இரண்டு தினங்களுக்கு
முன் நிகழ்ந்த
ஒரு நிகழ்ச்சி.
நான் வசிக்கும்
தெருவில் பாதாளச்
சாக்கடை பதிப்பதற்காக
குழிகள் தோண்டியுள்ளார்கள்.
தோண்டின மண்
பூராவும் ஒரு
புறம் குவித்து
வைத்துள்ளார்கள். மண்
குவிக்காத பக்கம்
ஒரு ஐந்து
அடி அகலம்
மட்டுமே உள்ளது. அதில்
நடக்கும் மக்களும்
இரு சக்கர
வாகனங்களும் போய்
வந்து கொண்டிருந்தன.
நான் காலை
7 மணிக்கு நடைப்பயிற்சி
போய்விட்டு வரும்போது
ஒரு கார்க்காரன்
படு வேகமாக
அந்த இடைவெளியில்
சென்றான். நான்
அதிசயப்பட்டேன். இதில்
கார் செல்ல
முடியாதே, இவன்
என்ன செய்யப்போகிறான்
என்று பார்த்துக்கொண்டே
வந்தேன். கொஞ்ச
தூரம் போன
பிறகு மேலே
செல்வதற்கு வழி
இல்லை. குறுக்கே
சிமென்ட் மூட்டைகள்
அடுக்கி வைத்திருந்தார்கள்.
அந்த கார்
டிரைவர் இறங்கி
பாதியாக இருந்த
ஒரு சிமென்ட்
மூட்டையைத் தூக்கி
வீசினான். அது
சாக்கடைத் தண்ணீரீல்
விழுந்தது. அதைத்
திரும்ப தூக்கப்
போனவன், ஹூம், இது
சர்க்கார் சிமென்ட்டுதானே
என்று சொல்லிவிட்டு
அதை அப்படியே
விட்டு விட்டான்.
நான் அப்போது
அந்த இடத்திற்கு
வந்து விட்டேன்.
நான் அவனைப்
பார்த்து சொன்னேன்.
சர்க்கார் சொத்தாயிருந்தால்
அதை என்ன
வேண்டுமானாலும் செய்யலாமா,
அதை எடுத்து
தரையில் போடு
என்று சொன்னேன்.
அவன் அதைக்கேட்க
நீ யார்
என்றான். நான்
இந்த வீதியில்
குடியிருப்பவன் என்று
சொன்னேன். அதற்கு
அவன் கண்ட
மேனிக்கு சத்தம்
போட ஆரம்பித்தான்.
நீ எங்கே
வேண்டுமானாலும் யாரிடம்
வேண்டுமானாலும் போய்க்கொள்,
எனக்கு கவலையில்லை
என்று தாறு
மாறாகப் பேச
ஆரம்பித்தான். அப்போதுதான்
கவனித்தேன், அவன்
ஏகத்திற்கும் குடித்திருக்கிறான்
என்று தெரிந்தது.
இனி இவனிடம்
பேசுவதில் எந்தப்
பயனும் இல்லை
என்று நான்
அந்த இடத்தை
விட்டு வந்து
விட்டேன். இதில்
ஒரு முக்கியமான
விஷயம் என்னவென்றால்,
அந்த இடத்திற்குப்
பக்கத்தில் இருக்கும்
வீட்டிலுள்ளவர்கள் எல்லாம்
அவரவர்கள் வீட்டு
வாசலில் நின்ற
கொண்டு வேடிக்கை
பார்த்தார்களே தவிர
ஒருவராவது எனக்குத்
துணையாக அவனைத்
தட்டிக் கேட்க
வரவில்லை. இத்தனைக்கும்
அவர்கள் அனைவரும்
எனக்கு நன்றாகப்
பரிச்சயம் ஆனவர்களே.
ஒரே தெருவில்
பல ஆண்டுகளாக
குடியிருப்பவர்கள்தாம்.
இதிலிருந்து நான்
கற்றுக்கொண்ட பாடம்
என்னவென்றால் ஆபத்துக்
காலங்களில் அக்கம்
பக்கம் இருப்பவர்கள்
உதவுவார்கள் என்ற
எண்ணம் தவறு
என்பதுதான். பக்த்து
வீட்டில் கொலை
நடந்தாலும் கூட
கதவைப் பலமாக
சாத்திக்கொள்வார்களே தவிர
உதவிக்கு யாரும்
வரமாட்டார்கள்.
இந்தப் பதிவைப்
படிக்கும் அன்பர்களே,
இந்த நீதியை
மனதில் கொள்ளவும்.