(ஒரு கல்யாண அழைப்பிதழில் அச்சடித்திருந்தது.)
- தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.
- துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.
- புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.
- விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
- நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.
- இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.
- உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.
- உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.
- யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
- ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
- பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.
- ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.
- வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.
- பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.