ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வெறும் சாதத்தை சாப்பிடுவது எப்படி?

                                   Image result for வெள்ளை சாதம்

சம்சாரிகள் சில நாட்களில் தாங்களே சமையல் செய்யவேண்டி வரும். இந்தச் சம்பிரதாயத்தை மக்கள் இப்பவும் கடைப் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. 40 - 50 வருடங்களுக்கு முன் இந்த சம்பிரதாயம் இருந்தது.

அந்தக் காலத்தில் சமையல் தெரியாத ஆண்களுக்கான உத்திகள் இவை. சாப்பாடு மட்டும் வைப்பதில் பெரிய டெக்னிக் ஒன்றுமில்லை. நேரடி இன்ஸ்ட்ரக்ஷனில் இதைச் செய்து விடலாம். அதே மாதிரி தயிர் உறை ஊற்றி வைப்பதிலும் பெரிய கஷ்டம் இல்லை. நான் இப்படித்தான் சமையல் கற்றுக்கொண்டேன்.

இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு திவ்யமாகச் சாப்பிட்டு ஏப்பம் விடலாம். அதற்கான வழிமுறைகள் வருமாறு.

1. வெள்ளைச் சாதம் + ஊறுகாய் + நெய்.
இந்த காம்பினேஷன் பிரமாதமாய் இருக்கும்.

2. ஊறுகாய் ஸ்டாக் இல்லையென்றால் சாதம் + நெய் + அளவான உப்பு கலந்தும் சாப்பிடலாம்.

3. மேற்படி சாதக் கலவையில் சாம்பார் பொடி அல்லது மிளகாய்பொடு அளவாகச் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

4. சாதம் + இட்லிப் பொடி + நல்லெண்ணை கலவை சாதம் சூப்பராக இருக்கும்.

5. சாதம் + வாழைப் பழம் + சர்க்கரை + நெய்  = இந்தக் கலவை, சாப்பாட்டுக்கு சாப்பாடாகவும் ஸ்வீட்டுக்கு ஸ்வீட்டாகவும் வைத்துக்கொள்ளலாம்.

6. பிறகு தயிருடன் சாப்பிடுவது எல்லோரும் தினந்தோறும் செய்வதே.

இதைத் தவிர வேறு முறைகளும் இருக்கலாம். அன்பர்கள் தெரிவித்தால் மக்களுக்குப் பயன்படும்.

12 கருத்துகள்:

  1. எனக்குத் தெரிந்த ஆந்திர நண்பர்கள் சாதத்தோடு எண்ணையில் மிதக்கும் ஆவக்காய் ஊறுகாயை பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. இந்த சாப்பாட்டு முறைகள் முன்பே தெரிந்திருந்தால் தனியாக இருந்தபோது உணவகத்தில் சாப்பிட்டு உடலை கெடுத்துக்கொண்டிருக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. தண்ணீர் மட்டும் ஊற்றி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சொல்லும் நிலைமை வராமல் இருந்தால் சரி...!

    பதிலளிநீக்கு
  3. தயிருடன் உண்பதையே நான் விரும்புகிறேன். தொடர்ந்து பழையதை சாப்பிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. எத்தனை வகைகள்..... சிலருக்குப் பயன்படும்...

    பதிலளிநீக்கு
  5. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. சிறு வயதில் என்னை மட்டும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு எனது பெற்றோர்கள் ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது இப்படிதான் வெள்ளை சாதத்தை சமைத்து தயிரோடு கலந்து சாப்பிட்டேன். இப்போது எல்லாம் ஹோட்டல்தான்.
    த ம 6

    பதிலளிநீக்கு
  6. வெறும் சாதத்தை எங்கே சாப்பிட்டீர்கள்.?நெய். ஊறுகாய், மிளகாய்ப்பொடி தயிர் ETC ETCஒரு வேளை இல்லாவிட்டால் ஒரு வேளை அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும்

    பதிலளிநீக்கு
  7. வெறும் சாதத்தை சாப்பிடுவது எப்படி? என தலைப்பு இட்டுவிட்டு ஏதேதோ கலக்கச் சொல்றீங்களே ! இருப்பினும் OK .... நல்ல பயனுள்ள பதிவுதான். நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  8. தயிர் வாங்கவும் வக்கற்ற ஏழை மக்கள் இருந்த முற்கால தமிழ் கூறிய நல்லுலகில், சோற்றினை தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் உப்பு மட்டும் சேர்த்து தின்னுவார்கள். நொதித்தல் காரணமாக சோற்றில் புரதம் மிகு்ம், கூடவே மதுவும் உருவாகும். ஆகவே சரக்கடித்த மோனநிலை வேண்டாம் என்றால் அந்த தண்ணீரை கொட்டிவிட்டு புதிய தண்ணீரை சேர்த்து தின்பார்கள். இதுதான் தமிழர் சோற்றினை மட்டும் உண்கும் விதமாகும். மேலும் சோற்றிலிருந்து சரக்கு உருவாக்கும் என்ற இரகசியத்தை அறிந்த சென்னை வாழ் தமிழர்கள் அக்கலையை மேம்படுத்தி சுண்டக்கஞ்சியை உருவாக்கினர் என்பது வரலாறு.

    பதிலளிநீக்கு
  9. நாமாகவே சாம்பார் வைக்க கற்று கொண்டால், ரொம்ப நல்ல சாப்பாடு கிடைக்கும், ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும், அப்புறம் அதன் அருமை புரியும். இத காத்துக நன் அமெரிக்கா போக வேண்டி இருந்தது, ஆனா எனகும் சமைக்க தெரியம் சொல்றதல எனக்கு பெருமை.

    பதிலளிநீக்கு
  10. ஐயா...

    "3. மேற்படி சாதக் கலவையில் சாம்பார் பொடி அல்லது மிளகாய்பொடு அளவாகச் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

    4. சாதம் + இட்லிப் பொடி + நல்லெண்ணை கலவை சாதம் சூப்பராக இருக்கும்".....

    நீங்கள் சாதம்+ பருப்பு பொடி +நல்லெண்ணை கலவையைத்தான் இப்படி சொல்லிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். ஏனென்றால் சாதம் + சாம்பார் பொடி அல்லது மிளகாய்பொடி அல்லது இட்லிப்பொடி (இதைக்கூட ஓரளவு முயற்சி பண்ணலாம்) நான் கேள்விப்பட்டதில்லை.

    அன்புடன்...
    சங்கர நாராயணன்.தி

    பதிலளிநீக்கு