சாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வெறும் சாதத்தை சாப்பிடுவது எப்படி?

                                   Image result for வெள்ளை சாதம்

சம்சாரிகள் சில நாட்களில் தாங்களே சமையல் செய்யவேண்டி வரும். இந்தச் சம்பிரதாயத்தை மக்கள் இப்பவும் கடைப் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. 40 - 50 வருடங்களுக்கு முன் இந்த சம்பிரதாயம் இருந்தது.

அந்தக் காலத்தில் சமையல் தெரியாத ஆண்களுக்கான உத்திகள் இவை. சாப்பாடு மட்டும் வைப்பதில் பெரிய டெக்னிக் ஒன்றுமில்லை. நேரடி இன்ஸ்ட்ரக்ஷனில் இதைச் செய்து விடலாம். அதே மாதிரி தயிர் உறை ஊற்றி வைப்பதிலும் பெரிய கஷ்டம் இல்லை. நான் இப்படித்தான் சமையல் கற்றுக்கொண்டேன்.

இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு திவ்யமாகச் சாப்பிட்டு ஏப்பம் விடலாம். அதற்கான வழிமுறைகள் வருமாறு.

1. வெள்ளைச் சாதம் + ஊறுகாய் + நெய்.
இந்த காம்பினேஷன் பிரமாதமாய் இருக்கும்.

2. ஊறுகாய் ஸ்டாக் இல்லையென்றால் சாதம் + நெய் + அளவான உப்பு கலந்தும் சாப்பிடலாம்.

3. மேற்படி சாதக் கலவையில் சாம்பார் பொடி அல்லது மிளகாய்பொடு அளவாகச் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

4. சாதம் + இட்லிப் பொடி + நல்லெண்ணை கலவை சாதம் சூப்பராக இருக்கும்.

5. சாதம் + வாழைப் பழம் + சர்க்கரை + நெய்  = இந்தக் கலவை, சாப்பாட்டுக்கு சாப்பாடாகவும் ஸ்வீட்டுக்கு ஸ்வீட்டாகவும் வைத்துக்கொள்ளலாம்.

6. பிறகு தயிருடன் சாப்பிடுவது எல்லோரும் தினந்தோறும் செய்வதே.

இதைத் தவிர வேறு முறைகளும் இருக்கலாம். அன்பர்கள் தெரிவித்தால் மக்களுக்குப் பயன்படும்.