சனி, 22 டிசம்பர், 2012

அப்பவே நான் சொன்னேன், கேட்டீர்களா?


உலகம் அழியாதுன்னு நான் அன்னைக்கே சொன்னேன். ஒருத்தரும் கேக்கலே.  (http://swamysmusings.blogspot.com/2012/12/blog-post_14.html)

இப்ப பாருங்க உலகம் அப்படியே இருக்கு. முந்தி இருந்த அக்கிரமங்கள் எல்லாம் அப்படியே இருக்கு. இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிஞ்சு போயிடுங்களா?

எப்படியோ, இன்னும் கொஞ்சம் பாவங்கள் செய்ய கடவுள் அவகாசம் கொடுத்திருக்கார். ஆகவே மக்களே, அடுத்த உலக அழிவு அறிவிப்பு வரும் வரையிலும், கவலை இல்லாமல் தொடர்ந்து உங்கள் கடமைகளை (என்ன கடமை, மேலும் பாவம் செய்வதுதான்) தொடர்வீர்களாக.

எல்லோருக்கும் 2013 க்கான புது வருட வாழ்த்துக்கள்.



22 கருத்துகள்:

  1. மிகச் சரி
    நீங்கள் சொன்னது சரியாகத்தான் போச்சு
    சுவாரஸ்யமான பதிவு ரசித்து மகிழ்ந்தேன்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சார் நான் எல்லோருக்கும் முன்பே கவிதை போட்டுட்டேன் உலகம் அழியாதுன்னு என்ன மாயன் சார் என்கிட்டே சொன்னாரு நீ நல்லா இருப்பே .ஒன்னும் செய்ய மாட்டேன்னு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, கண்ணதாசன். இனி பதிவெழுத ஒரு நல்ல டாபிக் வேணுமே? என்ன பண்ணலாம்?

      நீக்கு
    2. இந்த உலகம் தானக அழியாது.... வேண்டுமானால் இந்த மனிதன் எப்படி அழிப்பான் என்று ஒரு பதிவு போடுங்களேன் நண்பரே..

      புதிய உலகம்.. புதிய பாவம்...

      நீக்கு
  3. காலம் விட்ட குத்து! மாயன் முகத்தில் காயம். வெளுத்தது சாயம்! :)))

    அதுக்குள்ள 2013 க்கு வாழ்த்தா.... நடுவில் 9 நாள், 9 பதிவு பாக்கி இருக்கே சார்...!

    பதிலளிநீக்கு
  4. இனிய நத்தார் மற்றும் புத்தாண்ட் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  5. அகிலம் எங்கும் மாயன் மயம்
    தற்போதோ மாயான் மாயம்

    பதிலளிநீக்கு
  6. 2013 க்கான புது வருட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. புது வருஷம் எதுக்கு கொண்டாடுறாங்க? இத்தனை அக்கிரமத்தையும் தாக்குபுடிச்சு சமாளிச்சு, ஒரு வருஷத்தை ஒட்டிட்டோம்டா, அதே இமாலய சாதனை என்று தானோ!!

    பதிலளிநீக்கு
  8. இப்படி பேசிக்கொண்டே இருப்பார்கள்! உலகம் இயங்கி கொண்டுதான் இருக்கும்! புது வருட வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் போல் உங்கள் பதிவில் உள்ள நையாண்டியை ரசித்தேன். 2013 – இல் என்ன பீதியை யார் கிளப்ப போகிறார்கள் என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  10. பதிவர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு பதிவு எழுதி விட்டார்கள்.
    நிஜமாகவே அடுத்து எதைப்பற்றி எழுதுவது என்பது தெரிவில்லை தான்.

    புது வருட வாழ்த்துக்கள் ஐயா!

    http://wp.me/p2RUp2-1i எனது புதுப் பதிவு.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அய்யா!இனிய கிறுஸ்மஸ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. நிறைய கோவில் கோவிலா சுத்திக்கிட்டு இருக்கேன்..அதும்பாட்டுக்கு ஏகப் பட்ட புண்ணியமா சேர்ந்துடுச்சு..என்ன பாவம் செஞ்சு அதைக் கரைக்கப் போறேனோ தெரியலையே ஆண்டவனே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க, புண்ணியம் அதிகமாப் பண்ணியிருந்தாலும் அதை அனுபவிக்கறதுக்கும் ஒரு பிறவி எடுக்கணுமாமே?

      நீக்கு
  14. எங்கள் இனிய புது வருட வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு