எங்கள் விவாதத்தில் முதலில் விவாதிக்கப்பட்ட பொருள் - தமிழன் என்பவன் யார்? என்பதே.
பல நூற்றாண்டு காலத்திற்கு முன் பாரதத்தின் தென் பகுதியில் தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதைய கேரளப் பகுதியும் தமிழ் நாடாகவே இருந்தது. தமிழகத்தில் மூன்று பேரரசர்கள் அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இந்த மூன்று அரசர்கள் ஆண்டு வந்த பகுதிகளில் உள்ளவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
அப்போது போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குப் போவது அரிதாக இருந்தது. ஆகவே இந்த மூவேந்தர்களின் ஆட்சிப்பகுதியில் குடியிருந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் குடியிருந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருந்து வந்தன.
இவர்களே தமிழர்கள் என்று அழைக்கப்ப்ட்டார்கள். அவர்கள் வாழ்ந்த முறையே தமிழர்களின் கலாச்சாரம் என்று அழைக்கப்ப்ட்டது. இந்தக்காலத்தில்தான் அரசர்கள் தினமும் தங்கள் சபா மண்டபத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்திரியைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி "மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா" என்பதே. மந்திரியும் இந்தக்கேள்விக்குப் பதிலாக, "ஆம் அரசே, மாதம் மும்மாரி பெய்கிறது" என்று பதில் கூறுவார்.
பிற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகின. தமிழ் நாட்டின் வளத்தினால் ஈர்க்கப்பட்டு பல தரப்பு மக்களும் இங்கே வரத்தொடங்கினார்கள். அதில் குறிப்பாக வட நாட்டிலிருந்து ஆரியர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னட தேசத்திலிருந்து கன்னடர்களும் ஆவார்கள்.
இதன் பிறகே வர்ணாசிரம நியதிகள் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டன. நான்கு வர்ணங்களும் ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் நூற்றுக்கணக்கான ஜாதிகளும் வரையறுக்கப்ப்ட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் வாழும் முறைகள் தனித்தனியாக உருவாகின. இதன் பிறகுதான் மக்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்தன.
உன் ஜாதி பெரிதா, என் ஜாதி பெரிதா என்கிற போட்டி உருவாக ஆரம்பித்தது. இந்தப் போட்டியை சிலர் ஆதரித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதில் சில சௌகரியங்கள் இருந்தன.
இப்படி உருவானதுதான் ஜாதிகள். சில ஜாதிகள் தீண்டத்தகாதவை என்று குறிப்பிடப்பட்டன. சில ஜாதிகள் மேல் ஜாதிகள் என்று குறிப்பிடப்பட்டன. ஆளும் வர்க்கத்தினர் இந்த ஜாதி வேறுபாடுகளை தங்கள் சொந்த நலனுக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
மன்னர்கள் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. அவர்கள் ஆட்சியும் மறைந்து மக்களே மக்களை ஆட்சி புரியும் காலம் வந்தது. தற்போது அந்த முறைதான் இருக்கிறது. மக்கள் பல விதமான குண நலன்கள் உடையவர்களாய் இருந்தபடியால் யாரை ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் என்று யோசித்தபோது ஒரு நல்ல விடை கிடைத்தது. "தடியெடுத்தவன் தண்டல்காரன்" என்று ஒரு முது மொழி தமிழில் உள்ளது. அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.
இந்தக் கால கட்டத்தில் பல தேசங்களிலிருந்து பல பாஷைகள் பேசும் மக்கள் தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்து இங்கேயே பலமாக வேறூன்றி விட்டார்கள். ஆகவே தற்போது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களா அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டும் தமிழர்களா என்ற குழப்பம் நிலவுகிறது. மண்ணின் மைந்தர்கள் என்று யாரை அடையாளம் காண முடியும்? "வந்தேறிகள்" என்று யாரைச் சொல்வது?
இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு வேண்டும் என்று வந்திருந்த தமிழ்த் துறைத் தலவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டவுடன் எனக்கு குழப்பம் அதிகமாகி விட்டது. எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் இதைப்பற்றி தீர சிந்தித்து ஒரு தெளிவான கருத்துடன் வருகிறேன். பிறகு நம் விவாதத்தைத் தொடரலாம் என்றார்.
அதுவும் சரிதான் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். அவர்கள் போவதற்கு முன் அவர்களுக்கு நல்ல சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அவர்களுக்கு கைச்செலவிற்காக ஒரு கவரும் கொடுக்கப்பட்டது.
இந்த மாதிரி விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு நல்ல "பொது உறவுகள் அதிகாரி" இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு யாரைப்போடலாம் என்று யோசித்தபோது பிரபல பதிவர் திரு நடனசபாபதி அவர்கள் இந்த சங்கத்தில் பணி புரிய ஆசைப்பட்ட செய்தி தெரிந்தது. ஆஹா, நல்ல அனுபவம் வாய்ந்தவராயிற்றே, அவருடைய சம்மதத்தைக் கேட்டு அவரையே நம் சங்கத்தின் பொது உறவு அதிகாரியாக நியமனம் செய்து விடுவோம் என்று தீர்மானித்தோம்.
நல்ல விவாதம்.இந்த நகைச்சுவை தொடர் பதிவில் உள்ள இந்த பதிவை ’தமிழன் யார்?’ என்று தனிப் பதிவாக போட்டு இருந்தால், இந்நேரம், சேர,சோழ,பாண்டியர்களின் மும்முனைத் தாக்குதலை சந்தித்து இருப்பீர்கள். இப்போது அவர்களுக்குள் ஒரு குழப்பம். இதை சீரியஸ் பதிவாக எடுத்துக் கொள்வதா? அல்லது சிரிப்பு பதிவாக பாவிப்பதா? என்பதே அது. - தொடர்க!
பதிலளிநீக்குநம்ம நோக்கமே அதுதானே. அடிக்கிறானா அல்லது தட்டிக்கொடுக்கிறானா என்பது தெரியக்கூடாது. அதுதான் ராஜதந்திரம். சரிதானே இளங்கோ, சார்.
நீக்குஆமாங்க ஐயா எப்போதும் மற்றவர்கள் கன்னத்தில் உள்ள கொசுவைத் தான் அடிப்பார்.
நீக்குjayakumar
தமிழன் யார், என்பதே தமிழ்நாட்டில் நகைச்சுவையாகப் போய்விட்டது. அது தான் கவலை மிகுந்த நகைச்சுவை. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழனுக்கு தமிழன் என்ற போர்வையில் கூடவிருந்தே குழிபறிக்கிறார்கள் சில கலப்பின வந்தேறிகள். அவர்களில் பலர் தமிழ்மணத்திலும் உள்ளனர். அவர்களைத் தமிழர்களால் இனங்காண முடியாதென அவர்கள் நினைத்துக் கொள்வது தான் மிகப்பெரிய நகைச்சுவை. :-)
பதிலளிநீக்குஎன் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.
நீக்கு//அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.//
பதிலளிநீக்குஐயா... வெளிப்படையாகச் சொன்னீர்கள்... பிரச்சினை வராதே?
.
நானும் தடி வைத்திருக்கிறேனே!?
நீக்குhttps://www.facebook.com/search/top/?q=tamil%20tamilan%20posts
நீக்கு//பலம் பெயர்ந்து இங்கேயே//
பதிலளிநீக்கு"புலம்"
சரி செய்து விட்டேன்.
நீக்குதமிழன் என்பது நம்ம கில்லர்ஜி தான். முகநூலில் பாருங்கள்.
பதிலளிநீக்குமுகநூல் சுட்டி கிடைக்கவில்லையே?
நீக்குhttps://www.facebook.com/tamil.tamilan.338?fref=ts
நீக்குஐயா! என்னை மக்கள் தொடர்பு அலுவராக நியமித்ததற்கு நன்றி! எப்போது பணியில் சேரவேண்டும்?
பதிலளிநீக்குநண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
என்னைப்பற்றிய பேச்சு வருதே......
பதிலளிநீக்கு