கள், வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் வரவழைக்கப்பட்டு அங்கத்தினர்கள் படிப்பதற்காக இருக்கும். உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டுகள் இருக்கும்.

(உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டு - சீட்டாட்டம்தான். அதுவும் பெரிய மனிதர்கள் ஆடுவது "பிரிட்ஜ்" என்று சொல்லப் படுவதுதான். நம்ம ஊர் கனவான்கள் ஆடுவது "ரம்மி" எனப்படுவதாகும். நம்ம ஊர் சேரிக் கனவான்கள் ஆடுவது "மூன்று சீட்டு" அல்லது "மங்காத்தா" எனப்படும் ஆட்டங்கள்)

இப்படியான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆண்ட இந்தியாவிலும் இந்தக் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். அந்தக் காலத்தில், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில், விவசாயக் கல்லூரியில் நிறைய ஆங்கிலேயர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களில் பலரின் உருவப்படங்கள் இன்றைக்கும் கல்லூரியில் "பிரீமேன் ஹால்" என்று அழைக்கப்படும் ஹாலில் தொங்குகின்றன.

                                     Image result for Coimbatore Agricultural College

முன்பு அந்த ஹாலில் கல்லூரி வகுப்புகள் நடக்கும். அதில் வகுப்பு நடத்திய ஒரு பேராசிரிய நண்பருக்கு ஆங்கிலம் சற்றுத் தடுமாற்றம். அவர் மாணவர்களுக்கு அந்தப் படங்களைக் காண்பித்து அவர்களின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, தானும் அது மாதிரி ஒரு நாள் வருவேன் என்று ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது காட்டுத்தீ போல கல்லூரி முழுவதும் ஒரே நாளில் பரவி அது ஒரு பெரிய நகைச்சுவை ஜோக் ஆகி விட்டது.

அவர் என்ன சொன்னார் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

18 கருத்துகள்:

  1. அந்த பேராசிரியர் சொன்ன நகைச்சுவையாகிப்போன அந்த ஆங்கில சொற்றொடர் அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அவர் சொன்னது என்ன என்றறிய ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா..! மலரும் வேளாண்மை போல் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் இந்த மலரும் நினைவுகள் இனிமையாக இருக்கின்றன.

    தொடருங்கள் அய்யா!
    த ம +1

    பதிலளிநீக்கு
  4. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்...
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  5. அந்த ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டுத் தொடரும் போட்டிருக்கக் கூடாதோ?!!!

    பதிலளிநீக்கு
  6. அடுத்த பதிவுக்கு அழைப்பா! சரி! வருவேன் நானும்!

    பதிலளிநீக்கு
  7. சுவையாக ஆரம்பித்திருக்கிறீர்கள்! அந்த நகைச்சுவையை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சார்! நீங்க தமிழ்மணத்தில் பத்தாவுது இடைத்தை அடைந்தது பற்றி சந்தோசம்!
    எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நீங்கள் முதல் இடத்தை அடைவீர்கள்

    இப்படிக்கு
    பொன்னுசாமி. G

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, பொன்னுசாமி அவர்களே.

      என்னுடைய வாழ்நாள் கொள்கை என்னவென்றால் ஒரு இலக்கை அடைவது முயற்சியால் முடியும். ஆனால் அந்த இலக்கை தங்க வைத்துக்கொள்ள மகத்தான உழைப்பு தேவைப் படும்.

      இந்த த்தமிழ் மணத் தரவரிசையில் நானும் முன்னேற முடியுமா என்று ஒரு சுய பரிசோதனை செய்தேன். முடியும் என்று புரிந்து விட்டது. இதற்கு மேல் எனக்கு முதலாக வரவேண்டும் என்ற ஆசை இல்லை. எனக்கு முன்னால் இருக்கும் தரவரிசைப் பதிவர்களெல்லாம் என் இனிய நண்பர்களே. அவர்களைப் புறந்தள்ளி நான் முன்னேறி சாதிக்கப்போவது ஒன்று மில்லை. இப்போது வந்திருக்கும் 10 வது தரவரிசையை வைத்துக் கொண்டே என்ன செய்யப் போகிறேன்? இதை தக்கவைத்துக் கொள்ளவே நான் ஓட்டமாய் ஓடவேண்டும். அது என்னால் முடியாது. தேவையுமில்லை.

      நீக்கு
    2. சார்! நீங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது!
      எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நீங்கள் முதல் இடத்தை அடைவீர்கள். அடைய வேண்டும் என்பதே என் ஆசை! நம்ம ஆசை என்றும் வைத்துக்கொள்லாம். அதான், நம்ம ஆள் ஒருத்தர் தமிழ்மணத்தில் முதலாக வந்தால் நமக்கும் பெருமை தானே! நம்ம ஆள் என்றால் வயது பிறந்த வாழ்ந்த மாவட்டம். மற்றபடி வேற ஒன்றும் இல்லை!
      நம்ம ஊர் கிணத்துகடவுங்! நம்ம பேரை இனிஷியலுடன் தமிழில் எழுதினால் சரியா வராதுங்கோ!

      அன்புடன்,
      பொன்னுசாமி. G

      நீக்கு
  9. //பிரமச்சாரி கனவான்களுக்கு .... உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டுகள் இருக்கும்.//

    என்னவோ ஏதோ என ஆவலுடன் படித்து வந்தேன்.

    ஆங்காங்கே கொடுத்துள்ள மொழிபெயர்ப்புகள் .... ரசிக்கும்படியாக உள்ளன.

    //அடுத்த பதிவில் பாருங்கள்.//

    அடடா, இப்படி .... ’தொடரும்’ போட்டுட்டீங்களே ! OK ... waiting for the next post.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சமீபத்திய பதிவுகள் அனைத்தையுத் ஒரே மூச்சில் படித்து பின்னூட்டமும் போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி. உங்கள் பதிவுகளைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். ஆழமாகப் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் முடியவில்லை.

      நீக்கு
  10. ம்ம் சுவாரஸ்யம்தான்...அந்த நகைச் சுவை ஜோக் பார்த்துட்டமே ....முதல்ல அங்க போயிட்டு இங்க வந்ததுனால...இது மிஸ் ஆகிவிட்டது முடலில் தெரியவில்லை....தொடர்கின்றோம் ஐயா!

    பதிலளிநீக்கு