போக்குவரத்து சிக்னல்கள் நகர வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சந்தடி மிகுந்த சாலை சந்திப்புகளில் அவைகளின் பங்கு மகத்தானது. ஆனால் எந்த தொழில் நுட்பமும் அவைகளை உபயோகிப்போரின் பொறுப்பான செயல்களினால்தான் பயன் பெறும்.
சிக்னல்களில் மூன்று கலர் விளக்குகள் இருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஒரு ஜோக்கில் ஒரு சிறுவன் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். அவனுடைய டீச்சர் இந்த டிராபிக் விளக்குகளின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார்.
அந்த சிறுவன் சென்ன பதில்: பச்சை விளக்கென்றால் நிற்காமல் போகவேண்டும். ஆரஞ்சு விளக்கென்றால் அதிக வேகத்தில் போகவேண்டும். சிகப்பு விளக்கு விழுந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு உச்சகட்ட வேகத்தில் போகவேண்டும் என்று சொன்னானாம்.
கோவையில் ஏறக்குறைய இது மாதிரிதான் நடக்கிறது. சட்டம் என்னவென்றால், ஆரஞ்சு விளக்கு விழும்போது நீங்கள் பாதி தூரம் வந்திருந்தால் போய் விடலாம். நிறுத்துக் கோட்டிற்கு இந்தப் புறம் இருந்தால் ஆரஞ்சு விளக்கு விழுந்தவுடன் வண்டியை நிறுத்திவிடவேண்டும்.
ஆனால் நடப்பது என்னவென்றால் அந்த பள்ளிச் சிறுவன் சொன்னது போல்தான். நீங்கள் சட்டப்பிரகாரம் ஆரஞ்சு விளக்கைப் பார்த்தவுடன் நிறுத்தினால் பின்னால் வருபவன் உங்கள் வண்டி மீது வந்து மோதுவான். கேட்டால் ஆரஞ்சு விளக்குதானே விழுந்திருக்குது. நீ போகவேண்டியதுதானே என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவான்.
சந்திப்புகளில் நிற்கும் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. லாரிக்காரர்களை "கவனிப்பது" தான் அவர்களின் முக்கிய வேலை.
நாங்கள், அதாவது உள்ளூர்க்காரர்கள் இதற்கு பழகிப் போய்விட்டோம். வெளியூரிலிருந்து கோவைக்கு புதிதாய் வருபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.
என் நண்பர் ஒருவர் சிக்னல் வரப் போகிறது என்ற உடனேயே வண்டியை ஸ்லோ செய்ய ஆரம்பித்து விடுவார். எங்கே ஆரஞ்சு வந்து விடுமோ என்ற நிலை இருக்குமாயின் ஓரம் கட்டி விட்டு, சிக்னல் ஆரஞ்சு வந்து, ரெட் வந்து, பச்சை வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பார். :)))
பதிலளிநீக்குTo Follow
பதிலளிநீக்குபல இடங்களில் ஜோக் உண்மையாகி விட்டது...
பதிலளிநீக்குஐயா, இது கோவையில் மட்டும் நடைபெறுவதில்லை. இங்கு சென்னையிலும் இதே கதை தான். எனது மகனின் சக நண்பர் (இங்கிலாந்தைச் சேர்ந்தவர்) ஒருவர் சென்னையில் மக்கள் Traffic Signal களில் நிற்காமல் செல்வதைப் பார்த்து, சொன்னாராம். உங்கள் மக்களுக்கு Colour Blindness உள்ளதென எண்ணுகிறேன். அதனால் எல்லா வண்ணமும் பச்சையாய் தெரிகிறது போலும் என்று!
பதிலளிநீக்குஎங்களூரிலும் இந்தச் சீக்குப்
பதிலளிநீக்குபரவிவிட்டது
பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சிரிப்பதா வருந்துவதா என்று தெரியவில்லை.அடுத்த தலைமுறைக்கு ஒரு தவறான செய்தியை விட்டு செல்கிறோம் என்பதை மட்டும் இந்த வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பதிலளிநீக்கு\\லாரிக்காரர்களை "கவனிப்பது" தான் அவர்களின் முக்கிய வேலை.\\என்ன சார் புதுசா இருக்கு, எப்பவும் லாரிக்காரங்கதானே இவங்களைக் கவனிப்பாங்க!!
பதிலளிநீக்குஅதுசரி இதென்னது வே ஷம் xyz அப்படின்னு?
நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் மாதிரி ஆகிவிட்டது என் நிலை. எல்லோரும் கற்பனைப் பெயரில் (உங்களைத்தவிர) உலா வரும்போது நான் மட்டும் ஏன் நிஜப்பெயரில் வலம் வரவேண்டும் என்ற சிந்தனையின் விளைவுதான் இந்த வேஷம்.
நீக்குநீங்க ரொம்ப சுலோ(Slow) ஐயா..
பதிலளிநீக்குஊரு ஒலகம் ஃபுல்லா(full) இப்படிதான் இருக்கு.. நீங்க தெரிஞ்சிக்காம விட்டுட்டீங்க..!!
இப்பலாம், வெளியூர் போனா அவங்க ரூல்ஸ(Rules) சரியா ஃபாலோ(Follow) பன்னிடுவாங்கலோனுதான் பயமா இருக்கு..
நல்லா சொன்னீங்க, அன்பு.
நீக்குஎல்லா ஊரிலும் இதே கதைதான். இன்னொரு விஷயமும் நடக்கிறது. ஒரு சிக்னல் இருக்கிறது; அதில் வண்டிகள் எதுவும் இல்லை என்றால் தங்கள் சிக்னல் வரும்வரை காத்திருக்க மாட்டார்கள் அப்படியே சிக்னலை தாண்டி விடுவார்கள்; மற்ற வண்டியோட்டிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லது நம் தலைஎழுத்து நன்றாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றாகச் சொன்னீர்கள். இன்று காலைதான் அப்படிப்பட்ட ஒரு இரு சக்கர வாகன ஓட்டீயைப் பார்த்தேன். எல்லோரும் சிகப்பு விளக்கில் நின்று கோண்டிருக்க அவன் மட்டும் எந்தக் கவலையுமில்லாமல் நேராகப் போய்விட்டான்.
நீக்குமக்களிடம் விழிப்புணர்வு இல்லை அய்யா. தாங்கள் மட்டும் நேரத்தில், செல்லவேண்டிய இடத்திற்கு போய்சேர்ந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள்.சுயநலம் மற்றும் பொறுப்பின்மை
பதிலளிநீக்கு