சனி, 1 டிசம்பர், 2012

கடவுள் வாங்கும் லஞ்சம்.


எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை தமிழாக்கம் செய்து போட்டிருக்கிறேன்



இந்தியாவில் லஞ்சம் என்பது மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போயிருக்கிறது. லஞ்சத்தை இந்தியர்கள் தவறாகவே நினைப்பதில்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒரு விஷயம்.

இந்தியர்கள் லஞ்சம் வாங்குபவர்களை சகித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களை ஒருபோதும் திருத்த முயலுவதில்லை. எந்த மனிதனும் பிறக்கும்போது லஞ்ச எண்ணத்துடன் பிறப்பதில்லை. அவன், தான் வாழும் கலாசாரத்திலிருந்துதான் லஞ்சத்தை கற்றுக்கொள்கிறான்.

இந்தியர்கள் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலாவதாக அவர்களின் மதம், பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் கடவுளுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு முறை தவறிய சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த பேரத்தில் தகுதியில்லாதவர்களும் பரிசினைப் பெற வழி உண்டாகிறது.

பணக்காரர்களும் பதவியில் இருப்பவர்களும், கடவுளுக்கு பணமாகவும் தங்கமாகவும் அள்ளிக்கொடுக்கிறார்கள். எதற்காக? கடவுள் தங்கள் பதவியையும் பணத்தையும் காப்பாற்றுவார் என்பதற்காகத்தானே? அப்போது அது லஞ்சம் அல்லவா?

இப்படி கடவுளுக்கே லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதினால், கோவிலுக்கு வெளியேயும் அதே முறையைக் கையாளுவதில் தவறு இல்லை என்று நம்புகிறார்கள்.

2009 ஜூன் மாதம் ஜி.ஜனார்த்தன ரெட்டி என்பவர் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரத்தினாலான கிரீடத்தை திருப்பதி கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். ஏழைகளுக்கு இம்மாதிரி கொடுப்பதை வீண் என்று இத்தகையோர்கள் கருதுகிறார்கள். இந்தியாவின் கோவில்களில் சேர்ந்துள்ள அளவுக்கதிகமான செல்வங்களை என்ன செய்வதென்று கோவில் நிர்வாகத்திற்கு தெரியவில்லை. கோடிக்கணக்கான செல்வங்கள் கோவில்களில் புழுதி படிந்து கிடக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டினார்கள். இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போனபோது கோவில்கள் கட்டினார்கள்.

அடுத்ததாக இந்தியர்களின் தனி மனித தார்மீகக் கொள்கை கேள்விக்குரியது. இந்திய வரலாற்றில் பல ராஜ்யங்கள் அந்த நாட்டு சேனைத் தலைவர்களுக்கு கையூட்டு கொடுத்து கைப்பற்றப் பட்டவைதான். இது இந்தியாவிற்கே உள்ள தனிப்பட்ட குணம். கிரீஸ் மற்றும் ஐரோப்பாவில் நடந்துள்ள வீரம் மிக்க யுத்தங்களைப் பார்க்கும்போது, இந்தியாவில் யுத்தங்கள் எப்படி லஞ்ச லாவண்யத்தால் முடிவு செய்யப்பட்டன என்பது கேவலமாக இருக்கிறது.

இந்தியாவில் யுத்தங்களில் சண்டை போடவேண்டிய அவசியமே இல்லை. அனைத்து போர்களும் லஞ்சத்தினால்தான் முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு ராஜாவிடம் எவ்வளவு படைகள் இருந்தாலும் பணத்தினால் அவைகளை வெல்லமுடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிளாசி யுத்தத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதினால் இந்திய வீரர்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இன்றும் பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய சிப்பாய்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு காஷ்மீருக்குள் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கிளைவ் வெறும் மூவாயிரம் சிப்பாய்களை வைத்துக்கொண்டு மீர் ஜாபருக்கு லஞ்சம் கொடுத்து முழு வங்காளத்தையும் வெற்றி கொண்டதாக சரித்திரம் கூறுகிறது.

இந்தியக் கோட்டைகள் அனைத்தும் தகுந்த ஆட்களுக்கு பணம் கொடுத்தே பிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் இந்தியர்கள் மட்டும் இவ்வாறு இருக்கிறார்கள்?

இந்தியர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் நியாயமாக நடந்தால் எல்லோரும் முன்னேறலாம் என்ற கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். (ராஜா அண்டாவில் பால் ஊற்றச் சொன்ன கதையை நினைவில் கொள்ளவும்.)

ஏனென்றால் அவர்கள் மத நம்பிக்கையில் இந்த ஒற்றுமையைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அவர்களுடைய ஜாதிகள் அவர்களை தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கிறது. எல்லோரும் சமம் என்று அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர்களுக்குள் பேதங்கள் ஏற்பட்டு பல மதங்களாக, சீக்கியர், பௌத்தர், சைனர் என்று பிரிந்தார்கள். பலர் கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள். இதனால் இந்தியாவில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை.

இந்தியாவில், இந்தியர்கள் யாரும் இல்லை. இந்துக்கள், கிறித்தவர்கள், முஸலிம்கள் ஆகியோர்தான் இருக்கிறார்கள். இந்த வேறுபாடுகள் ஒரு மோசமான கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. இதே வேறுபாடுகள்தான் லஞ்சம் மிகுந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொருவரும் அடுத்தவனுக்கு எதிரி – கடவுளைத்தவிர, ஆனால் அவருக்கும் காரியம் நிறைவேற லஞ்சம் கொடுக்கவேண்டும். 

35 கருத்துகள்:

  1. இந்த மாதிரி பதிவு பதிவு போட்டதிற்காக உங்களை I T ACT ல் உள்ளே போடணும் சார்...! 😈😈😈

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் எனக்கு ஜுஜுபி. நான் பார்க்காத சட்டமா? போலீசா?

      எனக்கு கடவுள் அனுக்கிரகம் (லஞ்சக் கடவுள்) பூரணமா இருக்கு. ஸ்வாமி. யார் என்ன பண்ண முடியும்?

      நீக்கு
  2. பதிவில் சொல்லியிருப்பது முகத்திலறையும் உண்மை. தனிமனித ஒழுக்கம் என்பது குறைந்து விட்டது. இரவு 12 மணிக்கு ஆளில்லா சிக்னலில் நம்மால் நின்று செல்ல முடிவதில்லை. வரிசையில் நின்று சாமி கூட கும்பிட முடிவதில்லை. பணம் கொடுத்து ஸ்பெஷல் கியூ. லஞ்சத்தைத் திட்டுவோம். நமக்கு ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் வாங்க 'நேரமில்லை' என்று கூறி குறுக்கு வழியை நாடுவோம். நாம் இந்தியர்கள்!

    பதிலளிநீக்கு
  3. தெரிந்ததுதான் என்றாலும் இப்படி விலாவாரியாக சொல்லும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது? எப்போது நாம் இலஞ்சம் தராத/பெறாத இந்தியர்கள் ஆவோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கே இந்த தத்துவம் இப்போதுதான் தெரிந்தது. இந்தியக் கலாச்சாரம் எந்த அளவிற்கு உளுத்துப்போய் இருக்கிறது என்று அறிந்து இந்த நாட்டில் ஏன் பிறந்தோம் என்ற வேதனை மேலோங்குகிறது.

      இந்த நிலையை எப்படி சீர்திருத்த முடியும் அல்லது சீர்திருத்த முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறியாய் இருப்பது இன்னும் வேதனை. கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லலாம், ஆனால் கடவுள் இருக்கிறாரா என்பதே கேள்விக் குறியாய்ப் போனதே!

      நீக்கு
  4. 'இதை முடித்தால் தான் இவைகளை வாங்கி தருவேன்' என்று சிறு குழந்தைகளிடமிருந்து ஆரம்பித்து விடுகிறது பேரம்...!

    லஞ்சம் என்கிற சொல் "அன்பளிப்பு" என்று மாறி பல காலம் ஆகி விட்டது...

    ஜாதி, மதம், கடவுள், etc., - இவையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காதவர்களை விட, தான் நம்புவதை அடுத்தவர் நம்ப வேண்டும் / தான் நம்பாததை அடுத்தவரும் நம்பக் கூடாது என்று அலைபவர்களின் (1) எண்ணிக்கை தான் அதிகம்... அவர்களையும் ஆமாம் போடும் கூட்டமும் அதிகம்... (2)

    (1) அல்லது (2) எது அதிகம்...? கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. படிக்கும் பொழுது மனம் ஏனோ கவலையால் சூழ்கிறது. அனால் இதுதான் உண்மையின் மிகஅருகாண்மை.

    பதிலளிநீக்கு
  6. இதற்காக இந்த நாட்டில் ஏன் பிறந்தோம் என்று எண்ண தேவை இல்லை சார். எதிர்கால சந்ததியினருக்கு சரியான வழிகாட்டுதலையும், ஆன்மிகத்தின் உண்மையான அடிப்படைகளையும் சொல்லிக்கொடுத்தாலே போதும் சார். சுருக் என்று குத்தும் ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
  7. கிணற்று நீரில் நஞ்சு கலந்தால் எடுத்து விடலாம் உற்றே நஞ்சானால் என்ன செய்வது...? அதுதான் நம்முடைய இன்றைய நிலை!

    பதிலளிநீக்கு
  8. மதம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்
    அதனால் மதம்பிடித்துத் திரிகிறார்கள்.

    சிந்திக்கத்தக்க பதிவு. நன்று.

    பதிலளிநீக்கு
  9. இதுபோல நடு நிலையுடன் யோசிக்கவே ஒரு மன நிலை வேண்டும். ஒரு வீரம் வேண்டும். நிச்சயம் அந்த மன நிலை எவருக்கும் 40 வயதிக்கு மேலே தான் வரும். இதுபோல மாறுபட்ட கோணங்களில் இருந்து கருத்துக்களை பார்ப்பது நாம் நமை சீர்செய்துகொள்ள உதவும். மதமும் லஞ்சமும் இணைந்து பிணைந்து கிடப்பதால் லஞ்சத்தை ஒழிக்க இயலாது என்ற ஆற்றாமையே மிஞ்சும்.

    பதிலளிநீக்கு
  10. சாமி பேரை தலைப்பில் வச்சுகிட்டு அசைவம் தின்னும் சாமி, சாதி சாமி, லஞ்சம் வாங்கும் சாமி அப்படின்னு தினம் தினமும் சாமியை போட்டு தாக்கிக்கிட்டு இருக்கீங்க....... இத்தனையும் பண்ணிட்டு

    \\எனக்கு கடவுள் அனுக்கிரகம் (லஞ்சக் கடவுள்) பூரணமா இருக்கு. \\

    அப்படின்னு சாமி தலையில் ஒரு ஐஸ் ஃபேக்டரியே வச்சு கூல் பண்ணப் பாக்கிறீங்க. குழந்தையும் கில்லி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டுறீங்க. சாமி இதுக்கெல்லாம் மசியிற ஆள்னு நீங்க குறைவா எடை போட்டுட்டீங்க. மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தெளிவா படிக்கத் தெரிஞ்சவன்கிட்ட இதெல்லாம் நடக்காது. எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்பதற்குப் பெயர் வாழ்க்கையல்ல குறைந்த பட்சம் சில நெறிமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாக பதிவுகள் வரும். பொறுத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தத்தில சாமி கண்ணைக் குத்திடும் அப்படீங்கறீங்க. இந்தப் பதிவுலகில முகமூடி போட்டுக்கிட்டு அக்கிரமம் பண்ணறவங்களையெல்லாம் கண்ணைக் குத்தீட்டு அப்புறம்தானே எங்கிட்ட வரும். அப்ப பாத்துக்கிறேன். காசைக் கொஞ்சம் செலவழிச்சா எல்லாம் சரியாப் போகுது.

      நீக்கு

  11. அனைத்தும் உண்மைதான்
    நம்மவர்கள் கடவுள் பெயரால் செய்யும் தவறுகள் மிக அதிகம்

    கடவுள் பற்றிய எனது பார்வை

    http://www.kalingaimoorthi.blogspot.in/2011/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  12. \\மொத்தத்தில சாமி கண்ணைக் குத்திடும் அப்படீங்கறீங்க. \\ இது வேண்டாம், அவ்வாறு நான் சொல்ல மாட்டேன். ஐயா தாகளே ஒரு ஆசிரியர், நீங்கள் நாலு பேருக்கு அறிவுரை சொல்ல வேண்டும், நீங்களே இப்படி வழிதவறிச் செல்லலாமா? திருக்குறளில் கீழ்கண்ட அதிகாரங்களில் திருவள்ளுவர் மனைவியைத் தவிர பிற பெண்களுடன் சேர்த்தல், மது அருந்துதல், சூதாட்டம் புலால் உண்ணுதல் போன்ற காரியங்களைத் தவிர்க்கச் சொல்கிறார்.


    பொருட்பால் - நட்பியல் - வரைவின்மகளிர்
    பொருட்பால் - நட்பியல் - கள்ளுண்ணாமை
    பொருட்பால் - நட்பியல் - சூது
    அறத்துப்பால்-துறவறவியல்-புலான்மறுத்தல்.

    http://www.thirukkural.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

    இவை நான்கும் ஒழுக்கக் கேடுகளே என்பது வள்ளுவன் வாக்கு. அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்பதை இன்றைக்கு படித்தவன் என்று சொல்லிக் கொள்பவன் சிந்திக்க மாட்டான், தங்களைப் போன்ற சான்றோர்களும் அப்படியே இருக்கலாமா? ஔவையார் புலால் உண்பதை ஆதரித்திருக்கிறாரா? அவர்கள் இதையெல்லாம் கூடாது என்பதற்கு நோக்கமேதும் இருக்காதா? நீங்கள் புலால் மட்டும் உண்பவராக இருக்கலாம். தமிழகத்தில் மது சட்டப் படியே அருந்தாலாம். மும்பையில் விபச்சாரம் சட்டப் படி நடக்கிறது. அமரிக்காவில் சூதாட்டத்தை நடத்த பெரிய பெரிய நகரங்களையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியானால், எதுவுமே தப்பில்லை எங்கே வாழ்கிறாயோ அந்த சட்டத்தை மதித்தால் போதும் இந்த நான்கும் பண்ணலாம் தப்பேயில்லை என்றாகி விடுமா? வள்ளுவன் படத்தை வீட்டில் ஆணியடித்து தொங்க விட்டு விட்டு அவனது வாக்கை குப்பைத் தொட்டியில் போடுகிறீர்களே நியாயமா? மனம் போன போக்கில் எதைவேண்டுமானாலும் செய்வதற்கு நீதி நூல்கள் எதற்கு? சான்றோர்கள் வாக்குகளுக்கு என்ன தான் மதிப்பு, மரியாதை?

    \\இந்தப் பதிவுலகில முகமூடி போட்டுக்கிட்டு அக்கிரமம் பண்ணறவங்களையெல்லாம் கண்ணைக் குத்தீட்டு அப்புறம்தானே எங்கிட்ட வரும். அப்ப பாத்துக்கிறேன். காசைக் கொஞ்சம் செலவழிச்சா எல்லாம் சரியாப் போகுது.\\ அவங்கவங்க செய்ததற்கு நேரம் வரும் போது, செய்த செயலுக்கு ஏற்ப தண்டனையும் வரும். லஞ்சம் குடுத்து தப்ப இது அரசாங்க அலுவலகம் அல்ல. நேர்மையாகவும் மனிதாபிமானத்தோடும் மற்ற எல்லா நல்ல குணங்களோடும் வாழ்ந்து வரும் உங்களுக்கு சாமி கண்ணைக் குத்தும் பயம் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, இந்தப் பின்னூட்டத்தை போன பதிவிற்குப் போட்டிருக்கவேண்டும். பரவாயில்லை. உங்கள் கருத்துகளுக்கு என் பதில் கருத்தைக் கூறுகிறேன்.

      தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் அவசியம். இல்லையென்றால் சமுதாயம் அழிந்துவிடும். மது , மாது, சூது, களவு, பொய், கொலை, புலால் உண்ணுதல் ஆகியவை தவிர்க்கப்படவேண்டியவை என்று வள்ளுவர் மட்டமல்ல, பல பெரியோர்களும் கூறியிருக்கிறார்கள். அவைகள் எல்லாம் மிக உன்னதமான, வாழ்க்கையில் கடைப்பிடுக்கவேண்டிய பண்புகள்.

      ஆனால் இவைகளில் புலால் உண்ணுதலைப் பற்றி இன்றைய கால நிலையில் அவர் சொன்ன கருத்தை பரிசீலிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
      பெரும்பாலான மக்கள் புலால் உண்ணுகிறார்கள். வள்ளுவர் கொள்கை இங்கு அடிபட்டுப் போகிறது. இது சரியா, தவறா என்பது காலம்தான் சொல்லவேண்டும். இதைப் பற்றிய விவாதக் முடிவற்றது. இன்றைய காலகட்டத்தில் புலால் உண்பது பெரிய தவறல்ல என்பது என் முடிவு. மாற்றுக் கருத்துக்களை வரவேற்குறேன். மாற்றுக் கருத்தாளர்களிடம் எனக்கு வெறுப்பு இல்லை.

      வள்ளுவர் சொன்ன மற்ற குற்றங்களையும் மக்கள் செய்கிறார்கள். அவை நியாயமானதா என்பதை அன்று இருக்கும் சமுதாயம்தான் சொல்லவேண்டும். அறிஞர்கள் அல்லது சிந்தனாவாதிகள் சொல்வது எதுவும் நடைமுறையில் எடுபடுவதில்லை. என் மனதில் எனக்கென்று சில வாழ்வு நெறிகள் வைத்திருப்பேன். அதை மற்றவர்கள் மத்தியில் சொல்லலாம். ஆனால் பயன் இருக்குமா? அதை யோசித்துத்தான் செயல்பட வேண்டும்.

      முக்கியமானது - பதிவுலகம் மாயா லோகம். இங்கு முகமூடிகளே அதிகம். இது ஒரு பொழுது போக்கு தளம் என்று ஆகிவிட்டது. இங்கு எழுதும் எந்த விஷயத்திற்கும் நீடித்த ஆயுள் கிடையாது. அவைகள் காலத்தால் அழியாத காவியங்கள் அல்ல. அந்த எழுத்துக்களை சீரியசாக கடைப்பிடிப்பவர்களும் இல்லை. அதற்கு மேல் பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.

      நீக்கு
    2. திருத்தங்கள்

      1.கடைப்பிடுக்கவேண்டிய = கடைப்பிடிக்கவேண்டிய

      2.விவாதக் = விவாதம்.

      நீக்கு
  13. உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டிய பதிவு. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து எப்படி இந்நிலையில் இருந்து வெளி வருவது என்று யோசிக்கா வேண்டும். தனி மனித ஒழுக்கம் தான் சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

    பதிலளிநீக்கு
  14. ஔவையார் அசைவமுண்டாரோ தெரியாது, பாரிசில் தமிழருவி மணியன் பேசிய போது ஔவை மது உண்டதாக இலக்கிய பாடலொன்றின் ஆதாரத்துடன் கூறினார்.

    ஐயா!
    இவ்வளவு இழிதனம் செய்த சங்கராச்சாரியை இன்னும் பல்லக்கில் பவனிவர வைத்த இறைவன், லஞ்சம் வாங்காமலா? இதெல்லாம் செய்கிறார்.

    அதனால் நாமும் ஆடு, கோழியைச் சாப்பிட்டுவிட்டு லஞ்சம் கொடுப்போம்.

    / நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பேர்சங் கரன்//
    அவன் உங்களையும், என்னையும் பார்த்துக் கொள்வான்.

    நீங்கள் உண்மையைக் கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமுதாய ஒழுக்கம் என்பது கால, தேச வர்த்தமானங்களைப் பொருத்தது. தனி நபர் ஒழுக்கம் சமுதாய ஒழுக்கங்களின் வரைமுறைக்குட்பட்டு இருக்கவேண்டும்.ஆனால் மற்றைய மனிதர்களை தாக்காத வரையில் எப்படி வேண்டுமானாலும் அவரவர்கள் மனப்பாங்கின்படி தங்கள் ஒழுக்கங்களை வைத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. இது என் கருத்து.

      நீக்கு
  15. \\நண்பரே, இந்தப் பின்னூட்டத்தை போன பதிவிற்குப் போட்டிருக்கவேண்டும். பரவாயில்லை. உங்கள் கருத்துகளுக்கு என் பதில் கருத்தைக் கூறுகிறேன்.\\ போட்டிருப்பேன். என்னடா இந்த அடி அடிக்கிறாரே ........... இவரே இப்படி இருந்தால் எப்படி.......... ஒரு லெவல் வரைக்கும் பதில் சொல்லலாம், நீங்க அதையும் தாண்டிப் போயிட்டிட்டீங்க. என்ன சொல்வது எனத் தயங்கி விட்டுட்டேன்.


    \\ஆனால் இவைகளில் புலால் உண்ணுதலைப் பற்றி இன்றைய கால நிலையில் அவர் சொன்ன கருத்தை பரிசீலிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.\\ ஐயா, உங்க நிலைமையில புலால் உண்ணுதல் பரிசீலிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது அப்படின்னு முடிவு பண்ணி அதை நீங்களும் செஞ்சு, அதை மற்றவர்களும் செய்தால் தப்பில்லை என்று ஆதரிக்கும் இடத்துக்கு வந்திட்டீங்க. வேறு சிலர் மற்ற மூன்றும் கூட பரிசீலிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று முடிவு பண்ணி அது தப்பில்லை என்கிற முடிவுக்கு வந்திட்டாங்க. ஆண்களுடைய கால, தேச வர்த்தமானங்களும், அவர்கள் வாழும் நாட்டின் சட்டமும் அதை அனுமதிக்கிறது. அனாலும், அந்த மூனும் மனிதன் செய்வதில் தப்பில்லை என்று மனதார நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? மாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன். அதே மாதிரி நீங்க புலால் உண்ணுவதை ஆதரிப்பதையும் என்னால் ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான்.

    \\பெரும்பாலான மக்கள் புலால் உண்ணுகிறார்கள். வள்ளுவர் கொள்கை இங்கு அடிபட்டுப் போகிறது. \\ அப்படிப் பார்த்தா பெரும்பாலான மக்கள் லஞ்சம் குடுக்கிறார்கள், ஆனாலும் அது நாட்டுக்கோ, மக்கள் நலனுக்கோ நன்மையானது, பின்பற்றலாம் என்று ஆகாது என்பதை நீங்களே அறிவீர்கள். பலமுறை இது மாறவேண்டும் என்று நீங்களே வருத்தப் பட்டிருக்கிறீர்கள். எனவே எல்லோரும் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அது சரி என்றாகிவிடாது.

    \\இது சரியா, தவறா என்பது காலம்தான் சொல்லவேண்டும். இதைப் பற்றிய விவாதக் முடிவற்றது. இன்றைய காலகட்டத்தில் புலால் உண்பது பெரிய தவறல்ல என்பது என் முடிவு. மாற்றுக் கருத்துக்களை வரவேற்குறேன். மாற்றுக் கருத்தாளர்களிடம் எனக்கு வெறுப்பு இல்லை.\\ திருக்குறள் மாதிரி சான்றோர் வாக்கை பின்பற்றவேண்டும், அது முடியாத பட்சத்தில் மனதளவிலாவது வருத்தப் பட வேண்டும் தற்போது முடியாவிட்டாலும் பின்னொரு நாளில் திருந்து அவர்கள் சொன்ன வழியில் நடக்க முயல வேண்டும். அதை விடுத்து அவர்கள் செய்ய வேண்டாம் என்பதை தானும் செய்து, எல்லோரும் செய்யுங்கப்பா தப்பேயில்லை என்று பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து.

    \\சமுதாய ஒழுக்கம் என்பது கால, தேச வர்த்தமானங்களைப் பொருத்தது. தனி நபர் ஒழுக்கம் சமுதாய ஒழுக்கங்களின் வரைமுறைக்குட்பட்டு இருக்கவேண்டும்.ஆனால் மற்றைய மனிதர்களை தாக்காத வரையில் எப்படி வேண்டுமானாலும் அவரவர்கள் மனப்பாங்கின்படி தங்கள் ஒழுக்கங்களை வைத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. இது என் கருத்து.\\ இது சட்டப் படிதான் சரியாகும். மேலே பார்த்தபடி சட்டம் **கால, தேச வர்த்தமானங்களைப் பொருத்து** புலால் உண்ணுதல், விலை மாதர் தொடர்பு, கள்ளுன்னுதல், சூதாடுதல் என எல்லாவற்றையும் அனுமதிக்கிறது, அதனாலேயே அவை மானுடத்துக்கு ஏற்றதென்று ஆகி விடாது. நாட்டில் சட்டங்கள் போடுவதாலேயே அந்நாடு சுபிட்சமடையும் என்றால் இந்தியாவும் சுபிட்சமாகியிருக்க வேண்டும். சான்றோர் வாக்குகளே நிலையானவை. அவற்றை மீறும் போதெல்லாம் மனித சமுதாயம் சீரழியும். இது என் கருத்தல்ல உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலமும் கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. தகுதியுள்ளவை நிலைக்கின்றன. மற்றவைகள் மறைந்து போகின்றன. சமூகங்களும் கலாச்சாரங்களும் இப்படித்தான். பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள்தான் கலாசாரம் எனப்படுகின்றது.

      எது சரி, எது சரியல்ல என்பதை தனி நபர்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்களாக சிந்தித்து கடைப்பிடிக்கவேண்டும். ஆனால் அதை மற்றவர்களும் கடைப்பிடிக்கவேண்டும், அல்லது அதை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண்.

      தனி நபர் ஒழுக்கம் என்பது அவரவர் விருப்பம். அதை குறை சொல்லவோ புகழவோ ஒன்றுமில்லை.

      நீக்கு
  16. திருத்தம்:

    \\ஆண்களுடைய கால, தேச வர்த்தமானங்களும், அவர்கள் வாழும் நாட்டின் சட்டமும் அதை அனுமதிக்கிறது.\\ அவர்களுடைய கால, தேச வர்த்தமானங்களும், அவர்கள் வாழும் நாட்டின் சட்டமும் அதை அனுமதிக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. \\காலமும் கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. தகுதியுள்ளவை நிலைக்கின்றன. மற்றவைகள் மறைந்து போகின்றன. சமூகங்களும் கலாச்சாரங்களும் இப்படித்தான். பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள்தான் கலாசாரம் எனப்படுகின்றது.\\ உண்மைதான். கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கிறது. மேற்சொன்ன சான்றோர்களால் தடை செய்யப் பட்ட நான்கு செயல்கள் எநதளவுக்கு தலைதூக்குகிறதோ அந்தளவுக்கு கலாசாரம் சீரழிந்துபோகிறது என்பதே பொருள்.

    \\எது சரி, எது சரியல்ல என்பதை தனி நபர்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்களாக சிந்தித்து கடைப்பிடிக்கவேண்டும். ஆனால் அதை மற்றவர்களும் கடைப்பிடிக்கவேண்டும், அல்லது அதை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண்.

    தனி நபர் ஒழுக்கம் என்பது அவரவர் விருப்பம். அதை குறை சொல்லவோ புகழவோ ஒன்றுமில்லை. \\ தனி நபர் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதற்கு அவர்களுடைய கால, தேச வர்த்தமானங்களும், அவர்கள் வாழும் நாட்டின் சட்டமும் தேவையான வரமுரையைத் தீர்மானிக்கிறது. தனி நபரான நான் யாரையும் வற்புறுத்த முடியாது என்பதையும் அறிவேன். சான்றோர்கள் வாக்கு மேரப் படும்போதெல்லாம் சமூகத்துக்கு தீய விளைவுகளும் ஏற்ப்படும் அதையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும், புலம்பி பிரயோஜனமில்லை.

    பதிலளிநீக்கு
  18. இக்பால் செல்வன் has left a new comment on your post "கடவுள் வாங்கும் லஞ்சம்.":

    மது, மாது, மாமிசம் கொள்ளாத கடவுள் தான் உண்டா உலகில் சொல்லுங்கள். வள்ளுவனும், அவ்வையார் ( பலர் ) யாவரும் கூறிய தனி மனித மேன்மையை கற்பித்தது பரம்பொருளை மறுத்த நாஸ்திக சமணர் அல்லவே, பொறுக்கிய கடவுளை கைவிட்டு ஆதிபகவன் உட்பட தீர்தங்கரர் வழி செல்லட்டும் அப்புறம் அடுத்தவனுக்கு பாடம் எடுக்கட்டும். விஷ்ணு அருந்தாத மதுவா, கிருஷ்ணர் சுகிக்காத மாதா, சிவன் புசிக்காத மாமிஸமா, இயேசு குடிக்காத மதுவா, முகம்மது தொடாத பெண்ணா, இவர்களே இப்படி என்றால் இவர்கள் அடியாரும் அவ்வாறே இருப்பர். லஞ்சமும் காணிக்கை என்ற ஒன்றின் மறுவடிவம் தானே, ஐயா.

    பதிலளிநீக்கு
  19. இக்பால் செல்வன் has left a new comment on your post "கடவுள் வாங்கும் லஞ்சம்.":

    அவ்வளவும் அப்பட்டமான உண்மை, இதை சொன்னால் நம் மீது கோப படுவார்கள். நேர்மை என்ற ஒன்றே தெற்காசிய சமூகத்துக்கு கிடையாது என்பதே மெய்யாக உள்ளது. இப்பதிவை படைத்த பாக்கியவான் வாழ்க.

    பதிலளிநீக்கு
  20. ANGOOR has left a new comment on your post "கடவுள் வாங்கும் லஞ்சம்.":

    அருமையான பதிவு.அருமையான பதிவு.அருமையான பதிவு.அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  21. \\மது, மாது, மாமிசம் கொள்ளாத கடவுள் தான் உண்டா உலகில் சொல்லுங்கள். வள்ளுவனும், அவ்வையார் ( பலர் ) யாவரும் கூறிய தனி மனித மேன்மையை கற்பித்தது பரம்பொருளை மறுத்த நாஸ்திக சமணர் அல்லவே, பொறுக்கிய கடவுளை கைவிட்டு ஆதிபகவன் உட்பட தீர்தங்கரர் வழி செல்லட்டும் அப்புறம் அடுத்தவனுக்கு பாடம் எடுக்கட்டும். விஷ்ணு அருந்தாத மதுவா, கிருஷ்ணர் சுகிக்காத மாதா, சிவன் புசிக்காத மாமிஸமா, இயேசு குடிக்காத மதுவா, முகம்மது தொடாத பெண்ணா, இவர்களே இப்படி என்றால் இவர்கள் அடியாரும் அவ்வாறே இருப்பர். லஞ்சமும் காணிக்கை என்ற ஒன்றின் மறுவடிவம் தானே, ஐயா.\\

    இதில எழவும் புரியல. முதலில் மனுஷனுக்கு நேர்மை வேணும், பித்தலாட்டம் செய்து வாதத்தில் ஜெயிக்க முயற்சி செய்யக்கூடாது. நான் மேற்கோள் காட்டியது திருவள்ளுவரை மட்டும் தான். அவர் மாமிசம் உண்டு, கண்ட கண்ட பெண்களுடன் சுற்றியிருந்தால் இவர் உலரியிருப்பதில் அர்த்தம் இருக்கிறது. அல்லது விஷ்ணு, கிருஷ்ணர், சிவன் இவர்கள் சொன்ன எதையாவது நான் சொல்லியிருந்தாலும் அர்த்தம் இருக்கிறது. அல்லது சமணர் பற்றி சொல்ல வந்த இவராவது அவரது கொள்கை என்ன, அதிலிருந்து சொல்ல வருவது என்னவென்றாவது சொல்ல வேண்டும் இப்படி எதுவுமே இல்லாத நிலையில் சொன்ன வாதத்துக்கு பதிலளிக்க இயலாமல், சொத்தையாக எதையாவது உளறி விட்டு ஆஹா நான் வீரன் தீரன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்வது வெட்கப் படவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  22. \\அவ்வளவும் அப்பட்டமான உண்மை, இதை சொன்னால் நம் மீது கோப படுவார்கள். நேர்மை என்ற ஒன்றே தெற்காசிய சமூகத்துக்கு கிடையாது.\\ இதை நீங்கள் முன்னரே நான் வள்ளுவனை மேற்கோள் காட்டியபோதே, நான் நேர்மையற்றவன் என்பதை வள்ளுவன் வாக்கிலிருந்து பதிலுக்கு நீங்கள் மேற்கோள் காட்டி நிரூபித்திருந்தால் நானும் ஏற்றிருப்பேன் ஆனால் வள்ளுவன் வாக்குப் படி இதெல்லாம் தப்புதான் என்று நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டு தற்போது நேர்மை என்பதே என்னிடத்தில் இல்லை என்கிறீர்கள். நான் பெரிய மகான் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன் அங்கங்கு நேர்மை தவறியிருக்கலாம் ஒப்புக் கொள்கிறேன், ஆனால் நான் இங்கே சொன்ன எதிலும் நேர்மை தவறவில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூறுவேன் . அப்படித் தவறியிருந்தால் நீங்கள் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டுங்கள் ஒப்புக் கொள்ளத் தயார்.

    ஐயா, கூடாநட்பு கேடாய் முடியும் என்பார்கள். தங்களை வாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. நீங்கள் சொல்வதை சிரம் தாழ்த்தி நான் ஏற்கத் தயார். அதற்காக இப்படிப் பட்ட நட்பு பாராட்டீதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,
      பொறுத்தார் பூமியாள்வார். 2012 டிசம்பர் வரை பொறுங்கள். உங்கள் வாதங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கூறுகிறேன். அப்பறம் இத்தகைய வாதங்களுக்கு தேவை இருக்காது.

      நீக்கு
  23. பல்வேறு பெருமைகளுக்கு காரணமான இந்தியர்கள், இன்று லஞ்சம் என்ற சீர் கேட்டில் சிக்கி தவிக்கிறார்கள். இங்கே யாருக்கும் வெட்கம் இல்லை. கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும்.

    பதிலளிநீக்கு