செவ்வாய், 14 மே, 2013

அஞ்சிலே ஒன்று பெற்றான்


இந்தப் பாடலை பலமுறை பல இடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் முறையாக அர்த்தம் தெரிந்து கொள்ளவில்லை. இந்தப் பதிவில் 

 http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html 


இந்த உரையைக் கண்டேன். எல்லோருக்கும் பயன்படுமென்று கருதி அதை அந்த ஆசிரியரின் அனுமதி பெறாமலேயே இங்கு பிரசுரித்துள்ளேன். அவருடைய ஈமெயில் விலாசம் கிடைக்கவில்லை. அதனால் அவரிடம் அனுமதி வாங்கவில்லை. அனுமதி வாங்காததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

இந்தப் பதிவுதான் என்னுடைய முதல் "காப்பி-பேஸ்ட்" பதிவு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்

                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் 

இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்



கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று நினைத்திருகிறான்  கவியர்...

அருஞ்சொல் விளக்கம்:

ஆறு = வழி
அளித்து = கருணை அளித்து
ஆரியர் = வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்

மேற்கண்ட பதிவு கீழே கொடுத்துள்ள தளத்திலிருந்து, அதன் ஆசிரியரிடமிருந்து எந்த விதமான அனுமதியும் வாங்காமல் பிரசுரிக்கப்பட்டது. அவருடைய முகவரி தெரியாததால் இவ்வாறு செய்யவேண்டி நேர்ந்தது.
http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html

19 கருத்துகள்:

  1. மதச்சார்பின்மை என்னும் போர்வையில் மொழியின் அழகை பள்ளிநாட்களில் முழுவதும் அனுபவிக்கமுடியாமல் அழித்துவிட்டார்கள். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கவிதை. பதித்தவர்க்கும் நன்றி. தங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படித்தேன். ரசித்தேன். எனவே நீங்கள் ஏகப்பட்ட வலைப்பூக்களைப் பார்வையிடுகிறீர்கள் தெரிகிறது. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற என்ன வேலை எனக்கு? ரிடைர்டு ஆகி வீட்டில சும்மா உக்கார்ந்து கொண்டு இருந்தா மூளை துருப்பிடிச்சுப் போகாதா?

      நீக்கு
  3. படித்தேன். ரசித்தேன். எனவே நீங்கள் ஏகப்பட்ட வலைப்பூக்களைப் பார்வையிடுகிறீர்கள் என்று தெரிகிறது. :))) 'என்று' விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் முதல் பதிவைவே கம்பனில் இருந்து தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ந்தேன் அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமை... கருத்திட வரும் அனைவருக்கும் அப்படியே ஒரு தளத்தையும் அறிமுகம் செய்து வைத்து விட்டீர்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  6. நல்லதை ‘காப்பி’ அடிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். (பேராசிரியரான தாங்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா எனத் தெரியவில்லை!) கம்பனின் கவித்திறனை விளக்கும் இந்த பாடலை பொருளோடு தந்த திரு ஆறுமுக வடிவேல் அவர்களுக்கும், அவரது பதிவை எங்களோடு பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் தவறில்லை. நாம் எல்லோருமே அடுத்தவர்களைக் காப்பி அடித்துத்தான் வளர்ந்திருக்கிறோம். (பரீட்சையில் அல்ல) உலகில் எதுவும் புதிதல்ல. பழையதிற்கு மேல்பூச்சு கொடுத்து புதிது என்கிறோம்.

      நீக்கு
  7. // இந்தப் பதிவுதான் என்னுடைய முதல் "காப்பி-பேஸ்ட்" பதிவு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.//

    நீங்கள் எந்த தளத்திலிருந்து இதனை எடுத்து உங்கள் பதிவில் பதிந்து உள்ளீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். எனவே, தப்பில்லை! ஆனால் சிலர் அடுத்தவர் பதிவுகளை எந்த அறிவிப்பும் இன்றி அவர்கள் எழுதியது போன்று போட்டுக் கொள்கிறார்கள். அதுதான் தப்பு.

    நானும் கம்பனின் ரசிகன்தான். நானும், எனது பதிவுகளில் கம்பனைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவை
    பதிவில் தங்கள் பதிவாக்கி நாங்கள்
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  9. தினமும் அனுமன் முன் சேவிக்கும் பாடல் என்றாலும் விரிவான அர்த்தத்துடன் இன்று தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நல்ல விளக்கத்துடன் அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு

  11. ஐயா வணக்கம். முதலில் ஒரு விளக்கம் . இப்பாடல் கம்பனால் இயற்றப் பட்டது அல்ல கம்பராமாயண பக்தர்கள் பாடியது என்று தமிழ் பேராசிரியர் டாக்டர். பூவண்ணன் அவர்கள் எழுதிய கம்பராமாயணத் தெளிவுரையில் கூறி இருக்கிறார். பாடலின் பொருளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் சுட்டா என்னங்க, நமக்கு தோசை ருசியாயிருந்தா சரி. தியாகய்யர் பாட்டை எம்எஸ் பாடினா என்ன, சுதா பாடினா என்ன, எதுவானாலும் சரியே.

      நீக்கு
  12. கம்பன்தான் கவிச்சக்கிரவர்த்தி ஆயிற்றே!

    பதிலளிநீக்கு
  13. ஐயா சில ஆலயங்களில் இந்த பாடலில் வரும் "ஆருயிர் காக்க ஏகி" என்ற வரியை "ஆரியர்க்காக ஏகி" என்று தவறாக எழுதி வைத்து உள்ளனர். இது தவறாக எழுதப்பட்டதா அல்லது வேண்டுமென்றே எழுதப்பட்டதா? என்று தெரியவில்லை...எப்படி இருந்தாலும் இது கண்டிக்கத்தக்கது தானே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட பேதங்கள் பலவகைப் படும். ஆனாலும் இந்த தவறு எப்படி வந்தது என்று கண்டு பிடிப்பது சிரமம். வேண்டுமென்றே செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி தேவைதான். முடிந்த வரையில் எடுத்துக்காட்டுவோம்.

      நீக்கு