நான் சமீபத்தில் தமிழீழம் பற்றி ஒரு பதிவு போட்டதில் சில தவறுகள் செய்து விட்டேன். அதாவது ஈழ சரித்திரம் சரியாகப் படிக்காததினால் வந்த தவறுகள் அவை. ஆகவே ஈழச் சரித்திரத்தை படிப்போம் என்று சில புத்தகங்களைப் படித்தேன்.
அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை என்னவென்றால் இலங்கையில் தமிழினம் 2000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்வதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து போனவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இலங்கையை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆண்டுவிட்டு பிறகு சுதந்திரம் கொடுத்தபோது பல சிக்கல்களையும் விட்டுச் சென்றார்கள். அந்தச் சிக்கல்களில் தலையாயதுதான் தமிழ் ஈழப் பிரச்சினை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை.
பல கட்டங்களைத் தாண்டி இந்தப் பிரச்சினை இன்று ஒரு குழப்பமான நிலைக்கு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை எப்படி தீரும் என்பதை காலம்தான் சொல்லும்.
தான் செய்த தவறுகளை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை எல்லோருக்கும் இருப்பதில்லை.
பதிலளிநீக்குதங்களுக்கு இருக்கிறது.
உண்மையில் நீங்கள் மிகச் சிறந்த மனிதர்.
இது, உண்மையான, மனப்பூர்வமான பாராட்டு.
மிக்க நன்றி, பரமசிவம். என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையோர் என்னை மாதிரிதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குநல்லது... நன்றி...
பதிலளிநீக்குஇரண்டு மூன்று நாளாக உங்கள் தளமே இல்லை என்று வந்தது...!
புரிந்து தெளிந்து தந்த விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் படித்ததை பதிவாக வெளியிட்டு எங்களுக்கும் ஈழ வரலாறு சொல்லி தரலாமே .. எங்களுக்கும் குழப்பம் நீங்கும்.
பதிலளிநீக்குபுரிந்து தெளிந்து தந்த விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் படித்ததை பதிவாக வெளியிட்டு எங்களுக்கும் ஈழ வரலாறு சொல்லி தரலாமே .. எங்களுக்கும் குழப்பம் நீங்கும். - திரு
பதிலளிநீக்குசிங்கள மக்களின் வரலாறைக் கூறும் நூலான மகாவம்சம், கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில், விஜயனின் வருமையுடன்தான், இலங்கையில் மனிதக் குடியிருப்புகள் தொடங்கின என்று கூறுகிறது அய்யா. மேலும் இவ் விஜயன் மதுரையைச் சேர்ந்த அரசகுமாரி ஒருவரையே மணந்தான் என்றும் கூறுகிறது. திருமணத்திற்குப் பிறகு அரசகுமாரியோடு 18 கைவினைஞர் குழுக்களைச் சேர்ந்த 1000 தமிழ்க் குடும்பங்களும் இலங்கைக்கு இடம் பெயர்ந்ததாக கூறுகிறது. ஆகவே முதலாவது குடிபெயர்வு கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே நிகர்ந்ததாகக் கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குகி.மு.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, ஐந்து தமிழ்க் குடும்பங்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
எனவே மலையகத் தமிழரின் வரலாறு 1828 இல் இருந்துதான் தொடங்குகிறது என எடுத்துக் கொள்வது தவறாகும், மலையகத் தமிழரின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது என்பதையும், கி.மு. 5அஆம் நூற்றாண்டில் இலங்கையில் மனித் குடியிருப்புகள் தோற்றம் பெற்ற காலத்திலேயே, தமிழர் குடிறேயற்றங்களும் தொடங்கின என்பதுதான் வரலாறு சுட்டும் உண்மையாகும். அய்யா,
கடந்த ஆறு நாட்களாக தங்கள் வலைபக்கத்தில் எந்த பதிவும் இல்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை உணர்ந்து திருத்திக் கொள்பவர்களை காண்பது அரிது. நீங்கள் அந்த வகையை சேர்ந்தவர் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஐயா!
பதிலளிநீக்குமுந்தைய பதிவில் சிவகுமார் பெயரில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து வெளியாகி இருந்தது. இணைப்பும் அவரது தளத்திற்கு போனது அவரை தொடர்பு கொண்டேன். இந்த விஷயம் இன்னும் அவருக்கு தெரியவில்லை.அவரது பெயரில் வேறு யாரோ செய்திருக்கும் விஷமத் தனமான வேலை இது. என்று கூறினார். அவரது கணினியில் சிக்கல் இருப்பதால் உடனே மறுப்பு தெரிவிக்கும்படி என்னை கேட்டுக் கொண்டார்.உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டார். எனக்கு தெரியவில்லை. அதனால் நிச்சயமாக அந்த அநாகரீக வார்த்தைப் பிரயோகம் அவருடையதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலை தளம் அவருடையதல்ல.
நீக்குமிக்க நன்றி, முரளிதரன். மறப்போம். மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை.
நீக்குகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இருக்கிறது! சரி பரவாயில்லை. இந்த அளவுக்கவது யோசிக்கும் அளவுக்கு இறங்கி வந்ததுக்கு பாராட்டுகள்! வயதான உமக்கே இப்படி என்றால் இள வயதினர் தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று இருப்பது ஏன் என இப்ப புரியுது!
பதிலளிநீக்குi like this post..
பதிலளிநீக்குநானும் கூட உங்களின் வலைப்பதிவைத் தேடினேன். என்னடா சின்ன விடயத்துக்கெல்லாம் கடையையே பூட்டிக் கொண்டு போய் விட்டாரே, என்று கவலைப்பட்டேன். ஈழத்தமிழர்களில் பலருக்கு இந்தியாவை மட்டுமல்ல, தமிழ்நாட்டைப் பற்றி கூடத் தெரியாது. அதனால் நீங்களும் ஈழத்தமிழர்களைப் பற்றி அறியாமலிருப்பது தவறல்ல. ஆனால் உங்கள் பதில்களில் நீங்கள் கொஞ்சம் அடாவடித்தனம் காட்டினீர்கள் அதனால் வந்த விளைவு தான் இது போல் தெரிகிறது. ஈழத்தமிழர்களின் பூர்வீகம் மட்டுமல்ல, சிங்களவர்களின் பூர்வீகம் பற்றியும் பல கருத்துக்களும், ஆதாரங்களும் உண்டு. நானும் எனது பக்க கருத்துக்களை எனது வலைப்பதிவில் பதிவு செய்யவுள்ளேன்.
பதிலளிநீக்குநன்றி, வியாசன். ஈழ வரலாற்றை முழுமையாகப் படிக்க முயல்கிறேன். இதுவரை படித்தவைகளில் தெரிந்தது, கால ஓட்டம் செய்யும் மாற்றங்களை மனிதனால் தடுக்க முடிவதில்லை என்பதுதான்.
பதிலளிநீக்குஇன்றுதான் இந்தப்பதிவை பார்த்தேன். புரிதலுக்கு நன்றி,
பதிலளிநீக்குநான் ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்