இந்த சட்டசபைத்தேர்தலில் கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கம் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து தமிழக அரசு இச்சங்கத்தின் செயல்பாடுகளுக்காக 10 கோடி ரூபாய் மான்யம் கொடுத்திருக்கிறது.
சங்கம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த அரசு தமிழர்களை எந்தெந்த வகையில் முன்னேற்றியிருக்கிறது என்று ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கவேண்டும். அவ்வளவுதான்.
சங்கத்தின் தலைவர் உடனே பொதுக்குழுவைக் கூட்டி இந்த விபரத்தை அறிவித்தார். காரியதரிசி உடனே ஒரு விண்ணப்பம் வைத்தார். இந்தப் பணத்தை பராமரிக்க ஒரு பொருளாளர் வேண்டுமே என்றார்.
தலைவர் (அதாவது நான்) இந்த சுண்டைக்காய் பணத்தைக் கையாள்வதற்கு ஒரு பொருளாளர் வேண்டுமா, எல்லாம் நானே பார்த்துக்கொள்வேன் என்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தேன். பொருளாளர் போட்டால் அப்புறம் அவன் சொல்றமாதிரி நான் ஆடவேண்டி வரும் என்பது எனக்குத் தெரியாதா என்ன?
நீங்கள் (உபதலைவர் மற்றும் காரியதரிசி) போய் உடனடியாக அந்த "அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரை உடனடியாக இங்கு கூட்டி வாருங்கள் என்றேன். அவர்களும் அந்த வேலையாக சென்றார்கள்.
தொடரும்.
பதிலளிநீக்குஐயா! முதலில் வாழ்த்துக்கள் புதிய அரசிடமிருந்து உங்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்காக 10 கோடி ரூபாய் மான்யம் பெற்றதற்காக!
அது சரி. பத்து கோடி பணம் உங்களுக்கு சுண்டைக்காய் பணமா? அந்த பணத்தைக் ‘கையாள’ என்னைப்போன்ற பணி நிறைவு பெற்ற வங்கியாளர்களை நியமிக்கலாமே?
அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரைக் காண நானும் ஆவலுடன் இருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 3