வெள்ளி, 3 மே, 2013

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

16 கருத்துகள்:

  1. ஈ பி காரர், டெலிபோன் காரர், ப்ளம்பர்....

    "மாறாதையா மாறாது...நாடும் நடப்பும் மாறாது..!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமும் மாறமாட்டோம். கடைசி பாராவை மீண்டும் ஒரு முறை தயவு செய்து படிக்கவும்.

      நீக்கு
  2. டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே ........!????????//

    பூ அழகு ..!

    பதிலளிநீக்கு
  3. நாம் நிஜ வாழ்க்கையில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தினம் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை சரியாய் சொன்னீர்கள். நீங்கள் கனவில் கண்டது நடக்குமானால், நம்மை வெல்ல யாராலும் முடியாது. ஆனால் அதை நடக்கவிட மாட்டார்கள் நம் அரசியல்வாதிகள். எனவே கனவாவது காண்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால் செய்ய முடிவது அது மட்டும்தான்.ஏதாவது ஒரு நாள் விடியும் என்று எதிர்பார்ப்போம்.

      நீக்கு
  4. நேர்மையாக மனதில் பட்டதை பதிந்திருக்கிறீர்கள். அருமை
    Search your lover here

    பதிலளிநீக்கு
  5. ஒரு நாள் விடியும் என்று எதிர்பார்ப்போம்...

    அதானே நம்மால் முடிந்தது! :(

    கனவு என்றாலும், நல்ல திட்டங்கள் பல சொல்லி இருந்தீர்கள்..... பயன்படுத்தினால் நல்லது.... ஆனால்.... இவர்களுக்குத் தான் சண்டை போடவும், பணம் சம்பாதிக்கவுமே நேரம் பற்றவில்லையே.....

    பதிலளிநீக்கு
  6. கனவு காண்பதிலும் நல்லது இருக்கிறதே என்று சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்...

    அழகான ரோஜாப்பூ...

    பதிலளிநீக்கு
  7. அரசியல் வாதிகள் பெரிய அளவில் கொள்ளை அடிக்கிறார்கள் மக்கள் தங்களது வேலைக்கு ஏற்ப அடிக்கிறார்கள் அப்புறம் எப்படி நாடு வல்லரசாகும். இந்தியா வல்லரசாவது அப்பாவி மக்களின் பகல் கனவில் மட்டுமே

    பதிலளிநீக்கு
  8. எல்லோருக்கும் இந்தியாவை நல்வழி படுத்தவேண்டும் என்று நினைப்பதுண்டு .ஆனால் யார் முயற்சி செய்வது என்பதிலே தான் இருக்கிறது.நாம் அனைவரும் சுயநலம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

    பதிலளிநீக்கு
  9. வருங்கால சந்ததியினரிடம் சற்று நம்பிக்கை வைப்போம். உங்கள் கனவு எல்லா இந்தியர்களிடமும் அவ்வப்போது தோன்றி மறையும் கனவுதான்.
    விடியும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    உங்களது எழுத்து திறமைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிந்து விட்டோம்.
    வெள்ளைக்காரனிடமிருந்த வாங்கிய சுதந்திரத்தை வீணடித்து விட்டோம்.
    அய்யா அவர்களை போன்ற பழைய காலத்து ஆட்கள் கனவிலாவது நல்லொதொரு பாரதத்தை காண்கிறார்கள்.
    இன்றைய மக்கள் சுயநல பிம்பங்களாகி விட்டார்கள்.
    எதையும் அக்செப்ட் செய்து கொண்டு எனக்கு என்னோட காரியம் ஆனால் போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
    இதை மாற்ற காந்தியின் அஹிம்சை போராட்டம் ஒத்து வராது.
    உண்ணாவிரதம் இருந்தால் எதிரே அமர்ந்து உண்ணும் விரதம் இருக்கும் கட்சிகள் இருக்கும் நாட்டில் ரத்த புரட்சி வெடித்தால்தான் நல்லதொரு மாற்றம் நிகழும்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  11. கனவு காணுங்கள் அது நனவாகும் என்பார் திரு அப்துல் கலாம் அவர்கள்.
    நல்லொதொரு கனவு கண்டிருக்கிறீர்கள்.
    சீக்கிரமே அது நனவானால் நல்லது
    எதிர்பார்ப்போம் அந்த நன்னாளை.
    பாசிடிவ் திங்கிங் எப்பொழுதும் நல்லது
    உங்கள் 20 பதிவுகளும் நல்லதொரு எண்ண வெளிப்பாடு
    நம் ஜனத்தொகையில் ஒரு 10% இப்படி நினைத்தாலே ஓரளவு மாற்றத்தை கொண்டு வந்து விடலாம்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  12. மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு பழமொழி உண்டு.
    ஆனால் அந்த மாற்றம் நம் நாட்டில் நெகடிவ் டைரக்சனில் சென்று கொண்டிருக்கிறது
    180 டிகிரி அதை திசை திருப்பி விட வேண்டும்
    இன்றைய இளைஞர் சமுதாயம் அதை செய்யும் சென்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  13. அழகிய ரோஜா மலர்ந்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு