உலகம் வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 நவம்பர், 2016

ஒரு முக்கிய யுத்த தந்திரம்.

Swiss castles, beautiful, travel

அந்தக் காலத்தில் ராஜாக்கள் இருந்தார்கள் என்று சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம். அவர்கள் யுத்தத்திற்காக படைகள் வைத்திருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம்.

அப்படி படைகள் வைத்திருக்கும்போது அந்த படை வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டுமல்லவா? அவர்களைச் சும்மாவே வைத்துக் கொண்டு சம்பளம் கொடுப்பது எந்த ராஜாவிற்கும் சாத்தியமில்லை.

ஆகவே ஒவ்வொரு ராஜாவும் அண்டை நாடுகளின் மிது படையெடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. இந்தப் படையெடுப்பில் முக்கியமானது எதிரி ராஜாவின் கோட்டையைப் பிடிப்பது.

இப்படி எதிரியின் கோட்டைக்குள் புகும்போது ஒரு முக்கியமான யுத்த தந்திரம் இருக்கிறது. அதாவது கோட்டைக்குள் எதிரிப் படையின் பலம் அதிகமாக இருந்து தாக்குபவர்களின் பலம் குறைவாக இருந்தால் தபித்து ஓடி வரவேண்டுமல்லவா? அதற்காக ஒரு தப்பிக்கும் வழியைத் தயார் செய்து விட்டே கோட்டையின் உள்ளே புகுவார்கள்.

இந்த யுக்தி ராஜாக்களின் சண்டைகளுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையானது ஆகும். எந்த ஒரு ரிஸ்க்கான காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும் ஒருக்கால் அந்தக் காரியம் வெற்றியடையாவிட்டால் எப்படி சேதமில்லாமல் வாபஸ் வாங்குவது என்று திட்டமிட்டு விட்டே அந்தக் காரியத்தை ஆரம்பிக்கவேண்டும்.

இந்த யுக்தியை சாணக்ய நீதி என்றும் சொல்லலாம். சர்க்கார் உத்தியோகம் பார்த்து ரிடையர் ஆகி பென்ஷன் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எனக்கே இவ்வளவை கயுக்தியான அறிவு இருந்தால், அந்த அரசையே நடத்துபவர்களுக்கு எவ்வளவு குயுக்தி இருக்கும்?

பின்குறிப்பு: ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விவகாரத்திற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி சம்பந்தப்படுத்துபவர்கள் ராஜத்துரோக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

சனி, 22 டிசம்பர், 2012

அப்பவே நான் சொன்னேன், கேட்டீர்களா?


உலகம் அழியாதுன்னு நான் அன்னைக்கே சொன்னேன். ஒருத்தரும் கேக்கலே.  (http://swamysmusings.blogspot.com/2012/12/blog-post_14.html)

இப்ப பாருங்க உலகம் அப்படியே இருக்கு. முந்தி இருந்த அக்கிரமங்கள் எல்லாம் அப்படியே இருக்கு. இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிஞ்சு போயிடுங்களா?

எப்படியோ, இன்னும் கொஞ்சம் பாவங்கள் செய்ய கடவுள் அவகாசம் கொடுத்திருக்கார். ஆகவே மக்களே, அடுத்த உலக அழிவு அறிவிப்பு வரும் வரையிலும், கவலை இல்லாமல் தொடர்ந்து உங்கள் கடமைகளை (என்ன கடமை, மேலும் பாவம் செய்வதுதான்) தொடர்வீர்களாக.

எல்லோருக்கும் 2013 க்கான புது வருட வாழ்த்துக்கள்.